“குடியிருப்பவருக்கே அடிமனை சொந்தம்! உழுபவருக்கே நிலம் சொந்தம்!”
அறநிலையத் துறை நிலங்கள் பயனாளிகள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் மனு
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில், மடங்களுக்கு சொந்தமான நிலங் களை பயன்படுத்துவோரின் கோரிக் கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஏப்ரல் 16 புதனன்று தமிழக முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண் முகம், பொதுச்செயலாளர் சாமி. நட ராஜன் மற்றும் அடிமனை பயனாளி கள் சங்க மாநில நிர்வாகிகள் வ. செல்வம், எஸ்.துரைராஜ், எஸ்.குண சேகரன் ஆகியோர் சந்திப்பின்போது அறநிலையத்துறை அமைச்சரும் உடனிருந்தார். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல மைச்சர் உறுதியளித்தார். தமிழ்நாடு முழுவதும் கோயில், மடங்களுக்கு சொந்தமான நிலங்களைப் பயன் படுத்தும் பயனாளிகள் பல தலை முறைகளாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், இவற் றைத் தீர்க்க அரசு உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப் பட்டது. சங்கங்கள் சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் 9 பிரிவுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. இந்த கோரிக்கைகள் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டி முன்வைக்கப்பட் டுள்ளன; அவற்றின் சாராம்சம் வருமாறு:
1. வாடகை நிர்ணயம்
• கோயில் இடங்களில் வாடகை நிர்ணயம் தொடர்பான பிரச்சனைகள் மிகவும் முக்கியமானவை. அற நிலையத்துறை சட்டப்பிரிவு 34-ஏ என்பது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டு, நில வாடகை மதிப்புக்குப் பதி லாக நிலத்தின் விற்பனை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயிக் கப்படுவதால் பயனாளிகளுக்குப் பெரும் சுமை ஏற்படுகிறது. • நிலத்தின் விற்பனை மதிப்பில் வாடகை நிர்ணயிப்பதற்குப் பதிலாக நில வாடகை மதிப்பில் நிர்ணயிக்க வேண்டும். • குடியிருப்புகளுக்கான வாடகை விகிதத்தை 0.10-லிருந்து 0.05 ஆகக் குறைக்க வேண்டும் • வணிக வாடகைகளை மூன்று வகைகளாகப் பிரித்து நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும்: குடியிருப்போடு இணைந்த கடை களுக்கு 0.15, சிறு/குறு வணிகங் களுக்கு 0.20, பெரும் வணிகங் களுக்கு மட்டும் உயர்ந்த விகிதம் • வாடகை நிர்ணயக் கூட்டங் களில் பயனாளிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் • 1984-க்கு முன்பு இருந்தது போல் மேல்கட்டுமானங்களை விற்க, வாங்க முறையான பதிவு செய்ய வழி முறைகள் வேண்டும் இத்தகைய மாற்றங்கள் ஏழை, எளிய மக்களின் வாடகைச் சுமை யைக் குறைத்து, அதே நேரத்தில் கோயில் நிர்வாகங்களுக்கும் நியாய மான வருவாய் கிடைப்பதை உறுதி செய்யும்.
2. வரன்முறைப்படுத்துதல்
அறநிலையத்துறையின் கோயில் இடங்களில் உள்ள பய னாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவ துடன், சில இடங்களில் கோயில் இடங்கள் என்று கருதி வேறு வகை இடங்களில் உள்ளவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இத னால் பல குடியிருப்பாளர்கள் தேவையில்லாமல் நீதிமன்றங் களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. • 2400 சதுர அடி வரை அடிமனை களுக்கு நன்கொடை இல்லாமல் வரன்முறைப்படுத்த வேண்டும். • முன்தேதியிட்டு வாடகை நிர்ண யிப்பதை தவிர்க்க வேண்டும். •தற்போது பயன்படுத்து பவரையே வாடகைதாரராக ஏற்க வேண்டும். • அளவீடுகள் துல்லியமாக செய்யப்பட வேண்டும் • கோயில் இடம் அல்லாத இடங்களை முறையாக ஆய்வு செய்து அதற்கான ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் கூட்டு ஆக்கிரமிப்புகளை வரன் முறைப்படுத்துவதற்காக வெளி யிடப்பட்ட அரசாணை நிலை எண் 340 மற்றும் 13.8.2021 அன்று வெளி யிடப்பட்ட சுற்றறிக்கை எண் 37750-ன்படி, புதிதாக தங்களை வாடகைதாரர்களாக வரன்முறைப் படுத்திக் கொள்ள வரும் பயனாளி களுக்கு தளர்வுகள் அளிக்க வேண்டும்.
3. நிலுவை வாடகை சலுகைகள்
• குடியிருப்பாளர்களின் நிலுவை வாடகையை முழுமையாக தள்ளு படி செய்ய வேண்டும். • சிறு, குறு வியாபாரிகளுக்கு 1-2 தவணைகளில் செலுத்தும் வகை யில் சலுகை அளிக்க வேண்டும். • பெரும் வணிக நிறுவனங் களுக்கு கொரோனா காலத்திற்கு 50% தள்ளுபடி அளிக்க வேண்டும் • 2001-2007 காலகட்ட வாடகை உயர்வு ரத்து முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்.
4. பெயர் மாற்றம்
• வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றத்திற்கு நன்கொடை பெறக் கூடாது. • 2400 சதுர அடிக்குள் குடி யிருப்புகளுக்கு நன்கொடை விலக்கு வழங்க வேண்டும் • வணிக நிறுவனங்களுக்கு வியாபார தன்மைக்கு ஏற்ப நியாய மான நன்கொடை நிர்ணயிக்க வேண்டும்.
5. விவசாய நிலங்கள் குத்தகை
• “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற கோட்பாட்டை நடை முறைப்படுத்த வேண்டும். • நீண்டகால குத்தகை தாரர்களுக்கு சட்டப்படி “குத்தகை உரிமை பதிவு” வழங்க வேண்டும். • விளைச்சலில் 75:25 விகி தத்தில் மட்டுமே குத்தகை வசூலிக்க வேண்டும். • ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் • ஒருபோக சாகுபடியாக மாறிய நிலங்களுக்கு இருபோக குத்தகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும் • வறட்சி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் ஆண்டு களில் குத்தகை ரத்து செய்ய வேண்டும்.
6. அரசாணை 318 செயல்படுத்துதல்
• 2019-ல் வெளியிடப்பட்ட அர சாணை 318-ன் படி ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் • 600 ஏக்கர் அறநிலைய நிலங் களை அரசே விலை செலுத்தி வாங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். • உயர்நீதிமன்றத் தடைக்கு எதிராக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் 7. அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34 நடைமுறைப்படுத்துதல் • வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலை யிலும் நிலம் வழங்க வேண்டும்.
8. இனாம் நில விவசாயிகள் பிரச்சனைகள்
• 1960 ஆம் ஆண்டுகளில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பட்டா பெற்ற வர்களின் நிலங்களை ஏலம் விடும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். • இந்நிலங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்
9. வஃக்போர்டு இடங்கள் குறித்த பிரச்சனைகள்
• வஃக்போர்டு இடங்களில் குடி யிருப்போர், சாகுபடி செய்வோரின் பிரச்சனைகளைத் தீர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் - இக்கோரிக்கைகள் யாவும் பல தலைமுறைகளாக கோயில், மட நிலங்களை பயன்படுத்தி வரும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் நலன் கருதி முன்வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பயனாளிகளும் ஆலய நிர்வாகங்களும் சிறப்புடன் செயல்படும் வகையில் அரசு இக் கோரிக்கைகளை பரிசீலித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.