articles

img

80-ஆம் ஆண்டு விழா வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் உலக தொழிற்சங்க சம்மேளனம்!

80-ஆம் ஆண்டு விழா வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் உலக தொழிற்சங்க சம்மேளனம்! 

1945 அக்டோபர் 3-இல் பாரீஸ் மாநாட்டில் உலக தொழிற் சங்க சம்மேளனம் (WFTU - World Federation of Trade Unions) நிறுவப் பட்டது. சர்வதேச தொழிற்சங்க இயக்கங்களை முதன்முறையாக ஒருங்கிணைத்த இந்த அமைப்பின் 80-ஆம் ஆண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உலகெங்கும் இதைக் கொண்டாடுகின்றனர்.  பிரதான கொண்டாட்டம் பாரீஸ் மாநகரில் 2025 அக்டோபர் 3-4இல் நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற் பட்டோர் கூடி வண்ணமயமான  பேரணியை நடத்துகின்றனர்.  ஒரு திருப்புமுனை  உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் உலக தொழிற்சங்க சம்மேளனம் நிறுவப் பட்டது ஒரு திருப்புமுனையாகும்.

நாஜி-பாசி சத்தின் தோல்விக்குப் பிறகு, சர்வதேச தொழி லாளி வர்க்கம் சாதகமான சூழ்நிலையை சந்தித்தது. தொழிலாளர்கள் உயர்ந்த அரசியல் விழிப்புணர்வுடன் சிறந்த அமைப்பை உரு வாக்கினர். தொழிலாளி வர்க்கம் எப்போதும் அடையாத உயர்ந்த, பரந்த அளவிலான சர்வதேச ஒற்றுமையை இது சாதித்தது.  முதல் பொதுச்செயலாளர் தோழர் லூயி சைலண்ட் கூறினார்: “உலக தொழிற்சங்க சம்மேளனம் என்பது ஒற்றுமை, பாசிச எதிர்ப்பு, அமைதி, காலனிய மக்களின் விடுதலை, சுரண்டும் ஏகபோகங்களுக்கு எதிரான போராட்டங்களின் குழந்தை.”  விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு  நிறுவப்பட்ட காலத்திலிருந்து உலக தொழி ற்சங்க சம்மேளனம் ஆசியா, ஆப்பி ரிக்கா, லத்தீன் அமெரிக்காவின் விடு தலைப் போராட்டங் களுக்கு தொடர்ச்சி யாக ஆதரவளித்து வருகிறது. இந்த பிராந்தியங்களின் தொழிற்சங்க இயக்கம் அதன் தலைமையில் செயல் படுகின்றன.

அகில ஆப்பிரிக்க மாநாடு, அரபு தொழிற்சங்கங் களின் சர்வதேச மகா சம்மேளனம் (ICATU), ஆப்பிரிக்க தொழிற் சங்க ஒற்றுமை அமைப்பு ஆகியவற்றை உரு வாக்கி ஆதரித்தது. இவை பிராந்திய ஒற்றுமையை ஆதரித்து, ஏகாதி பத்தியத்தை கண்டித்தன.  தொழில்வாரி சர்வதேச அமைப்புகள்  1949-இல் மிலான் மாநாட்டில் தொழில்வாரி சர்வதேச அமைப்புகளை (TUIs - Trade Union Internationals) உருவாக்க முடிவு எடுக்கப் பட்டது. குறிப்பிட்ட துறைகளில் சர்வதேச கம்பெனிகளின் தொழிலாளர்களை ஒருங்கி ணைக்க இவை உதவுகின்றன. தற்போது பத்து தொழில்வாரி அமைப்புகள் செயல்படுகின்றன - வேளாண்மை, வங்கி, கட்டுமானம், ஓட்டல்,  எரிசக்தி, சுரங்கம், பொதுச்சேவை, ஆசிரியர்,  போக்குவரத்து, ஓய்வூதியர் ஆகிய துறைகளில்.  வேலை நிறுத்த உரிமைக்காக போராட்டம்  வேலை நிறுத்தம் செய்வதன் மூலமாக வேலை நிறுத்த உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் நிலைப்பாடு.

ஆனால் சர்வ தேச தொழிற்சங்க கூட்டமைப்பு (ITUC - Interna tional Trade Union Confederation) வர்க்க சமரச தந்திரத்தை பின்பற்றுகிறது. எனவே நீண்ட போராட்டங்கள் வாயிலாக பெறப்பட்ட உரிமையை போராட்டங்கள் மூலமாகவே பாதுகாக்க முடியும்.  நவதாராள மயத்திற்கு எதிரான போராட்டம்  முதலாளித்துவத்தை ஒழிப்பதன் மூலமாக த்தான் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று உலக தொழிற்சங்க சம்மேளனம் கருதுகிறது. சோசலிச அரசை நிறுவி, அனைத்து சுரண்டலில் இருந்தும் சமூ கத்தை விடுவிக்கப் பாடுபடுகிறது.  2008 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியை முத லாளித்துவ அமைப்பின் அமைப்பு ரீதியான நெருக்கடி என்று முதலில் கூறிய அமைப்பு களில் இதுவும் ஒன்று. ஏகாதிபத்திய உலகமய கோட்பாடுகளுக்கும் நவதாராளமயத்திற்கும் எதிராக உலக தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்த சங்கங்கள் கடுமையான போராட்டங்களை நடத்தின. உலகெங்கும் கோடிக்கணக்கானோர் தெருக்களில் இறங்கிப் போராடுகின்றனர்.

 உலக வங்கியுடன் கூட்டுச்சேரும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு  மாறாக சர்வதேச தொழிற்சங்க கூட்ட மைப்பு நவதாராளமய கோட்பாடுகளை ஆத ரிக்கிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வர்த்தக அமைப்பு (WTO), பொரு ளாதார ஒத்துழைப்பு அமைப்பு (OECD), ஜி-20 ஆகிய ஏகாதிபத்திய ஏஜென்சிகளுடன் நெருக்க மான உறவு கொண்டுள்ளது. 2010இல் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநாட்டை சர்வ தேச நாணய நிதியத்தின் இயக்குநர் துவக்கி வைத்தார்.  ஏகாதிபத்திய சதிகளை எதிர்கொண்ட வரலாறு  துவக்கத்திலிருந்தே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய சக்திகள் உலக தொழிற் சங்க சம்மேளனத்தை அழிக்க முயன்றன. பிரிட்டிஷ் தொழிற்சங்க மாநாடு (TUC), அமெரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பு (AFL-CIO) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன.  உலக  தொழிற் சங்க சம்மேளன முன்னாள் பொதுச்செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் 1986-94 காலகட்டத்தை எதிர்ப்புரட்சி சக்தி களின் காலம் என்று குறிப்பிடுகிறார். யூரோ கம்யூ னிசம், பெரஸ்த்ரோய்க்கா போன்ற சீர்திருத்த முழக்கங்கள் மூலம் உறுப்பினர்கள் பலர் பிரிந்தனர். 1994 டமாஸ்கஸ் மாநாட்டில் உலக தொழிற்சங்க சம்மேளனத்தையே கலைக்கும் திட்டம் இடம்பெற்றது.

 புத்தெழுச்சியும்  தற்போதைய நிலையும்  2000 புதுதில்லி மாநாடு புத்தெழுச்சியைத் துவக்கியது. இந்திய தோழர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாடுகளில் மாநாட்டை நடத்த முக்கியப் பங்காற்றினர். பின்னர் 2005 ஹவானா, 2011 ஏதென்ஸ் மாநாடுகள் இரண்டு சக்திவாய்ந்த தூண்களாக அமைந்தன. 2016 டர்பன், 2022 ரோம் மாநாடுகள் நடந்தன.  ரோம் மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: கொரோனா தடைகளுக்கு மத்தியில் நடந்தது, எதிர்ப்புரட்சிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதை உறுதிப்படுத்தியது. தோழர் மாவ்ரிகோஸ் பதவி விலகினார். சைப்ரஸ் தலைவர் தோழர் பாம்பிஸ் கிரிட்சிஸ் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  முக்கிய மைல்கல் தற்போது 135 நாடுகளில் 13 கோடி உறுப்பி னர்களுடன் உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) செயல்படுகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை சர்வதேச மாநாடு தவறா மல் கூடுகிறது. பிராந்திய அலுவலகங்கள், தொழில்வாரி அமைப்புகள் திறம்படச் செயல்படுகின்றன.  கடந்த 80 ஆண்டுகளில் வர்க்கப் போராட்டப் பாதையில் மேற்கொண்ட பயணம் குறித்து உலக தொழிற்சங்க சம்மேளனம் பெருமை கொள்கிறது. உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் அதன் வர்க்க அடிப்படையிலான பிடிமானம் உயர்ந்துள்ளது.  

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங் கள்” என்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் இலக்கை அடைவதற்கான முக்கிய மைல் கல்லாக உலக தொழிற்சங்க சம்மேளனம் திகழ்கிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம், வர்க்கப் போராட்டம் என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்து முன்னேறுகிறது.  தோழர் மாவ்ரிகோஸின் வார்த்தைகளில்: “உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்க சர்வதேசியம் மிக முக்கியமானது. சகோ தரர்கள் என்ற முறையில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து முத லாளித்துவ அமைப்பை இறுதியாக தூக்கி எறி யும் பொது இலட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டும்.”  உலக தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைவது, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்பது தொழிலாளர் வர்க்க முற்போக்கு அமைப்புகள் என அங்கீகரிப்பதற்கான அளவுகோலாகும்! தமிழில்: ஆர். சிங்காரவேலு