articles

img

மெல்லப் பரவும் கலாச்சார தீம்பொருள் - பி.தட்சிணாமூர்த்தி

அனைத்து வாழ்வியல்  தளங்களிலும் ஆர் எஸ் எஸ்-இன் ஊடுருவல்அதிகரித்து வருகிறது. ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சா ரக்குகள் பிஜேபி-மூலம் அரசியல் களத்திலும் விஎச்பி, பஜ்ரங் தள், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், வனவாசி கல்யாண் ஆஷ்ரம்,   என ஐம்பதிற்கும் மேற்பட்ட கிளை அமைப்புகளின் மூலம் வெவ்வேறு அரங்கங்களில்  செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை, மும்பை, கல்கத்தா, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள் உள்பட நாட்டின்  முதல் நான்கு அடுக்கு நகரங்களில் எழுத்தாளர்கள், பத்திரிகையா ளர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழிலாளர் கள், கலைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அறிவுசார் தளங்களில் ஊடுருவி அந்தந்த தளங்களை வசப்படுத்த முயற்சித்து   வருகின்றனர். ஆர்எஸ்எஸ்-  மேல்மட்ட சுயம்சேவக்குகளுக் கென தனித்தனி முக மூடிகள் உண்டு. அடல்பிகாரி வாஜ்பாய், தருண் விஜய் போன்ற ஆர்எஸ்எஸ் அறிவு ஜீவிகளுக்கு மென்மையான முகங்கள் அல்லது மிதவாத முகங்கள் (மாடரேட் மாஸ்க்) உண்டு. ஆயி னும் ஆர் எஸ் எஸ்-தான்  எங்கள் ஆன்மா என்று இவர் கள் கூறுவார்கள்.  எச்.ராஜா, சாத்வீ பிரக்யா இப்போது நூபுர் சர்மா வரை கடுமையான (டெர்ரர் மாஸ்க்) முகங்க ளும் உண்டு. ஆர்எஸ்எஸ்-ஆல் நிர்ணயிக்கப்படும்  மாஸ்க்குகள் இவை.  டெர்ரர் மாஸ்க்குகள் தங்கள் தீக்கங்கு நாக்குகளால் சமூகங்களுக்கிடையே வெளிப் படையாக கலகத்தை பற்ற வைக்கும். பேபி மாஸ்க்கு களின் வேலைகள் மயிலிறகால் வருடிக்கொடுப்பது போல  இருக்கும்.

மத்திய இடதுசாரி, மத்திய வலதுசாரி படிப்பாளி கள் மத்தியில் இந்த பேபி மாஸ்க்-கள் ஒரே மேடை யில் ஜனரஞ்சகமாக சேர்ந்து நிற்பதும் மென் பண்பு களுக்குரிய (Modest characteristics) வகையில் உரை நிகழ்த்தவும் பரந்துபட்ட வெகு மக்கள் ஆத ரவை திரட்டுவதற்கு அந்தந்த மாநில சிறப்பியல்பு களை போலியாக உயர்த்திப் பிடிப்பதுமான சாகசங்க ளில்  ஈடுபடுவார்கள். தங்கள் தத்துவார்த்த எதிர் முகாம் களை சார்ந்த புகழில்   மெய் மறக்கும் பலவீனமான ஆட் களை தடவிக் கொடுத்து தாராளமாக மக்கள் மத்தி யில் புகழ்வார்கள். திருக்குறள், தமிழ் வளர்ச்சி, பாரம் பரிய பொங்கல் பண்டிகைகள், ஓணம், விஷு திரு விழாக்கள் போன்ற மொழி, கலாச்சார, பண்பாட்டுச் சிறப்பியல்புகளை உயர்த்திப் பிடித்து வட்டார மொழி களிலேயே  ஒன்றிரண்டு வாக்கியங்களை அமைத்துக் கொண்டு பேசுவார்கள்.  மாபெரும் வரலாற்றுச் சம்பவங்களை, நிகழ்வு களை  இவர்கள் நோக்கில் வியாக்கியானம் செய்வார் கள். இவர்களது  உரை முழுவதும் தல பெருமைகளை ஒட்டியே இருக்கும். பொதுநல  நோக்கங்களுக்கான இயக்கங்களில்  இணைந்து வேலை செய்வதுபோல மக்களை குழப்பி தன்வயப்படுத்தும் வேலையில் ஈடு படுவார்கள். கவர்ச்சிகர வார்த்தைகளால் வாயால் உடுக்கை அடித்துக்கொண்டே சர்க்கஸ் காட்டுவது இவர்களுக்கு கைவந்த கலை. இந்தியக் கிராமங்களின் பாரம்பரியமான வாழ்க்கை மற்றும் நாட்டார் நம்பிக்கை கள் சார்ந்த அனைத்திலும்  இப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ் -இன் விஷ வேர்கள் ஊடுருவத்தொடங்கி உள்ளன. இவர்களை இனம் கண்டுகொள்ள கூர்மையான மார்க்சிய தத்துவார்த்த அடிப்படை வேண்டும் என்ப தி்ல்லை. மக்களை மேலும் மேலும் துயரத்தில் ஆழ்த்தும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, நோய்கள்  போன்ற  பிரச்சனைகளில் ஒன்றிய அரசின் கொள்கைகளைப் பற்றி வெளிப்படையாக பேசு வதை அவர்கள் வசதியாக தவிர்த்து விடுவார்கள். அதற்கான போராட்டங்களில்  இவர்களின் முன்னுரிமை, ஆதரவு கருத்து, கவனம், முயற்சிகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று கவனித்தாலே இவர்கள் யார் என்பது புரிந்து விடும். 

அனைத்தையும் பறிக்க நினைக்கும் ஆர்எஸ்எஸ்

சதிகளின் மூலம் சில மாநில ஆட்சிகளை  கைப்பற்ற முடியாதபோதுஅம்மாநில கட்சிகளுக்கிடையே நிலவும்  சுயநல போட்டிகளை ஊக்குவித்து குழப்பங்க ளை உருவாக்குவார்கள். அதே வேளையில் இதற்கு நிரந்தர மாற்றாக தங்களை கூச்சமின்றி சித்தரித்துக் கொள்வார்கள். பிஜேபி ஆட்சியின் இறுதியில் இந்து ராஷ்டிரா அமையும் போது தான் இந்துக்களின் சொர்க்கம் மலரும் என்பார்கள். கவர்ச்சிகரமான இந்துத் துவா தேசிய வெறி என்னும் அமில சவக்காரத்தால் மூளைச் சலவை செய்யப்பட்ட பெருங்கூட்டத்தை தொண்டர்கள் என்ற பெயரில் (தோராயமாக 52 இலட்சம்) ஆர்எஸ்எஸ் தொண்டர்களை துணை ராணு வமாக மாற்றி வைத்துள்ளது.  ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் நிர்வாக பணித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் குறிப்பிட்ட வடமாநிலங்களில் இருப்பதை ஆழ்ந்த ஆய்வில் நாம் காண முடியும். அதே போல வங்கிகள், ரயில்வே, துறை முகங்கள் உள்ளிட்ட சகல துறைகளிலும் இடை நிலை அதிகாரிகள், ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகளில் தென் மாநில முன்னுரிமைக்கு வஞ்சகம் இழைத்து வட இந்திய மாநிலங்களிலிருந்து இறக்கு மதி செய்து அமர்த்துவதையும்  காண முடியும். மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுமுறையை மாநில அதி காரத்தில் இருந்து பறிக்கவும் சார்பு நீதித்துறையை தனது கைப்பாவையாக மாற்றும் வேலையை ஒன்றிய அரசு துவக்கி உள்ளது. 

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சக ரயில் பயணத்தில், லெப்.கர்னல் அந்தஸ்தில் (இன்னும் பதவி உயர்வுகள் பெற வயது வாய்ப்பி ருந்தும்) விபத்தின் மருத்துவ இயலாமையால் பணியிலி ருந்து விடுவித்துக் கொண்ட முன்னாள் ராணுவ  கட்டளை அதிகாரி ஒருவர் கவலையுடன் குறிப்பிட்டார். பாதுகாப்பு பொருளாதார அரசியலில் ஆழ்ந்த அறி வைப் பெற்றிருந்த அவர்  முப்படைகளின் உயர் அதிகார பதவிகள் குறிப்பிட்ட வட மாநிலங்களுக்குள்  இருப்ப தற்காக இளம் தனிப் பொறுப்பு அதிகாரிகள் (Perman ant Commissioned Officers) குறிப்பிட்ட அந்த மாநி லங்களிலிருந்தே அதிகமாக தேர்வு செய்யப்படுவதற் குரிய சூழ்நிலை  மிக வேகமாக உருவாகி வருகிறது. சிடிஎஸ்- வழி தேர்வில் நிரந்தர  தனிப்பொறுப்பில்  லெப்டினண்டாக 2000-ஆம் ஆண்டுகளில்  நான் சர்வீசில் இணைந்ததற்கு பிறகு வாஜ்பாய் காலத்தில் தான் இதற்கான குழப்படி வேலைகள் ஆரம்பித்தன.  இளம் அதிகாரிகள் தேர்வு, மேல் அதிகார பதவிக ளுக்கான பதவி உயர்வு உள்பட உயர் கட்டளை தலை மையக முடிவுகளில் அரசின் நேரடி தலையீடுகள் வாஜ்பாய் காலத்தில்தான் துவங்கின. வாஜ்பாய் ஆட்சி யின் போது அட்மிரல் விஷ்ணு பகவத் டிஸ்மிஸ் செய் யப்பட்டதுதான் முதன் முதலில் உருவாகி வெளியில்  தெரிந்த அதன் கரும்புகை என்று கூறியவர், அடுத்து கேள்விப்படாத அதிர்ச்சியான தகவல்களை பயண நெருக்கத்தில் கூறத் துவங்கினார். 

 ஹிட்லரின் எஸ்எஸ் படையாக்கும் ஆர்எஸ்எஸ் முயற்சி

பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்ட ஆபத்தான  கொள்கைகளை ஆர்எஸ்எஸ்-கட்டளையால் மோடி  அரசு மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு உற்பத்தி யை  லாபத்தை மட்டுமே எதிர்பார்க்கும் தனியாரிடம் கொடுக்கும் படு பாதகம் ஒருபுறம், முன் பல்கலைக் கழக ராணுவ சார்கல்வியை 33 சைனிக் பள்ளிகள் பர வலாக நாடு முழுவதும் பாதுகாப்புத் துறையின் கட்டுப் பாட்டில் அளித்து வருகின்றன. இவைகளின் மூலம் தேர்வாகி தேசிய பாதுகாப்பு அகாடமியின் பட்டம் பெறு வதும் படைகளில் அதிகாரிகளாக இணைவதும் ஏராள மான இளைஞர்களின், அவர்களது குடும்பங்களின் கனவாக இருந்து வருகிறது.  உடல்-மனத்திண்மை, தலைமைப் பண்பு மற்றும் நாட்டின் பாதுகாப்புச் சேவைகளில் அதிகாரிகளாக்கு வதற்கேற்ப அவர்களை உருவாக்குவது போன்ற தெளி வான நோக்கத்துடன் இந்தப் பள்ளிகள் 1960-களில் உருவாக்கப்பட்டன.   அதாவது ஆர்வமுள்ள ஏழை, எளிய நடுத்தர இந்திய குடும்பங்களின் குழந்தைக ளுக்குக் கூட சைனிக்  கல்வி கிடைக்கும் நிலை இருந்து வருகிறது. இந்த சைனிக் பள்ளிகளிலும் தனியார் மயத்தை திணிக்க மோடி அரசு முடிவெடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 100 சைனிக் பள்ளிகள் அரசு தனியார் பங்கேற்புடன் துவக்குவதற்கு அறி வித்தது. முதற்கட்டமாக 21 சைனிக் பள்ளிகள் இந்த கல்வியாண்டில் துவக்கப்பட்டுள்ளன.

முதல் வலை விரிப்பும்-  அடுத்த சதியும்

பாதுகாப்புத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் என்று கூறினாலும்  காலப்போக்கில் முற்றிலும் சைனிக் கல்வியை தனியாரிடம் கொடுப்பதற்கும்  ஆர் எஸ் எஸ் சித்தாந்தக் குழுக்கள் நடத்தும் பள்ளிகளுக்கே அனு மதியில் முன்னுரிமை அளிப்பது தாங்கள் விரும்பும் இந்துத்துவா திட்டத்தை இணைத்து போதிப்பது என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் முதல் வலை விரிப்பா கும். இப்போது அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் 21 பள்ளிகளில் பெரும்பகுதி இதை உறுதிப்படுத்துகிறது. கலாச்சாரம், பாரம்பரியம், தேசிய உணர்வுடன் கூடிய தலைமைப் பண்புகளை கொண்ட குழந்தைகளை வளர்த்தெடுக்க  இக்கல்வியில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக மோசடியாக மோடி சித்தரிக்கிறார். அதாவது நாட்டின் மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை என்னும் மென்பொருட்களால் இயங்கும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக  இந்துத்துவா கலாச்சார தீம்பொருளை  (Hinduthva Cultural Malware) குழந்தைகள் மூளையில் ஏற்றும்  பாடத்திட்டங்களுடன் இது அமை யப்போகிறது என்பதுதான் உண்மை.   தற்போது சைனிக் பள்ளிகளில் அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டுடன்  வசதியில்லாதவர்களுக்கான படிப்பு உதவித் தொகையும் உண்டு. இதை காலப்போக்கில் ஒழித்துக் கட்டுவதுதான் இத்திட்டத்தில் மறைந்திருக் கும் மற்றொரு சதியாகும். இதற்கான முயற்சிகளில் முன்மாதிரியானது ராஜு பையா சைனிக் வித்யா மந்திர் என்ற ராணுவ பள்ளி உத்தரப் பிரதேசம் ஷிகர்பூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ்-ஆல் முதற்கட்டமாக துவக் கப்பட்டுள்ளது. இதில் இட ஒதுக்கீடுகள் இல்லை.

உளவியல்  ரீதியில் இந்துத்துவா பூச்சால்  மெழுகப் பட்ட கேடட்டுகளாக  மாற்றி பாதுகாப்பு அகாடமிக்கு அனுப்பவும் பெரும்பகுதி வசதி படைத்த முன்னேறிய வகுப்பினரை நாளைய கமாண்டர்களாகவும் ஜென ரல்களாகவும் உருவாக்கும் வேலை  சத்தமின்றி  நடை பெற்று வருகிறது. நிரந்தர கட்டளை அதிகாரிகளை தேர்வு செய்யும் அடிப்படை இவ்வாறு மாறிக் கொண்டி ருக்க மறுபுறத்தில் கோடிக்கணக்கான வேலையற்ற இந்திய இளைஞர்களைச் சுரண்டும் கட்டளை அதிகார மில்லா (அதிகாரி பதவிக்கு கீழ் உள்ள (PBOR) Non Commissioned Contract) நிரந்தரமற்ற படை வீரர்க ளை உருவாக்கும் டூர் ஆப் டியூட்டி என்னும்  அலங்கார அக்னிபாதைத் திட்டம் ஆர்எஸ்எஸ்-இன் மற்றொரு தொலைநோக்கு திட்டமாக வந்துள்ளது.    ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் இளை ஞர்கள் இத்திட்டத்தில்  சேர்க்கப்படுவார்கள் எனத் தெரி கிறது. இளைஞர்கள் ராணுவத்தில் சேர பொன்னான வாய்ப்பை நரேந்திர மோடி வழங்கியுள்ளதாகக் கூறு கின்றனர். இப்போது பணியில் உள்ள  எங்கள் அதிகாரிகள்  மற்றும்  ஓய்வு பெற்ற  முன்னாள் பாது காப்புப் படை அதிகாரிகளில் பெரும்பகுதியினர் இது ஆபத்தானது என்று கருதுகின்றனர். பாதுகாப்புப் படையில் இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும்   தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அவ நம்பிக்கை துளியும் இருக்கக்கூடாது. போரில் மரணம டையும் வீரரின் மனைவி அல்லது வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் இத்திட்டத்தில் இல்லை. போரில் உயிர் நீத்த குடும்பங்களுக்கு  ரூ.48 லட்சம் மற்றும் சேவா நிதி ஒரே தொகையாக கிடைக்கும் என்றாலும் குடும்ப ஓய்வூதியம் என்னும்  சமூக பாதுகாப்பில்லாத நிலையில் அக் குடும்பங்க ளில் எவ்வித மன ஓட்டங்களை இத்தொகை உருவாக் கும் என்பதற்கு  கார்கில் ராணுவ நடவடிக்கையில் மர ணமடைந்த வீரர்களின் இளம் விதவைகள்  அனுப வித்த துயரங்கள் உதாரணங்களாக உள்ளன. 

இப்போது தேர்வு செய்யப்படும் 1.25 லட்சம் வீரர்க ளின் நான்கு ஆண்டு கால குறுகிய சேவை முடிவடை யும் போது 25 சதவீதத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டு எஞ்சியுள்ளோர் வெளியேற்றப்படுவர். இவர்கள் மேலும் 15 ஆண்டுகள் பணிபுரிவார்கள், அவர்களுக்கு மட்டும் அனைத்து ஓய்வூதிய பலன்க ளும் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும்  தொடரும் இந்த ஃபார்முலா  மிக அபாயகரமான  விளைவுகளை தொடர்ச்சியாக உருவாக்கும். படை அணியின் சக ஆயுதத் தோழர்களிடையே  (Comrade in arms) கட்டாயம் நிலவ வேண்டிய  ஒருமைப்பாடு (Integirity) சீரொழுங்கு, (Decorum), பரஸ்பர நம்பிக்கை (Mutual trusts) குறிப்பாக மூன்றாம் ஆண்டிலிருந்து தளர்ந்து தகர்ந்து போகும் அபாயம் உருவாகக்கூடும் என்ற கவலை தோன்றியுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ்-இன் கற்பனை கணக்கு வேறு விதமாக உள்ளதாகவும் தெரிகிறது. மூன்று சேவைகளின் உயர் அதிகார ராணுவ சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ் பாசிசத்தோடு இணைப்பதும்  ஒவ்வொரு ஆண்டும் அக்னிபாதைத் திட்டத்தின் மூலம் உருவாகும் செயலூக்க பலத்தை பயன்படுத்திக்கொள்வது என்பதும்தான் அந்தத் திட்டம். நீங்கள் படையணியில் தொடர்ந்திருந்தால் உங்களைப் போன்றவர்கள் அதிகமிருந்தால்  எப்படி யிருக்கும் என்று கேட்டபோது, ரயிலிலிருந்து இறங்கிய வர் சிரித்துக்கொண்டே இந்தியாவின் வரலாற்றுப்பூர்வ மான உறவுப்பின்னலை புரிந்து கொள்ளாததன் கவலைதான் இது. என்னைப்போன்றவர்கள் ஏரா ளம் படைகளில் உள்ளனர். அவர்கள் மௌனமாக கவனித்துக்கொண்டுதான் உள்ளனர் என்றார். 

எது தேவை?  என்ன செய்ய வேண்டும்?

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளு மன்ற தேர்தலில் செல்வாக்கிழந்து பிஜேபி தோல்வி  அடையும்போது எல்லாம் முடிவுக்கு வரத் துவங்கி விடும் என்றும்  காவியிசத்தின் நிரந்தர வீழ்ச்சி 2024-இல் இருந்து துவங்கும் என்றும் சிலர் தங்கள் விருப்பங்க ளை கூறுகிறார்கள். இப்படிப்பட்ட   சிறுபிள்ளைத்தன மான முடிவுக்கு நம்மால் வரமுடியாது. இப்போ தைய பெரும்பான்மை இடங்களை இழந்து பலவீனமா னாலும்  ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சிக ளால் அவர்களுக்கு சாத்தியமாகலாம். அல்லது இந்திய நாடாளுமன்றத்திலிருந்து முற்றிலும் துடைத் தெறியப்படலாம். ஆனால் அடுத்த சில  பத்தாண்டு களுக்குள் ஆர்எஸ்எஸ் என்னும் பாசிசத்தின் இந்திய வடிவம் ஒரு போதும் அழிந்துவிடாது. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரிய இந்து தர்மம், யோகாசனம் போன்ற மேஜிக் மெஸ்மெரிச வார்த்தைகளைக் கொண்டு மக்களை குழப்பி கூறுபோடும் அதன் நாச வேலைகளை தொடர்ந்து நடத்தும். நமது சமூகங்க ளுக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக இணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும்   நமது சிறுபான்மை மக்கள் மீது உக்கிரமாக வன்முறையை மேலும் திணிக்கும்.    பாஜக ஆட்சிக்கு வந்த 2014 க்குப் பிறகு  கடந்த 8 ஆண்டுகளில் சீராகவும், ஆண்டிற்கு 20 முதல் 25 சத வீதம் வளர்ச்சியையும் இந்த காலத்தில் அதன் கேடர்க ளின் எண்ணிக்கை இரு மடங்காக ஆர்எஸ்எஸ் அதி கரித்துள்ளது என்றும் 10 ஆயிரம் தகவல் தொடர்பு ஊழியர்கள், 50 ஆயிரம் கேடர்களுக்கு மேல் தினசரி இயக்கத்தில் உள்ளதாகவும் ஆர்எஸ்எஸ்-இன் தக வல்கள் கூறுகின்றன. ஆர்எஸ் எஸ்ஸின் சமூக ஊடக பலம்,  தகவல் தொடர்பு கட்டமைப்பு பல்லாயிரம் கோடி ரூபாயை வாரி இறைக்கும் கார்ப்பரேட்மய மாக்கப்பட்டுள்ளது.

சற்றேறக்குறைய அனைத்து ஊடகங்களின் சிந்த னைகளை ஆர்எஸ்எஸ்  விலைக்கு வாங்கி விட்டது. தீவிர தேசியவாதம், தலைவர் வழிபாட்டு முறை, இவர்தான் நம்மைக் காப்பாற்றப் போகிற தலைவர் என்ற எண்ணத்தை மோடியை உருவகம்செய்து ஆர்எஸ்எஸ் நாடுதழுவிய காந்த அலைகளை உரு வாக்கி வருகிறது.  ஆயினும் கோடானுகோடி நாட்டுப் பற்றாளர்கள், இடதுசாரிக் கட்சிகளில் பெரும்பான்மை யாகவும் இதர மதச்சார்பற்ற, ஜனநாயக, முற் போக்கு கட்சிகளிலும் வைராக்கியத்தோடு டி.வி. சேனல்களில் சமூக ஊடகங்களில் இந்திய பெரு வெளியில் ஆவேசத்தோடு பணியாற்றி வருகின்றனர். ஹிட்லரை சார்லி சாப்ளின் சித்தரித்ததுபோல் ஏராள மான ’புதுப்புது கோணங்களில் அரசியல் நையாண்டி களாலும் கற்பனை காமெடி மீம்ஸ்களாலும் மோடியை கோமாளியாக்குகின்றனர். இவைகள் எல்லோருக்கும் ஆறுதலையும் உத்வேகத்தையும் அளிக்கின்றன.  நமது கடமை மூன்றே மூன்றுதான். ஒன்று, இந்துத் துவா என்பது இந்தியாவின் வாழ்வியல் முறையல்ல; அது கொடூர பாசிசத்தின் நவீன வடிவம்  என்பதையும் மதவாத பாசிசம் இறுதியாக தன்னையும் அழித்துக் கொண்டு நாட்டையும் சுடுகாடாக்கும் என்ற செய்தியை விரிவாக ஒவ்வொரு இல்லங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இரண்டு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற மக்களை கசக்கிப் பிழியும் சோகங்க ளை அதற்கான காரணங்களை, தேவைகளை, கோபங் களை, ஒருங்கிணைக்க வேண்டும். மூன்றாவதாக மதச் சார்பற்ற ஜனநாயக இயக்கங்களின் ஒற்றுமையை மேலும் பலமாக்கி மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்களின் மூலம் மக்களை பெருந்திரள் கூட்டமாக அணிதிரட்ட வேண்டும். 

கட்டுரையாளர்: தீக்கதிர் மன்னார்குடி செய்தியாளர்;  நீதித்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் 

 

;