மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கு தடை விதிக்காத உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
சென்னை, நவ.14 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில்: “காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாட கத்தில் உள்ள அரசு தொடர்ந்து முயற்சித்து வரு கிறது. அணை கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்வதற்காக கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டிருந்த நிலையில், கர்நாடக அரசு திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்து இருந்தது.
இந்த வழக்கை வியாழனன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு தடை விதிக்கா மல், இது சம்மந்தமாக தமிழ்நாடு அரசு தங்க ளுடைய நிலைபாட்டை காவிரி மேலாண்மை வாரி யம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் முறையிட்டு தீர்வு கண்டிட வலியுறுத்தியுள்ளது.
காவிரி நதிநீர் தாவா என்பது நூற்றாண்டு களைக் கடந்து நீடித்து வரக்கூடிய பிரச்சனை யாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வை உருவாக்கு வதற்காகத் தான் நடுவர் மன்றம் அமைக்கப் பட்டது. அந்த நடுவர் மன்றம் முதலில் இடைக் காலத் தீர்ப்பையும், பிறகு இறுதித் தீர்ப்பையும் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக 2017இல் உச்சநீதிமன்றமும் இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புகளில் காவிரி நதியின் நீரை பயன்படுத்தக் கூடிய கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், பாண்டிச்சேரி உள்ளிட்ட நான்கு மாநி லங்களின் ஒப்புதலை பெறாமல், எந்த ஒரு மாநில மும் காவிரியின் குறுக்கே புதிய அணைக் கட்டுகளையோ, புதிய நீர் தேக்கங்களையோ கட்டக் கூடாது என்று தெளிவாக இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அதனொரு பகுதியாக, கர்நாடக அரசு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்திட தொடர்ச்சியாக பலமுறை காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்றுக் குழுவில் அனுமதி பெற முயற்சித்த போதெல்லாம் தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து வந்தது. இந்நிலையில்தான் கர்நாடக அரசு இந்த திட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றத் தில் ஒப்புதல் கோரியிருந்த நிலையில், உச்சநீதி மன்றம் தமிழக அரசு கோரிய தடையை வழங்க வில்லை. இது கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணைக்கட்டு முயற்சிக்கு வலு சேர்த்து விடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயி களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உரிய முறையில் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கூட முறையாக தமிழ்நாட்டிற்கு கடந்த காலத்தில் வழங்கியது இல்லை. காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்சநீதி மன்றத்திலும் ஒவ்வொரு முறையும் முறை யிட்டுதான் தண்ணீரை பெற வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. மேகதாதுவில் புதிய அணை கட்டினால், தமிழ்நாட்டின் பாசன உரிமை முற்றிலும் பறிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும் காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.