சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்காக முழங்கும் மாநாடு
இந்தியாவில் மோடி அரசாங்கம் வந்த பிறகு, வேலையின்மை என்பது வேறு வடிவம் பெற்றுள்ளது. கோடிக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், வேலை தேடித் தங்களது சொந்த மாவட்டங்களையும் மாநிலங்களையும் விட்டு வெளியேறும் அவலம் தொடர்ந்து அதிக ரித்துக்கொண்டே வருகிறது. நவதாராளமய கொள்கைகளால் வேலையின்மை மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. அதேநேரத்தில், வேலையின்மைக்கு நிகரான நிறைவற்ற வேலை நிலை உருவாகி வருகிறது. புதிய வேலை முறைகளின் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்தில் வேலை யின்மை அதிகரிப்பு, ஒப்பந்த வேலைமுறையின் விரிவாக்கம், அதிவேகமாக வளர்ந்துவரும் கிக் பொருளாதாரம் (செயலி வழி சுரண்டல் பொருளா தாரம்) மற்றும் செயலிமயமாக்கம் (Uberisation) எனப்படும் புதிய முறைகளால், இளைஞர்கள் நிலையற்ற வேலை முறைகளுக்குள் தொடர்ந்து தள்ளப்படுகின்றனர். இதனால் சமூக பாதுகாப்பு அற்ற வேலைகளும், குவியலான வேலையற்ற இளைஞர்களும் உலகம் முழுவதும் பெருமளவில் தற்போது உருவாகிக்கொண்டே வருகிறார்கள். வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நிலைமை களில் கடந்தகாலங்களில் பின்பற்றிய முறைக ளில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் உருவா கிக்கொண்டிருக்கின்றன. வேலை பகிர்வு, தேவைக் கேற்பக் கூட்டாக ஆட்களை வேலைக்கு எடுப்பது, இடைக்கால நிர்வாகம், நேரடியான பணத்திற்கு மாற்றாகப் பணரசீது வழங்கும் முறை, மற்றும் திறமைக்கேற்ற வேலை உள்ளிட்ட முறைகள் தற்போது உதயமாகி வருகின்றன. இதுபோன்ற புதிய வார்த்தைகளைக் காணும் போது, வேலைவாய்ப்பு முறையில் ஏற்பட்டுள்ள தாராளமயமாக்கலின் தீவிரம் தெரிகிறது. உதார ணமாக, படித்த இளைஞர்கள் போதிய ஊதியத்து டன் வேலை கிடைக்காமல், ஸ்விக்கி, ஜொ மோட்டோ, ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்களில் எந்த உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லாமல் தேவைக்கேற்ப வேலை செய்யும் முறையை நோக்கித் தள்ளப்படுவதால், நிறைவற்ற - பாதுகாப்பற்ற வேலை முறையின் கீழ் தானாக வந்துவிடுகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 4 முதல் 5 லட்சம் தொழிலாளர்கள் வரை இதுபோன்ற கிக் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் சென்னையில் மட்டும் 2.5 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டின் வேலையின்மை நிலை இந்தியா முழுவதும் வேலையின்மை பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. இந்தியப் பொருளாதார கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 2021-22 ஆண்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 58.6 சதவீதம். ஒட்டுமொத்த இந்தி யாவின் 2022-23 சராசரியான 57.9 சதவீதத்தோடு ஒத்திருக்கிறது. ஆனால் பெண்களின் பங்கு 40.7 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 37 சதவீதத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும், இன்னும் போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டின் வேலையின்மை 2022-23 ஆண்டு அறிக்கையின்படி 4.3 சதவீதம். இது தேசிய சராசரியான 3.2 சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது. இளைஞர்களின் வேலையின்மை விகிதம் (15-29 வயது) 2022-23 இல் 17.5 சதவீதமாக உள்ள நிலையில், தேசிய இளைஞர்களின் சராசரி யான 10.2 சதவீதத்தைவிட மிக அதிகமாக உள்ளது. இது கவலைக்குரிய விஷயம். வேலைக்குச் செல்லும் முதியவர்களைவிட, 25 வயதிற்குட்பட்ட இளம்தலைமுறையினர்தான் வேலையிழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு எதிர்காலம் குறித்துக் கவலையில் உள்ளனர். இந்தியாவில் அதிகப் பட்டதாரிகளை உருவாக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது - ஆண்டுக்குச் சுமார் 10 முதல் 12 லட்சம் பேர் பட்டம் பெறுகின்றனர். அதே நேரத்தில், பட்டதாரி இளைஞர்களின் வேலை யின்மை 16.3 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 13.4 சதவீதத்தைவிட மிக அதிகம். தொடர்ச்சியாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேக் இன் இந்தியா மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தாலும், அதிலிருந்து இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் முன்னேற்றம் அடையாமல் உள்ளது. வேலை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை களில் தொடர்ச்சியாகக் கொண்டுவரப்படும் ஒப்பந்த முறைகளால், முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் நிலையற்ற வேலை நிலை கொண்ட தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, ஐடி துறையில் தங்களின் வேலை நேரத்தைத் தாண்டியும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது - மீறினால் வேலை உத்தர வாதம் இல்லை. இதுபோன்ற சூழலில், அமைப்பு சார்ந்த வேலைகளுக்குச் செல்லும் ஆர்வம் புதிய தலைமுறை இளைஞர்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் சமூக பாதுகாப்பற்ற -நிலையற்ற வேலை நிலையை நோக்கிச் செல்லும் கட்டாயம் ஏற்படுவதால் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வேலையின்மையின் சமூக விளைவுகள் வேலையின்மை என்பது பொருளாதாரப் பிரச்சனையாக மட்டுமின்றி, ஆழமான சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுத்திருக்கிறது. படித்த இளைஞர்கள் வேலையின்மையின் காரணமாகப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது உள்ளிட்ட விளைவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புடன் கூடிய, படித்த படிப்பிற்கேற்ற வேலை வேண்டும் என்ற கோரிக்கையோடு இளைஞர்களை அணிதிரட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18ஆவது மாநில மாநாடு ஓசூரில் நடைபெறுகிறது.