கம்யூனிஸ்ட் சித்தாந்தம் தேய்ந்து போகவும் இல்லை! கம்யூனிஸ்ட்கள் ஓய்ந்து போகவும் இல்லை!!
பழமைவாதப் பாம்புகளும் பத்தாம் பசலி பல்லி களும் உலவும் பாஜக எனும் பாழடைந்த பங்களாவின் மாநில துணைத் தலைவர் பேரா சிரியர் கனகசபை என்பவர் இல்லாத தன்னுடைய மூளையை தேய்த்து தேய்த்து ‘கம்யூனிஸ்ட்களின் சித்தாந்தம் நம் நாட்டில் தேய்ந்து போவது ஏன்?’ என்று தொடர் கட்டுரை ஒன்றை தினமலர் ஏட்டில் எழுதியுள் ளார். அதற்குப் பெயர் ‘சிந்தனைக் களம்’ என்கிறார்கள். ‘நிந்தனைக்களம்’ என்று வேண்டுமானால் பெயர் வைக்கலாம். இந்தக் கட்டுரையில் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து அவர் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. கம்யூ னிஸ்ட்களுக்கு எதிராக காலம் காலமாக அழுகிப் போன முதலாளித்துவ எழுத்தாளர்கள் சிலர் எழுதிய புத்த கங்களில் கூறப்பட்டுள்ள புளுகு மூட்டைகளையே அவிழ்த்துவிட்டுள்ளார்.
காந்தியை கொலை செய்த கருத்தியல் எது? பாஜகவை எதிர்க்கும் பல அரசியல் கட்சிகள் இருந்த போதும், அவர்களது சித்தாந்த எதிரிகள் கம்யூனிஸ்ட்கள் தான் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இந்தியா வில் சிறுபான்மை மக்களாக உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தான் எங்களது எதிரிகள் என்று அவர்கள் வெளிப்படையாகவே பல்வேறு தருணங்களில் கூறியுள்ளனர். ஆட்சியாளர்களின் கருத்துக்கு மாறுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை துன்புறுத்துவதும் அவர்களை கொலை செய்வதும் கம்யூனிஸ்ட்களின் வாடிக்கை என்று இல்லாத ஒன்றை பொல்லாத வகை யில் சொல்கிறார் இந்த ‘காருண்ய மூர்த்தி’. மகாத்மா காந்தியை படுகொலை செய்த கருத்தியல் எது? அகிம்சா மூர்த்தியையே படுகொலை செய்தது சகிப்புத் தன்மையின் உச்சம் போலும். காந்தியைப் படுகொலை செய்த கோட்சேயை தங்கள் குல குருவாக கொண்டாடு வது யார்? என்பதும், கோட்சேயின் குருமார்கள் யார் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
காந்தியை கொலை செய்தது மட்டுமின்றி, நூறுநாள் வேலைத் திட்டத்திலிருந்து அவருடைய பெயரையும் நீக்கியிருப்பது அவர்களது அடங்கா வெறுப்பின் அடையாளம் அல்லவா? வரலாற்று அறிவு சிந்துவெளி தூரம் கனகசபைக்கும், வரலாற்று அறிவுக்கும் கி.மீ. கணக்கில்கூட அல்ல, சிந்துச் சமவெளி அளவுக்கு தூரம் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும். மனித குல விடுதலைக்கான மார்க்சிய தத்துவத்தை தந்தவ ரும், இன்று வரை கனகசபைகளில் தூக்கத்தை தொலை த்துக் கொண்டிருப்போருமான காரல் மார்க்ஸ் பிறந்தது 1818 ஆம் ஆண்டு. காலமானது 1883 ஆம் ஆண்டு. ஆனால், அவர் இந்தியாவில் கட்டமைப்பு உடைக் கப்பட வேண்டுமென்று 1953-இல் எழுதினாராம். அந்தப் புத்தகம் கனவான் கனகசபையிடம் மட்டும் உள்ளதாம். சரி. மார்க்ஸ் சொன்னதாக இவர் சொல்வதாவது உண்மையா? இந்தியாவின் பாரம்பரிய தொழில்க ளை ஆங்கிலேயர்கள் அழித்ததை மார்க்ஸ் விமர்சித் துள்ளார். ஆனால் பாரம்பரியம் கம்யூனிஸ்ட்களுக்குப் பிடிக்காததால்தான் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார் என்கிறார் இவர். சாதியக் கட்டமைப்பு இந்தியாவின் முன் னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது என்று கண்ட றிந்து சொன்னார் அந்த மாமேதை.
இப்போது புரிகிறதா அந்த மாமேதையின் மீது இவருக்கு ஏன் கோபம் கொப்பளிக்கிறது என்று. சாதியக் கட்டமைப்பை பாது காப்பதுதான் இவர்களது இயக்கத்தின் நோக்கம். அதை தகர்க்க வேண்டும் என்று அந்த மாமேதை சொன் னதை இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சீனாவில் மாவோவின் ஆட்சியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது சொத்துக்களை இழந்து, கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர் என்று போகிற போக்கில் அடித்துவிடுகிறார் இவர். வல்லரசு களின் வேட்டைக்காடாக இருந்த சீன தேசத்தை மக்கள் தேசமாக மாற்றியவர்கள் கம்யூனிஸ்ட்கள்.
நிலப் பிரபுக்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் சோவியத் புரட்சியைத் தொடர்ந்து, மக்கள் சீனத்தில் நடந்த புரட்சி மக்களுக்கு அதிகாரத்தை தந்தது. அங்கு, எளிய விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்க ளையும் சுரண்டிக் கொண்டிருந்த நிலப்பிரபுக்க ளின் கொட்டத்தை ஒடுக்கியது. அந்த நிலப்பிரபுக் களைத்தான் சொத்துக்களை இழந்தவர்கள் என்று சொந் தம் கொண்டாடி, கண்ணீர் வடிக்கிறார் கனகசபை. சீனப் புரட்சிக்காக கம்யூனிஸ்ட்கள் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல. 95 ஆயிரம் செஞ்சேனை வீரர்க ளோடு தொடங்கிய போர்ப் பயணம், முடிவுற்ற போது 45 ஆயிரம் பேரே மிஞ்சியிருந்தனர். நெடும்பயணம் என்றழைக்கப்படுகிற இந்த வரலாற்று நிகழ்வை ‘ஒரு தேசமே இடம்பெயர்வது போன்ற சரித்திர சாகசம்’ என்றார் மேல்நாட்டு பத்திரிகையாளரான எட்கர் ஸ்னோ.
இந்த பயணத்தின் போது, செஞ்சேனை வீரர்க ளுக்கு மாவோ அளித்த கட்டளைகளில் ஒன்று, ‘பயிர்க ளை அழிக்காதே, மக்களைத் தாக்காதே’ என்பதாகும். இன்றைக்கும் மக்களின் மதநம்பிக்கையை மதிக்கி றது மக்கள் சீனம். சீன அரசியல் சட்டத்தின் 36 ஆவது பிரிவின்படி, மத நம்பிக்கை சுதந்திரத்தை கையாண்டு வருகிறது. கடவுள் நம்பிக்கையை எதிர்க்கவில்லை. கடவுளை சந்தைப்படுத்துவதைத் தான் எதிர்க்கிறோம் என்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. கடவுளை வைத்து போலிச் சந்தை நடத்தி கலப்பட வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சோசலிசம் என்ற சொல்லே, எட்டிக் காயாய் கசப்பது இயல்பே. ஆனால் தனக்காகவும் கவலைப்பட கனகசபை இருக் கிறார் என்பதை அறிந்தால் கொடுங்கோலன் சியாங்கே ஷேக்-இன் கல்லறை கூட கண்ணீர்விடக் கூடும். இந்தியாவில் ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கூடாது. மன்னராட்சி முறையை அகற்றக் கூடாது. மன்னர்க ளுக்கு அளிக்கப்பட்ட மானியத்தை நிறுத்தக் கூடாது என்றெல்லாம் கலகம் செய்த இந்து மகா சபையின் இன்றைய வாரிசுகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் அறம் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது கம்யூ னிஸ்ட்களின் கம்பீரமான ஆயுதங்கள். தவறுகளை ஒப்புக்கொள்வதும், அதிலிருந்து படிப்பினை பெறுவ தும் கம்யூனிஸ்ட்களின் அரிச்சுவடிப் பாடம். மக்கள் சீனத்தின் கலாச்சாரப் புரட்சியின் போது, சில பிழைகள் நேர்ந்ததை அந்தக் கட்சியே ஒத்துக் கொண்டு, சரிசெய்து கொண்டது. இதுதான் கம்யூனிஸ்ட்களின் அரசியல் அறம்.
ஆனால் மகாத்மா காந்தியை கொலை செய்ததைக் கூட இந்துத்துவா கருத்தியல்வாதிகள் இன்றைக்கும் நியாயப்படுத்துகிறார்கள். வரலாற்றை திரிப்பது இவர்களுக்கு கை வந்த கலை. மகாத்மா காந்தி ஒரு துயரமான விபத்தில் இறந்து போனார் என்று பாஜக ஆளும், மாநில பாடப் புத்தகங்களில் எழுதி வைத்து, வர லாற்றையும் கொலை செய்பவர்கள் இவர்கள். கம்யூனிசம் தேய்ந்து போய் விட்டதாக இவர் கதறு கிறார். ஆனால், அமெரிக்க வல்லாதிக்கத்தின் கோர முற்றுகைப் பிடியில் இருந்தாலும், சுயம் இழக்காமல் சோசலிசத்தை உயர்த்திப் பிடிக்கும் சின்னஞ்சிறு நாடான கியூபாவிற்கு தடைகளை முறியடித்து, மக்கள் சீனத்தின் உணவு தானியக் கப்பல் போய்ச் சேர்ந்ததை இவர் அறிந்திருக்க மாட்டார். சோசலிசப் பயணத்தின் அனுபவங்களை உள்வாங்கி, சோசலிச சந்தைப் பொரு ளாதாரம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் இன்றைக்கு உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது மக்கள் சீனம். அமெரிக்கா அடாவடியாக வரிகள் போட்டாலும், போரை நான்தான் நிறுத்தினேன் என்று ‘போர்’ அடிக்கா மல் அனுதினமும் டிரம்ப் அரற்றினாலும், அதற்கு பதில் சொல்லக் கூட தெம்பின்றி, பதுங்குபவர்கள் யார் என்று உலகறியும்.
ஆனால் இன்றைக்கு அமெரிக்கா அஞ்சி நடுங்குகிற நாடாக மக்கள் சீனம் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் சோசலிசப் பொருளாதாரம் தான் என் பதை மநுபுத்திரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஓநாயின் ஜீவகாருண்யப் பேச்சு சோவியத் ரஷ்யாவில் எழுத்தாளர்கள் கொல்லப் பட்டதாக, பல புனைகதைகள் உண்டு. அதை அப்படியே வாந்தி எடுக்கிறார் கனகசபை. நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் உள் ளிட்ட மகத்தான முற்போக்கு சிந்தனையாளர்கள் படு கொலை செய்யப்பட்டது யாரால்? எந்த நச்சுக் கருத்தி யல் கூட்டத்தால்? இந்தக் கொலையாளிகள் இன்று வரை தண்டிக்கப்பட்டது உண்டா? அதிலும், கௌரி லங்கேஷை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மும்பை மாமன்ற உறுப்பினராக மாற்றி, அழகு பார்ப்பவர்கள் கருத்துரிமை பற்றி பேசுவது, ஓநாய் ஜீவகாருண்யம் பற்றி முழு நாள் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு சமம். ஒருவருக்கே அதிகாரம் என்பதுதான் கம்யூனி ஸ்ட்களின் வழக்கம் என்று இவர் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறார். இவர், மாநிலத் துணைத் தலைவராக உள்ள பாஜக என்பது ஒரு நிழல் அமைப்புதான். அதை உண் மையில் கட்டுப்படுத்துவது ஆர்எஸ்எஸ் என்ற பாசிச அமைப்புதான். அவர்கள் பல்வேறு பெயர்களில் 2500-க்கும் மேற்பட்ட அமைப்புகளை நடத்தி வருவ தாக அண்மையில் வெளிவந்த ‘கேரவன்’ ஏடு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கம்யூனிஸ்ட்கள் பின்பற்றுவது மக்கள் ஜனநாயகம்.
ஆர்எஸ்எஸ் பின்பற்றுவது திரை மறைவில் இருந்து இயக்குகிற இருட்டு அதிகாரம். இல்லை என்பாரா இவர்? டுபாக்கூர் வரலாறும் தியாக வரலாறும் கம்யூனிஸ்ட் அரசுகளால் இதுவரை 15 கோடிப் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என அடித்துவிடுகிறார் ஆசாமி. இந்தக் கருத்து கந்த சாமி எங்கிருந்து இதைப் பெற்றார் எனக் கேட்டால், பேரா சிரியர் ருடால்ப் ரம்பெல் ஆய்வு செய்து கூறியுள்ளார் என்கிறார். இவரைப் போலவே, அவரும் ஒரு டுபாக்கூர் பேராசிரியர்தான். 20 ஆம் நூற்றாண்டில் சோவியத் ரஷ்யாவில் 6.1 கோடிப் பேரும், சீனாவில் 3.5 கோடிப் பேரும் கொல்லப் பட்டதாக கூறுகிறார் இவர். நல்ல வேளை, அந்த இரு நாடு களிலும் இப்பொழுது மக்களே இல்லை. எல்லோரும் மாண்டுவிட்டார்கள் என்று சொல்லாமல் விட்டார். இரண்டாம் உலகப் போரின் போது, மாவீரன் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான செஞ்சேனை, உலக மானு டத்தின் ஒட்டுமொத்த எதிரியான பாசிச ஹிட்லரை முறிய டித்து, இப்பூவுலகை காத்தது. அந்தப் போரின் போது மட்டும், சோவியத் ரஷ்யா இரண்டு கோடிப் பேரை தியாகம் செய்தது. ரஷ்யா துரோகத்தையே வரலாறாகக் கொண்ட வர்கள், தியாகத்தை எவ்வாறு அறிவார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருணத்தில் தேவையே இல்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜப்பான் நாட்டு மக்களின் மீது அணுகுண்டுகளை வீசி, அப்பாவி மக்களை படுகொலை செய்ததே அதைப் பற்றி என்றைக்காவது எழுதியிருக்கிறாரா கனகசபை.
நாஜிகள், பாசிஸ்ட்டுகள் மீது பாசம் தன்னுடைய பட்டியலில் நாஜிக்கள் கொன்றதை விட கம்யூனிஸ்ட்கள் கொன்றது அதிகம் என்று நாஜிக்க ளுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார். அடுத்ததாக, நாஜிக் களும், பாசிஸ்ட்களும் செய்த பச்சைப் படுகொலை குறித்து தினமலரில் தொடரை எழுதுவாரா கனக சபை?. எப்படி எழுதுவார்....? இவர்கள் பாசிஸ்ட்களின் மீது பாசம் கொண்டவர்க ளாயிற்றே. இந்து மகாசபையின் தலைவரான பி.எஸ். மூஞ்சே, கொடுங்கோலன் முசோலினியை 1931 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ரோம் நகரில் சந்தித்தார். பாசிச பாணியில், இந்தியாவில் வெறி கொண்ட படையை உருவாக்குவது குறித்து முசோலினியின் ஆலோசனையை பெற்று வந்தார் மூஞ்சே. பாசிஸ்ட்க ளிடம் பயிற்சி பெற்று வந்தவர்களின் வாரிசுகள், கம்யூனிஸ்ட்கள் குறித்து உலகளவிலான அவதூறு குப்பைகளை உள்ளூர் பத்திரிகையில் அள்ளி வந்து கொட்டுவது வெட்கக் கேடானது. மார்க்சியமும், மதச்சார்பின்மையும் அந்நியத் தத்துவங்கள், மேற்கத்திய சரக்கு என்பார்கள் ஆர்எஸ்எஸ்-காரர்கள். ஆனால், அக்மார்க் அந்நியச் சரக்கான பாசிசத்தைப் பற்றி நிற்பவர்கள் இவர்கள். ஹிட்லர் யூத மக்களை இன அழிப்பு செய்தது போல, இந்தியாவில் சிறுபான்மை மக்களை வேட்டையாட வேண்டும் என்று வெறியூட்டுபவர்கள் இவர்கள். இவர்க ளுடைய குருமார்கள் சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்கள் மட்டுமல்ல, இவர்களின் மூலப் பிரதியான ஹிட்லர், முசோலினி போன்றவர்களும்தான்.
கம்யூனிஸ்ட் ஆட்சியில் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்த மேற்குவங்கம் சங்கிக் கூட்டம் மேற்குவங்கத்தில் தோழர் ஜோதி பாசு ஆட்சியின் போது, மரிச்ஜாப்பி தீவில் பட்டியலின மக்கள் கொல்லப்பட்டதாக தொடர்ந்து ஒரு பொய்யை பரப்பி வருகிறது. அதிலும், 17 ஆயிரம் பேரை கொன்று விட்டார்கள். என்றெல்லாம் கூசாமல் பொய்யுரைப் பார்கள். மரிச்ஜாப்பியில் உண்மையில் நடந்தது என்ன? என்ற புத்தகம் வெளியான பின்பும், அவர்கள் அந்த பல்லவியை நிறுத்தத் தயாராக இல்லை. பாரதி புத்தகாலயம் தமிழில் அந்த நூலை வெளியிட்டுள்ளது. ஆனால் கனகசபை இதையெல்லாம் படிக்க மாட்டார். அவர் படிப்பதெல்லாம், கருப்புப் புத்தகங்கள் மட்டுமே. இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, பல பகுதிகளில் கலவரங்கள் நடந்த போதும், கம்யூ னிஸ்ட்கள் ஆண்ட மேற்குவங்கம் அமைதிப் பூங்கா வாக திகழ்ந்தது. கலவரத்தை தூண்டிய பாஜகவி னரை காட்டுமிராண்டிகள் என்றழைத்தார் தோழர் ஜோதிபாசு. இவர்களின் தலைவர் வாஜ்பாய் எங்களை இப்படிச் சொல்லலாமா? என்று கேட்டதற்கு, வேறு பொருத்தமான வார்த்தை இருந்தால் சொல்லுங்கள், அழைக்கிறேன் என்று பதில் சொன்னவர் தோழர் ஜோதிபாசு. மேற்குவங்கத்தில் மட்டுமின்றி, கேரளத்திலும் மார்க்சிஸ்ட்கள் நிறைய கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார் கனகசபை. ஆர்எஸ்எஸ் அமைப்பினால் முழுவதுமாக பயிற்றுவிக்கப்பட்ட சுதீஷ் மின்னி, ‘நரக மாளிகை’ என்று ஒரு நூலை எழுதியுள்ளார். அதை கனகசபை படித்துப் பார்த்தால் நல்லது.
ஆர்எஸ்எஸ் நடத்துகிற சாகாக்களின் பால பாடமே சிறுபான்மை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்க ளுக்கு எதிராக விஷமூட்டி, வெறுப்பை வளர்ப்பதுதான் என்று அவர் விரிவாக எழுதியுள்ளார். நரக மாளிகை அம்பலப்படுத்தும் ஆர்எஸ்எஸ்-சின் கருப்புப் பக்கங்கள் ஆர்எஸ்எஸ் பரிவாரம் கால் வைக்கும் இடமெல் லாம், கலவர பூமியாக, மரணக் கிடங்குகளாக எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதை தம்முடைய சொந்த கிராமத்தின் அனுபவத்திலிருந்து விளக்கியுள்ளார் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர். கண்ணூர் மாவட்டத்தை ஆர்எஸ்எஸ் எப்படி கலவர பூமியாக மாற்றி யது என்று அவர் விரிவாக எழுதியுள்ளார். அந்த அமைப்புக் குள் எவ்வாறு தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்ப தையும், ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அதானி வகையறா தியான வகுப்பு சொல்லித் தருவதையும், பலிதானிகள் என்று சொல்லப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக பலியானவர்களின் வீட்டுப் பெண்க ளைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை என்பதை யும் அவர் எழுதியுள்ளார். தங்களது இழிநோக்கத்திற்கு பெண்களையும் கூட அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று அவர் குறிப் பிட்டுள்ளார். குஜராத் கலவரத்தின் போது, ஒரு தாயின் நான்கு குழந்தைகளை கழுத்தைப் பிடித்து செப்டிக் டேங்கிற்குள் தள்ளி கொலை செய்ததோடு, அந்த தாயையும் பாலியல் பலாத்காரம் செய்து அவரது தலை யில் பெட்ரோலை ஊற்றி எரித்ததை சக சங்கிகள் மகிழ்ச்சியோடு சொன்னதை அவர் மனம் வெதும்பி பதிவு செய்துள்ளார்.
ஒரு கர்ப்பிணியின் வயிற்றில் சூலத்தை குத்திச் சொருகி, உள்ளிருந்த கருவை வெளி யே எடுத்து அந்த சூலத்தில் சிசுவின் குடலை சொருகி ‘ஓம் காளி’ என்று கூச்சலிட்டதையும், ஒரு மாத குழந்தை யை தாயிடமிருந்து பறித்து ஆகாயத்தை நோக்கி வீசியெ றிந்து கொன்றதையும் அந்த அமைப்பில் கால் நூற்றா ண்டு காலம் செயல்பட்ட அவர் எழுதியுள்ளதை கண்ணீர் வழியாமல், படிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் தர்மத்தை போதிக்கிறது, வீரத்தை ஊட்டுகிறது என்றெல்லாம் இவர்கள் அள்ளிவிடுவது எத்தகைய வீரம்? எத்தகைய தர்மம்? என்பதை அறிந் தால், அதிர்ச்சியாக இருக்கிறது. இந்துக்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் உண்மையில், ஆர்எஸ்எஸ் என்பது இந்துக்களுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வழிசெய்த மண்டல் குழு அறிக்கையை செயல் படுத்த முயன்றபோதுதான் இவர்கள் ரத யாத்திரையை துவக்கி, ரத்த யாத்திரையாக மாற்றினார்கள். இவர்க ளது அழுக்குச் சித்தாந்தம் பெண்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களுக்கு எதிரானது. கம்யூனிசம் தேய்ந்து போய்விட்டதாக கனகசபை