கிராம வங்கிகளைக் காவு கொடுக்கிறதா ஒன்றிய அரசு?
இந்தியாவின் நிதித்துறையில் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராம வங்கிகள் (Regional Rural Banks) என மூன்று முக்கியத் தூண்கள் உள்ளன. இதில் 1975-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட கிராம வங்கிகள், இன்று 43 வங்கிகளாக ஒருங்கிணைக்கப்பட்டு 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 42 கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகின்றன. கிராம வங்கிகளின் தேவை என்ன? 1969 மற்றும் 1980-களில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டாலும், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு முழுமையான வங்கிச் சேவை என்பது எட்டாக்கனி யாகவே இருந்தது. வணிக வங்கிகள் நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டி ருந்த சூழலில், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய 1976-இல் தனிச் சட்டம் இயற்றப்பட்டு கிராம வங்கி கள் உருவாக்கப்பட்டன. உத்தரப்பிர தேசத்தின் மூர்தாபாத் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பிரதம கிராம வங்கி’ இந்தியாவின் முதல் கிராம வங்கியாக உதயமானது.
அமைப்பும் செயல்பாடும் கிராம வங்கிகள் முழுமையான பொதுத்துறைத் தன்மையுடன் தொடங்கப் பட்டவை. இதன் 100 சதவீத பங்குகளில் ஒன்றிய அரசு 50%, மாநில அரசு 15% மற்றும் அந்தந்த மாநில ஸ்பான்சர் வங்கி கள் 35% பங்குகளைக் கொண்டுள்ளன. இந்த வங்கிகள் ஒன்றிய அரசு, மாநில அரசு, நபார்டு (NABARD) மற்றும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்மட்ட இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப் படுகின்றன. இவை வழங்கும் மொத்த கடன்களில் 80% விவசாயம், சிறுதொழில் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற முன்னுரிமைப் பிரிவு களுக்கே வழங்கப்படுகின்றன.
கிராமப்புறப் பெண்களின் பொருளாதார சுத ந்திரத்தை உறுதி செய்வதிலும், விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கு வதிலும் இவ்வங்கி களின் பங்கு மகத்தானது. தனியார்மயத் தாக்குதல் கடந்த 2015-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின் மூலம், கிராம வங்கிகளின் பங்குகளைச் சந்தையில் விற்க ஒன்றிய அரசு வழிவகை செய்தது. அதன் முதற்கட்டமாக, தற்போது மிகச் சிறப்பாக லாபத்தில் இயங்கிக் கொண்டி ருக்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஹரி யானா கிராம வங்கிகளின் 49 சதவீத பங்குகளைப் பொதுப்பங்கு வெளியீடு (IPO) மூலம் விற்பனை செய்ய மார்ச் இறுதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள் ளது. வரும் 2027-க்குள் குறைந்தது 5 கிராம வங்கிகளின் பங்குகளைப் பட்டியலிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனையால் ஏற்படும் விபரீதங்கள் தற்போது இந்த மூன்று மாநில கிராம வங்கிகளும் அனைத்து நிபந்தனை களையும் பூர்த்தி செய்து போதிய லாபத்தையே ஈட்டி வருகின்றன. அப்படி இருக்கையில், நிதி திரட்டுவது என்ற போர்வையில் பங்குகளை விற்பது பாஜக அரசின் கார்ப்பரேட் சேவகத்தையே வெளிப்படுத்துகிறது. நிர்வாக ஆதிக்கம்: தனியார் முதலீடு நுழையும்போது, நிர்வாகக் குழுக்களில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஓங்கும். மக்கள் சேவை என்பது மறைந்து லாபம் மட்டுமே குறிக்கோளாக மாறும்.
சேவை பாதிப்பு: முன்னுரிமைக் கடன்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும். லாபம் தராத கிளைகள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அரசு நலத்திட்டங்கள் மக்க ளைச் சென்றடைவதில் முட்டுக்கட்டை ஏற்படும். தனியார் நிறுவனங்களுக்குப் பலன்: கிராம வங்கிகள் பலவீனமடையும் போது, அந்த இடத்தை சிறு நிதி தனி யார் வங்கிகளும் (Small Finance Banks), கந்துவட்டி பாணியிலான நிதி நிறுவனங் களும் ஆக்கிரமித்து எளிய மக்களைச் சுரண்டும் சூழல் உருவாகும். தொழிற்போராட்டமே தீர்வு கிராம வங்கிகள் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடையும் பொன்விழா காலத்தில், ஊழியர்களுக்கு அதிர்ச்சி யளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2015-லேயே இத்திட் டம் வந்திருந்தாலும், அகில இந்திய அள விலான ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பின் தொடர் போராட்டமே இதுவரை தடுத்து நிறுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடியைச் சந்திக்க, ஜனவரி 9-ஆம் தேதி (இன்று) தமிழ் நாடு, கேரளா மற்றும் ஹரியானா கிராம வங்கிகளின் ஊழியர்கள் ஒரு நாள் அடை யாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்ற னர். மார்ச் இறுதியில் நாடு தழுவிய வேலை நிறுத்தமும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் சாமானிய மக்களின் பொரு ளாதார அரணாக விளங்கும் கிராம வங்கி களைக் காக்க வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் கடமையாகும். இப்போராட்டத் திற்கு அனைத்து ஜனநாயகச் சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும். குறிப்பாக, தமிழக அரசு முன்னின்று தமிழ்நாடு கிராம வங்கியின் பொதுத்துறைத் தன்மையைக் காக்க ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.
