மேற்கு ஆசியா மீதான தாக்குதல்கள் உணர்த்திடும் உண்மைகள்!
மேற்கு ஆசியாவில் கடந்த பதினைந்து நாட்களில் நடந்த நிகழ்வுகள் மிகவும் வியக்கத்தக்கவைகளாகும். சிலர் அவற்றை பேரழிவு நிகழ்வுகள் என்றுகூட அழைக்கி றார்கள். இஸ்ரேல் திடீரென்று ஈரானிய நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள அணு செறிவூட்டல் மற்றும் உற்பத்தித் தளங்கள் மீது தாக்குதல் தொடுத்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் தொடங்கின. மூன்றாவது மற்றும் மிக முக்கியமான தளமான ஃபோர்டோ, பாதிக்கப்படாமல் இருக்கிறது. ஃபோர்டோ ஒரு மலை யின் ஆழத்தில், சுமார் 80 மீட்டர் நிலத்தடியில் இருப்பதா லும், இது வழக்கமான ஆயுதங்களால் ஊடுருவ முடி யாத இடத்தில் இருப்பதாலும், அதனை இஸ்ரேல் ராணு வத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே ஊடு ருவ வேண்டுமென்றால் அதனை அமெரிக்க ராணுவத் தின் கனரக பதுங்குகுழி குண்டுகளால் மட்டுமே முடியும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். இந்தக் கூற்றின் துல்லியம் சரிபார்க்கப்படாமல் இருந்தாலும், அமெரிக்கா நேரடியாகத் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதே அதன் உட்பொருளாகும்.
ஈரானை எதிர்கொள்ள முடியாத நிலையை உணர்ந்த இஸ்ரேல் ஈ
ரான்மீது தாக்குதல் தொடங்கியவுடனேயே அதனை தாம் நினைத்ததுபோல் எளிதாக வெல்ல முடியாது என்பதை நேதன்யாகு புரிந்து கொண்டார். ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்தால் அது மேற் கொள்ளும் எதிர்த் தாக்குதல்களைத் தம்மால் எதிர் கொள்ள முடியாது என்பதையும், தாம் மிகவும் மோச மான முறையில் தோல்வி கண்டு விடுவோம் என்பதை யும் இஸ்ரேல் தெளிவான முறையில் உணர்ந்து கொண்டது. எதிர்பார்த்ததைப் போலவே, ஈரான் வலுவான எதிர்ப்பை காட்டி எதிர்த் தாக்குதல்களை நடத்தியது. ஆரம்பத்தில் இருந்தே, அடையாளமான இரும்பு டோம் (Iron Dome) உட்பட இஸ்ரேலின் மிக வும் பெருமையாகக் கூறப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை களைத் (hypersonic missiles) தடுக்க முடிய வில்லை என்பது தெளிவாகிவிட்டது. ராணுவ யுத்த தந்திரங்களில் தங்களைக்காட்டிலும் ஈரான் விஞ்சி நிற்பதை ஒருசில நாட்களிலேயே இஸ்ரேல் அறிந்துகொண்டது. ஹைப்பர்சோனிக்ஸ் ஏவுகணைகளை ஈரானின் தந்திரமான ட்ரோன்கள் மிக எளிதாக எதிர்கொண்டதை பாதுகாப்பு ஆய்வா ளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். மேலும் ஈரான், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவில் உள்ள இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கி இருக்கின்றது. இதிலிருந்து இஸ்ரேலும் பின்னடைவைச் சந்தித்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. இழப்புகளில் இஸ்ரே லின் முழுமையான தெளிவின்மை காரணமாக, இந்த பின்னடைவுகளின் அளவைக் கண்டறிவது கடினம். ஆனால் வான் பாதுகாப்பில் இஸ்ரேலின் வெல்ல முடியாத தன்மை பற்றிய நீண்டகால சவடால் தகர்க்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, இனி தன்னால் மட்டும் ஈரானை எதிர்கொள்ள முடியாது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்கா வின் நேரடி உதவி தேவை என்பதை உணர்ந்தது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் ஆரம்ப கட்டத்தில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT- Nuclear Non-Proliferation Treaty) கீழ் ஈரான் தனது பாதுகாப்பு உறுதிமொழி களை மீறுவதாகக் குற்றம் சாட்டி இஸ்ரேல் தனது பிரச்சாரத்தை நியாயப்படுத்தியது. இத்தகைய குற்றச் சாட்டுகள் புதியவை அல்ல. இஸ்ரேல் இருபதாண்டு களுக்கும் மேலாக இவ்வாறு கூறி வருகிறது. இருப்பி னும், சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA- Inter national Atomic Energy Agency) வழக்கமான ஆய்வுகள் நடந்தபோதிலும், இந்தக் கூற்றுக்கள் ஒரு போதும் நிரூபிக்கப்படவில்லை. இதேபோன்றே இதற்கு முன்பும் ஒருமுறை இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றி பொய்யாகக் குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு பேரழிவு தரும் போரும் நடைபெற்று, இறுதியில் அது சதாம் உசேனின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தன. பின்னர் உலகம் அத்தகைய ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டது. இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டுகள் அடிப்ப டையில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. திசை திருப்பும் தந்திரம் இதிலிருந்து பின்வாங்காமல், இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்கிறது. சமீபத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஈரான் “போதுமான அளவு ஒத்துழைக்கவில்லை” என்று கூறி, அமெரிக்கா தலைமையிலான முழு மேற்கத்திய நாடுகளும், ஈரானை அணுகுண்டு வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று கூச்சலிடத் தொடங்கிவிட்டன. ஈரானுக்கு எதிரான இந்தப் பிரச்சாரம், இஸ்ரேலின் சொந்த அணு சக்தித் திட்டத்திலிருந்தும், ஆயுதமயமாக்கலை நோக் கிய அதன் தொடர்ச்சியான இயக்கத்திலிருந்தும் உலக ளாவிய கவனத்தைத் திசை திருப்பும் ஒரு தந்திரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
புவிசார் அரசியல் மேலாதிக்கம்- இஸ்ரேலின் அணுசக்தி ஏகபோகம்
அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கு ஆசியாவில் இஸ்ரேலின் அணுசக்தி ஏகபோகத்தைப் பாதுகாக்க விரும்புகின்றன. இஸ்ரேலின் அணுசக்தித் திட்டம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கட்டமைப்பி ற்கு முற்றிலும் வெளியே செயல்படுகிறது. எனவே எந்த வொரு சர்வதேச ஆய்வுகளிலிருந்தும் அது தப்பிக்கி றது. இதற்கு நேர்மாறாக, ஈரானிடம் அணு ஆயுதங்கள் கிடையாது- அதேபோல் அது ஆயுதமயமாக்கல் திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. இது ஈரானின் சொந்த கூற்று மட்டுமல்ல. இதை சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி மற்றும் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோர் உறுதிப் படுத்தியுள்ளனர். அப்படியானால், ஈரானுக்கு எதிரான பிரச்சாரம் உண்மையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மீறல்கள் பற்றியது அல்ல. இது, அடிப்படை யில் ஒரு புவிசார் அரசியல் உத்தியாகும். மேற்கு ஆசி யாவின் எரிசக்தி வளம் மிக்க பிராந்தியத்தில், மேலா திக்கத்தைப் பெறுவதற்கான ஒரு தந்திரமான நடவ டிக்கையேயாகும். அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஈரான் இந்தப் பிராந்தி யத்தில் அமெரிக்க-இஸ்ரேல் அச்சின் நிகழ்ச்சி நிரலுக்கு மிகவும் நிலையான தடையாக இருந்து வருகிறது.
சியோனிசத்தின் உண்மை முகம் - பாலஸ்தீன அழிப்பு
அதேசமயத்தில், சியோனிசத்தின் உண்மையான முகம் உலகிற்கு மேலும் மேலும் தெளிவாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. சியோனிச இஸ்ரேலிய அரசின் பிரதான நோக்கம் பாலஸ்தீன பிரதேசங்களை பூண் டோடு அழிப்பதாகும். இவர்களின் இனப்படுகொலை திட்டம் இப்போது 56,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவார்கள். காசாவில் ராணுவத் தின் கட்டுப்பாட்டின்கீழ் உணவு உதவி அளிக்கப்பட்டு வருவதால், காசா இப்போது முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு பஞ்சத்தின் விளிம்பில் இருக்கிறது. பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை செய்யப்படு வது ஐ.நா. சாசனத்தை மட்டுமல்ல, சர்வதேச சட்டத் தின் ஒவ்வொரு தரத்தையும் மீறுவதாக ஒப்புக்கொ ண்டு, சில மேற்கத்திய நாடுகள் லேசான மறுப்பு சைகை களைக் காட்டினாலும், பாசாங்குத்தனம் இன்னும் அப் பட்டமாகவே உள்ளது. காசாவிலும் அதற்கு அப்பாலும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் சியோனிசத்துக்கு மிகவும் தீவிரமான வக்காலத்து வாங்குபவர்களுக்குக் கூட நியாயப்படுத்த முடியாததாகிவிட்ட நிலையில், ஜி.7 அறிக்கை இன்னும் அபத்தமாக இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை நிலைநிறுத்துகிறது.
டிரம்ப்பின் அதிகாலை அறிவிப்பும், போர் நிறுத்தமும்
இந்தப் பின்னணியில், டொனால்டு டிரம்பின் கீழ் அமெரிக்கா, நிலைமையை தீவிரமாக்கத் தலை யிட்டது. நாம் குறிப்பிட்டுள்ளபடி, கடுமையான குண்டு வீச்சுகள் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிரான அதன் இராணுவ நோக்கங்களை இஸ்ரேல் நிறைவேற்றத் தவறிவிட்டது. ஒரு வியத்தகு நடவடிக்கை தொடங்கப் பட்டது, இதனால் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப்பின் அறிவிப்பு அதிகாலையில் வந்தது. எனினும், இப்போதும் கூட, அமெரிக்காவால் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடிய வில்லை. உண்மையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முன் அளித்த சாட்சியத்தில், ஃபோர்டோவில் உள்ள ஈரானின் சுத்திகரிப்பு வசதிகளுக்கு சரிசெய்ய முடி யாத சேதம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியிருக்கிறது. முக்கியமாக, இதுபோன்ற தாக்குதலைத் தொடர்ந்து வரும் எந்த கதிர்வீச்சு கையொப்பமும் கண்டறியப்படவில்லை. ஆனால் இஸ்ரேலால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது, மேலும் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் பொதுக் கருத்தைக் கருத்தில் கொண்டு, (சமீபத்திய ராய்ட்டர்ஸ் கணக்கெ டுப்பு வெளிப்படுத்தியது போல்) அமெரிக்காவிற் குள்ளும் கூட, பல நாடுகளின் அரசியல் தலைவர்களின் முணுமுணுப்புகளில் பிரதிபலிக்கும் வகையில், ஜனாதிபதி டிரம்ப் அமைதிக்கான ஒரு சிறந்த முயற்சி யாக, போர் நிறுத்த அறிவிப்பை செய்ய வேண்டி இருந்தது. இவ்வாறான போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும்கூட தாக்குதல்கள் மற்றும் எதிர்த் தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெற்றபோதிலும்கூட, போர் நிறுத்தம் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் ராணுவ வல்லமை குறித்து சந்தேகங்கள் அதிகரித்துவரும் நிலையில், அனுபவப்பூர்வமாக இஸ்ரேலின் ஆக்கி ரமிப்பை எதிர்கொண்ட சக்திகளான, காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா, ஏமனில் ஹவு திகள் மற்றும் தற்போது ஈரான், இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்துத்தாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள் ளன. இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் இருப்பதை அவை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டி ருக்கின்றன.
மவுனமான நரேந்திர மோடி
எனினும், போர் நிறுத்தம் அல்லது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே டிரம்ப் அறிவித்த மிகவும் பரபரப் பான ஒப்பந்தத்திற்கு அடிப்படையான, அடிப்படை அல்லது பிணைப்பு விதிமுறைகள் எதுவும் இல்லாத தால், அடிப்படை பதற்றங்கள் மேற்பரப்புக்கு அடியில் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதன் விளைவாக, இப்பகுதி நிச்சயமற்ற தன்மையில் சிக்கியுள்ளது. உலகையே உலுக்கியுள்ள இந்த நிகழ்வுகள் குறித்து, நரேந்திர மோடி எதுவும் கூறாது, மிகவும் வருத்தப்படத்தக்க ஒரு நபராக மாறிவிட்டார். இந்த மோதல்கள் குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதைக் கண்டறிவது கடினம். காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதியாகக் கண் டிக்கவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐ.நா. சாசனம் மற்றும் பிற சர்வதேச சட்டங்களை வெளிப்ப டையாக மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராக எதுவும் கூறாது மவுனமாக இருந்து வருகிறது. இந்தி யாவின் பாரம்பரிய மரபைக் கருத்தில் கொண்டு பார்க் கும்போது இந்த மவுனம் மிகவும் பரிதாபகரமான தாகும்.
ஏகாதிபத்தியத்துக்கு உடந்தையான இந்தியா
அணிசேரா இயக்கத்தில் ஒரு காலத்தில் முன்ன ணிக் குரலாக, காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தி யத்தை பெருமையுடன் எதிர்த்து நின்ற நாடாக, ஐ.நா. சாசனத்தை நிலைநிறுத்துவதற்காக ஆர்வத்துடன் வாதிட்ட நாடாக இருந்த இந்தியா, மோடியின் கீழ் முழு மையான அளவில் மவுனம் கடைப்பிடிப்பதுடன், ஏகாதி பத்தியத்திற்கு உடந்தையாக உள்ள நாடாகவும் மாறிப்போயுள்ளது. ஈரான் மீதான அப்பட்டமான தாக்குதல்களுக்குப் பிறகும், மோடியின் ஒரே சைகை ஈரானிய ஜனாதிபதி யை அழைத்து பதற்றத்தைத் தணிக்க வேண்டுகோள் விடுத்திருப்பது மட்டும்தான். இந்தப் பின்னணியில், நம் முன் உள்ள பணி தெளிவாக உள்ளது. அமைதி, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்புகளை எப்போதும் நிலை நிறுத்தி வரும் இந்திய மக்களை நாம் அணிதிரட்ட வேண்டும். போர் வெறியர்கள் மற்றும் ஆக்கிரமிப்பா ளர்களின் செயல்களை மூழ்கடிக்கும் ஒரு குறியீடாக அமைதி மாறட்டும். ஜனநாயகம் மற்றும் மதச்சார் பின்மை மீதான தாக்குதல்களை எதிர்ப்பதில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் நமது அடையாளமாக மாறி இருப்பது போல, உலகளவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கான அறிக்கையாக ஐ.நா. சாசனம் மாறட்டும்.