articles

தோழர் ஆர். ஜவஹர் மறைவு சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

தோழர் ஆர். ஜவஹர் மறைவு சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

சென்னை, செப். 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மாநி லக்குழு அலுவலக செயலாளராகவும் பணியாற்றிய தோழர் ஆர். ஜவஹர் உடல்நலக் குறைவால், செவ்வாயன்று காலமானார். அவரது மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மாநி லக்குழு அலுவலக செயலாளராகவும் பணியாற்றிய தோழர் ஆர். ஜவஹர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை யளிக்கிறது.  அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. பல்வேறு நிலைகளிலும் திறம்பட பணியாற்றியவர் தோழர் ஆர். ஜவஹர் ஆசிரியராக பணியாற்றியவர். மார்க்சிய - லெனி னிய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்ட அவர், தனது ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டவர்.  ஆசிரியர் இயக்கத் தலைவராக வும், கோவில்பட்டி தாலுகா செய லாளராகவும், மதுரை தீக்கதிர் நாளித ழிலும், பின்னர் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அலுவலக செயலாள ராகவும், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், மாநிலக்குழு அலு வலகத்தில் இயங்கும் ஏ. நல்லசிவன் நூலகத்தின் பொறுப்பாளராகவும் திறம்பட பணியாற்றியவர், தோழர் ஆர். ஜவஹர். இறுதி மூச்சு வரை கொள்கை உறுதி தனது இறுதி மூச்சுவரை மார்க்சிய - லெனினியக் கொள்கைகள் மீது உறுதி யுடன் இறுகப்பற்றியவர். அவரது மறைவு கட்சிக்கும், தோழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு. அவரது மறைவால் துயருற்றி ருக்கும் அன்னாரது மனைவிக்கும், மகன், மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த அனுதா பத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  தலைவர்கள் இரங்கல் தோழர் ஆர்.ஜவஹர் மறைவுக்கு கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், அர சியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள் ளனர்.