articles

கிக் பொருளாதாரம் : தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சவால் - எஸ்.வீரய்யா

கிக் பொருளாதாரம் : தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சவால்

தெலுங்கானா மாநில சிஐடியு நடத்திய அண்மைய ஆய்வு, மிக வேகமாக வளர்ந்து வரும் ‘கிக் தொழிலாளர்களின்’ (Gig Workers) அதாவது, செயலி வழித் தொழிலாளர்க ளின் துயரமான வாழ்நிலையைப் பொது வெளிக்குக் கொண்டு வந்துள்ளது. உபேர், ஓலா, ஸ்விக்கி, ஜோமாட்டோ மற்றும் பிளிங்கிட் போன்ற செயலிகள் மூலம் பணிபுரி யும் தொழிலாளர்கள், எவ்வித குறைந்த பட்சப் பாதுகாப்பும் இன்றி மிகக் கொடூரமான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தெலுங்கானாவில் மட்டும் சுமார் 8 முதல் 10 லட்சம் தொழிலாளர்கள் இத்துறையில் உள்ளனர். இவர்களின் பணி என்பது முற்றி லும் நிச்சயமற்றது; எந்த நேரத்திலும் இவர்கள் செயலியில் இருந்து நீக்கப்பட லாம். தற்போதைய தொழிலாளர் சட்டங்க ளோ அல்லது புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களோ (Labour Codes) இவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு எவ்விதத் தீர்வையும் வழங்கவில்லை.

அடிமைத்தனத்தின் நவீன வடிவம்

இந்த கிக் பொருளாதாரம் என்பது இளை ஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் தரும் ஒரு முன்னேற்றமான படிநிலை என ஏகாதிபத்திய முதலாளித்துவப் பொரு ளாதார அறிஞர்கள் வாதாடுகின்றனர். செயலிகளின் உரிமையாளர்கள் தங்களின் கீழ் பணிபுரிபவர்களை ‘தொழிலாளர்கள்’ என்று அழைப்பதில்லை; மாறாக ‘பங்குதாரர்கள்’ (Partners) அல்லது ‘சுயேச்சையான ஒப்பந்ததாரர்கள்’ (Inde pendent Contractors) என அழைக்கிறார் கள். ஆனால் யதார்த்தத்தில் இவர்கள் நவீன கால அடிமைகளாகவே நடத்தப்படு கின்றனர். வேலை நேரத்தின் மீதான தன்னாட்சி (Autonomy) இருப்பதாகக் கூறப்படும் கவர்ச்சியான விளம்பரங்கள், உண்மையில் வேலையின்மையால் வாடும் இளைஞர்க ளைத் திசைதிருப்பும் தந்திரமே அன்றி வேறல்ல. செயலிகள் மூலம் நடத்தப்படும் இந்தக் கட்டுப்பாடு மிகவும் ஒருதலைப் பட்சமானது. தொழிலாளர்களுக்குத் தங்களின் மேலாளர்களிடம் புகார் அளிக்க வோ அல்லது குறைகளைத் தெரிவிக்கவோ எந்த ஒரு வெளிப்படையான செயல்முறை யும் கிடையாது. வேலை உறுதி, விடுப்பு, மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (PF) அல்லது ஓய்வூதியம் என எந்தவொரு சமூகப் பாதுகாப்பு வசதிகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

வருமான வீழ்ச்சியும்  பெருகும் சுரண்டலும்

தொடக்கத்தில் வாடிக்கையாளர்களைக் கவரவும், தொழிலாளர்களை ஈர்க்கவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கிய இந்த நிறுவனங்கள், இன்று கிக் தொழிலா ளர்களை ஈவிரக்கமின்றிப் பிழிந்து எடுக்கின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டை விட தொழிலாளர்களின் வருமா னம் பாதியாகக் குறைந்துள்ளது. ஆரம் பத்தில் 40 ரூபாயாக இருந்த ஒரு டெலிவரி கட்டணம் இப்போது 15 ரூபாயாகக் குறைக் கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 24 சவாரிக ளை முடித்தால் 450 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய நிறுவனங்கள், இப்போது அதனை 150-200 ரூபாயாகக் குறைத்துவிட்டன. மறுபுறம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, வாகனப் பராமரிப்புச் செலவு அனைத்தையும் தொழிலாளர்களே ஏற்க வேண்டியுள்ளது. இரவு நேரப் பணிகளுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதற்குப் பதிலாக, பகல் நேரத்தை விடக் குறை வான ஊதியமே வழங்கப்படுகிறது. உணவ கங்களில் காத்திருக்கும் நேரம், வாடிக்கை யாளர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்கள் என அனைத்து நெருக்கடிகளும் தொழிலா ளர்கள் மீதே சுமத்தப்படுகின்றன. வாடிக்கை யாளர்கள் அளிக்கும் தவறான புகார்கள் அல்லது செயலிகளின் அல்காரிதம் (Algorithm) செய்யும் குளறுபடிகளால் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி தொழிலா ளர்களின் கணக்குகள் முடக்கப்படுகின்றன.

அதிகாரத்துவமும் அல்காரிதக் கொடுங்கோன்மையும்

பல தளங்கள் இன்று ‘வெண்டர்கள்’ (Vendors) எனப்படும் இடைத்தரகர்களைத் தொழிலாளர்களுக்கு இடையே புகுத்தி யுள்ளன. இதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்குத் தொழிலாளர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தப்பிக்கின்றன. தொழிலாளர்கள் தங்கள் கணக்கை மீண்டும் தொடங்க மேலாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. அதுமட்டுமின்றி, நிறுவனங்களின் விளம்பர ஸ்டிக்கர்களைத் தங்கள் வாக னங்களில் ஒட்ட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த ஸ்டிக்கரில் ஒரு சிறு கீறல் விழுந்தால் கூட, அதனை மாற்றத் தொழி லாளர்கள் 5,000 முதல் 7,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் வாடிக்கையாளர்க ளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவ னங்கள், மழையில் நனைந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வழங்குகின்றன. விபத்துகள் ஏற்பட்டால் வாடிக்கையாளர்க ளுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் நிறுவ னங்கள், அடிபட்ட தொழிலாளர்களை அப்ப டியே நடுத்தெருவில் விட்டுவிடுகின்றன. பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தனிப்பட்ட தேவைக ளுக்கும் இந்த கிக் பொருளாதாரத்தில் இடமே இல்லை.

தொழிற்சங்கங்களுக்கான அறைகூவல்

ஏகாதிபத்திய பெருநிறுவனங்களின் லாப வெறிக்காக, ‘ஒரே நாடு, ஒரே வரி’ போன்ற ஏற்பாடுகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டவே பயன்படுத்தப் படுகின்றன. நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ஒரு பைசா கூட வழங்க முடியாது என இந்த நிறுவனங்கள் அறிவித்தது அவர்களின் கொடூர முகத்தைக் காட்டுகிறது. இந்தச் சூழலில், கிக் தொழிலாளர்களின் நிலை என்பது திசைகாட்டி இல்லாத கப்பலைப் போல நடுக்கடலில் தவிக்கிறது. இது வெறும் ஒரு துறை சார்ந்த பிரச்சனை அல்ல; ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கும் விடப்பட்ட சவாலாகும். தொழிலாளர்களை ‘சுயேச்சையானவர்கள்’ என்ற மாயைக்குள் சிறைவைத்து, அவர்க ளின் வர்க்க உணர்வைச் சிதைக்க முதலா ளித்துவம் முயல்கிறது. இந்த நவீன அடி மைத்தனத்தை முறியடிக்க, கிக் தொழிலா ளர்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டுவதும், அவர்களுக்குச் சட்டப்பூர்வமான உரிமை களைப் பெற்றுத் தருவதும் இன்றைய காலத்தின் அவசியமாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜனவரி 11, 2026