articles

பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொன்ற ஆயுதங்களில் 37% இந்தியாவிலிருந்து! - எம்.எச்.ஜவாஹிருல்லா எ

பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொன்ற ஆயுதங்களில் 37% இந்தியாவிலிருந்து!” 

பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொன்ற ஆயுதங்களில் 37% இந்தியாவிலிருந்து!”  இஸ்ரேல் பயங்கரவாத நாடு, பாலஸ்தீனத்தில் நடைபெறுவது இன அழிப்பு என்று முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் நன்றி. ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 அக்டோபர் 7 முதல் கடந்த மாதம் வரை  அமெரிக்கா, இஸ்ரேலுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை  வழங்கியுள்ளது. பாலஸ்தீனம் பாலஸ்தீனர்களுக்கே  சொந்தம் என்று மகாத்மா காந்தி கூறினார். இதற்கு  மாறாக, ஒன்றிய அரசு செயல்படு கிறது. பாலஸ்தீன மக்கள் மீது  பயன்படுத்தும்  ஆயுதங்களில் 37 சதவீதம் இந்தியாவிலிருந்து செல்கிறது. அதானியின் தயாரிப்பில் இருந்து ட்ரோன்கள் செல்கின்றன. சென்னை துறைமுகத்தி லிருந்து இஸ்ரேலுக்கு எந்தப் பொருளும்  செல்லாமல் நிறுத்தும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்க வேண்டும். தமிழகமே பாலஸ்தீனத்துடன் நிற்கிறது. சுதந்திரப் பாலஸ்தீனத்திற்கு விரைவில் செல்வோம்.