தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு கருத்தரங்கம் மதுரையில் ஜி.ராமகிருஷ்ணனிடம் மார்க்சிஸ்ட் சந்தா ஒப்படைப்பு
மதுரை, செப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு கருத்தரங்கமும், மார்க்சிஸ்ட் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துராணி வரவேற்று பேசினார். ‘உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை சிதைக்கும் கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டு’ எனும் தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன், ‘மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம்’ என்ற தலைப்பில் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நூல்கள் வெளியீடு முன்னதாக மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஓய்ந்திருக்கலாகாது தோழா’ என்ற நூலை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் வெளியிட, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் பெற்றுக்கொண்டார். பாரதி புத்தகாலயம் சார்பில் ‘மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு’ என்ற நூலை சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் வெளியிட, தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் இதழ் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்டக் குழு 589 சந்தா, மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் 536 சந்தா, திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் 431 சந்தா, சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் 210 சந்தா, தேனி மாவட்டக் குழு சார்பில் 200 சந்தா என மொத்தம் 1966 சந்தாவிற்கான தொகை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 560ஐ ஜி.ராமகிருஷ்ணனிடம், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், மார்க்சிஸ்ட் பொறுப்பாளர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, ஜி.ராணி, டி.செல்லக்கண்ணு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன் நன்றி கூறினார்.