ரூ.163,06,99,000
தான் நடித்த விளம்பரப் படங்கள் மற்றும் போனஸ் பணத்தில் 163 கோடி ரூபாயை லண்டனில் உள்ள வீடில்லாத குடும்பங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார், கால்பந்து ஆட்டக்காரர் மார்கஸ் ரேஷ்ஃபோர்டு. கோவிட் காலத்தில் சுமார் 230 கோடி ரூபாயை நிவாரண நிதியாகத் திரட்டி உதவி செய்தார். அதே காலகட்டத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சம் குழந்தைகளுக்கு உணவுக்கான ஏற்பாடு செய்தார். கொரோனாவின்போது கோடைக்கால விடுமுறையில் குழந்தைகளுக்கு மதிய உணவு இல்லை என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்தது. இதற்கு எதிராக ரேஷ்ஃபோர்டு பிரச்சாரம் செய்தார். ஆளுங்கட்சி எம்.பிக்கள் பலரே அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். தனது முடிவை மாற்றிக் கொண்ட அரசு, ஆறு வார விடுமுறைக்காலத்திற்கும் மதிய உணவைத் தர ஒப்புக் கொண்டது. இங்கிலாந்து தேசிய அணிக்கும், பார்சிலோனா கிளப் அணிக்கும் இவர் விளையாடி வருகிறார்.
