articles

img

புரட்சியின் காவலர்கள் கியூபப் பெண்கள் சம்மேளனமும் பாலின சமத்துவப் போராட்டமும்! - உ.வாசுகி

புரட்சியின் காவலர்கள்  கியூபப் பெண்கள் சம்மேளனமும் பாலின சமத்துவப் போராட்டமும்! 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்  உ. வாசுகி, 2025 அக்டோபர் 15 முதல் 17 வரை கியூபாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டையொட்டி நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர்,  கியூபாவில் பெண்கள் நிலை பற்றி வழங்கிய சிறப்புக் குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மாநாட்டையொட்டி, கியூபப் பெண்கள் சம்மேளனத் தின் தேசியப் பொதுச் செயலாள ரும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரு மான தெரெசா அமாரெல் பூவேயுடன் ஒரு  சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மனிதாபிமானப் பாலம் 

சிபிஎம் மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் (AIDWA) ஒரு தலை வரை வரவேற்பது சிறப்பு என்று கூறிய அவர், இந்தியாவில் கியூப ஒருமைப்பாட்டுப் பிரச்சாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் முன்னின்று நடத்தப்படுவதை நாங்கள் அறிவோம் என்று பாராட்டினார். “தாயகம் என்பது மனிதாபிமானம்” என்று புரட்சியாளர் ஜோஸ் மார்ட்டி கூறியதைச் சுட்டிக்காட்டி, உங்களது கட்சியும் அமைப்பும் பூகோள ரீதியாக வெகு தொலைவில் இருந்தாலும், ஒருமைப்பாடு மற்றும் மனி தாபிமானத்தின் மூலம் எங்களுக்கு மிக நெருக்கமாகத் தான் இருக்கிறீர்கள் என்றும் அவர் பாராட்டினார். 

புரட்சியைப் பாதுகாப்பதும் பெண்களின் முன்னேற்றமும் 

கியூபப் பெண்கள் நிலை, சம்மேள னத்தின் செயல்பாடு பற்றி நாம் நிறைய கேள்விகள் கேட்டோம். அதற்குப் பதி லளித்த அவர், தங்கள் சம்மேளனத்தின் முதல் மற்றும் முக்கிய கடமை, புரட்சியைப் பாதுகாப்பது தான் என்றும்; ஏனெனில், சோசலிச அரசின் கொள்கைகளால்தான் கியூபப் பெண்கள் முன்னேறி உள்ளனர் என்றும், இக்கொள்கைகள் பெண்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்றும் விளக்கினார். இக்கூட்டமைப்பு 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பெண்  களுக்கான சட்டமியற்றும் முயற்சிகளில் ஈடுபடுவது, அரசுக்கும் பெண்களுக்கும் இடையே பாலமாக இருப்பது, அன்றாடப்பிரச்  சனைகளைத் தீர்ப்பது, அரசுத் திட்டங் களைச் செயல்படுத்த உதவுவது ஆகியவை இக்கூட்டமைப்பின் பணிகள் என்று எடுத்துரைத்தார். 

சமூக நலன்கள்: விடுப்பு, கல்வி மற்றும் திறன்மேம்பாடு 

குழந்தைக்கு 15 மாதம் ஆகும் வரை சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு உள்ளது. தனியார் துறையிலும் இது கட்டாய மாகும். விடுப்பு அளிக்கும்போது தாய்க்கு முன்னுரிமை என்றாலும், குடும்ப நிலைமை கேற்ப, தந்தைக்கோ அல்லது இதர குடும்ப உறுப்பினருக்கோ கூட விடுப்பு வழங்கலாம். மேலும், 15 மாத விடுப்புக்கும் மேற்பட்டு குழந்தைக்கு உடல் நலமில்லை, தாயின் கவனிப்பு அவசியம் என மருத்துவச் சான்றிதழ் இருந்தால், கூடுதல் விடுப்பு அளிக்கப்படுகிறது. இது குழந்தைக்கு 17 வயது முடியும் வரை அமலில் இருக்கும். விடுப்பு முடிந்து அவர் திரும்பி வரும் வரை  அவருடைய பணியிடம் அவருக்காக வைக்கப்பட்டிருக்கும். 

ஆதரவற்றவர்களுக்கு, கர்ப்பிணி களுக்கு, முதியவர்களுக்கு இலவச உணவு, மருந்து போன்றவை வழங்கப்படுகிறது. வீடு வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற முடியவில்லை என்றாலும், தேவைப் படுபவர்களுக்கு வாடகை இல்லாத தங்கு மிடம் போன்ற உதவிகளைச் செய்கிறோம்.  

கியூபாவில் 5 வயதிலிருந்து கல்வி கட்டா யம்; படிப்புக்கு எவ்விதச் செலவும் கிடையாது. அரசின் சமூக நலத்திட்டங்களின் பலன்கள் பெண்களைச் சென்றடைவதை உறுதிப் படுத்துகிறோம். திறன் வளர்ப்பு மற்றும் தொழில் பயிற்சி அளிப்பதாகவும், அது  பெண்களுக்கான பாரம்பரியத் தொழில் கள் மட்டுமல்லாமல், வாகனங்கள் பழுது பார்ப்பது, தச்சு வேலை, இயந்திர பராமரிப்பு, பல்வேறு மொழிகள் பயில்வது போன்ற பயிற்சிகளையும் நடத்துவதாகவும் அவர் விளக்கினார். 

அதிகாரத்தில் பெண்கள்: உலக அளவில் இரண்டாவது நிலை 

அதிகாரப் பதவிகளில் கியூபப் பெண் களின் நிலை குறித்த தகவல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. உழைப்புப் படையில் 45  சதவீதம் பெண்கள் உள்ளனர். பல்கலைக் கழகப் படிப்பில், அறிவியல், தொழில்நுட்பம் மருத்துவம், நிதி போன்ற துறைகளில் பெண்கள் முன்னேறிய நிலையில் உள்ள னர். வழக்கறிஞர், அரசு வழக்குரைஞர் பத விகளில் 80 சதவீதம் பெண்கள். நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர், நிதித்துறை தலைமை அதிகாரி ஆகியோரும் பெண்கள் தான். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 56.7 சதவீதம் பெண்கள். இந்த அளவுகோ லில் கியூபா, ருவாண்டாவுக்கு அடுத்ததாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள் ளது. அரசு தன் வருமானத்தில் 60 சதவீதத் தை சமூக நலத்திட்டங்களுக்காக செலவிடு கிறது. பெண்களுக்கு என்றும், இளம்பெண் களுக்கு என்றும் இரண்டு இணைய இதழ்கள் அமைப்பால் நடத்தப்படுகின்றன.

 ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம்: புதிய குடும்ப சட்டத் தொகுப்பு (FamilyCode)  

சமூகத்தில் ஆணாதிக்க மனப்போக்கை ஒழிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை  என்று ஒப்புக்கொண்ட அவர், இதற்குப் பல்முனை போராட்டங்களை நடத்துவதாக வும், தொழிற்சங்கக் கூட்டங்களில் விவா திப்பதாகவும் தெரிவித்தார். குடும்ப வன் முறை தடுப்புச் சட்டம், பணியிட பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் எனப் பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.  

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதி யாகக் கொண்டுவரப்பட்ட புதிய குடும்ப சட்டத் தொகுப்பின் (Family Code) சிறப்பு களைப் பெருமிதத்துடன் விளக்கினார். இதில், குழந்தையுடனான உறவு குறித்த மிக முக்கியமான மைல்கல்லாக, ‘குழந்தை யை தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது (Custody)’ என்ற பழைய கருத்தாக்கத் திற்குப் பதிலாக ‘குழந்தைக்கான பொறுப்பு (Responsibility)’ என்ற புதிய கருத்தாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில் வைத்திருப்பது என்ற முறையில், குழந்தை யின் விருப்பமோ, உரிமையோ கணக்கில் எடுக்கப்படாமல், குழந்தை பெற்றோரின் உடைமையைப் போலவே கருதப்படும் நிலை இருந்தது. ஆனால், குழந்தைக்கான பொறுப்பு என்ற கருத்தாக்கம் இணைக்கப் பட்டதன் மூலம், இந்தக் கண்ணோட்டத்தில் மாற்றம் வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், குழந்தை வளர்ப்பில் தாய், தந்தை இரு வருக்கும் பொறுப்புப் பகிர்வு உண்டு என்பது வலியுறுத்தப்படுகிறது. மேலும், வன்முறை யில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு, திருநர் அல்லது பாலியல் சிறு பான்மை உணர்வு கொண்ட சிறுவர், சிறுமி யை அங்கீகரிக்க மறுப்பதும் கூட வன்மு றை என்ற பிரிவு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.  

வீட்டு வேலைகளை ஆண் பெண் இருவரும் சமமாகப் பகிர்ந்து  கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளைப் பரா மரிக்கும் பணியைச் செய்பவர்களுக்குத் தொழிலாளர் என்ற அந்தஸ்து அளித்து அதற்கான உரிமைகள் சட்ட ரீதியாக்கப் பட்டன. குழந்தையின் பெயருடன், தாயின் பெயரையோ தந்தையின் பெயரையோ குடும்பம் விரும்பும் வரிசையில் முதலில் இட முடியும்.  

தன் பாலின (Same Sex) திருமணம் மற்றும் அத்தம்பதியருக்குக் குழந்தை தத்தெடுக்கும் உரிமை ஆகியவற்றைச் சட்டப்பூர்வமாக்கிய இந்தச் சட்டம் குறித்து, சுமார் மூன்றரை ஆண்டுகள் மக்கள் மத்தியில் விவாதம் நடத்தப்பட்டு, 25 முறை நகல் மாற்றி அமைக்கப்பட்டு, இறுதியாக வாக்கெடுப்பு முறையில் ஆதரவு பெற்று நிறைவேறியதாக அவர் குறிப்பிட்டார். குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப் படுத்துவதற்கு இச்சட்டம் உதவும் என்றும், சோசலிச அரசு அரசியல் உறுதியுடன் செயல்பட்டு இச்சட்டத்தைக் கொண்டு வந்தது என்றும் தேசிய பொதுச் செயலாளர் பெருமிதத்துடன் முன்வைத்தார்.  

கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம்  

கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்கள் நிலை குறித்துக் கேட்ட போது, 15 மாகாணங்களில் 6ல் கட்சியின் முதன்மைச் செயலாளர் (மாநிலச் செயலாளர்) பெண்கள் என்றும், கட்சியில் பெண் உறுப்பினர்கள் 44%, மத்திய கமிட்டியிலும் 44% பிரதிநிதித்துவம் உள்ளது என்றும் கூறினார். 1975-ல் நடந்த முதல் கட்சி மாநாட்டிலேயே, பாலின சமத்துவம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தியாஸ் கேனல் மத்திய கமிட்டியின் முதன்மைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவரது அரசியல் தத்துவார்த்தத் திறன்கள் மட்டுமல்ல, பாலின சமத்துவ உணர்வும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, கியூபப் பெண்கள் சம்மேள னம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு இடையே உறவு வலுப்பட வேண்டும் எனப் பரஸ்பரம் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.