articles

img

போதைப் பொருட்கள் : தடுப்பு நடவடிக்கை அவசியம்! - ஐ.வி.நாகராஜன்

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகை யிலைப் பொருள்கள் விற்பனைக்கு தடை விதித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதி மன்றம் கடந்த மாதம் ரத்து செய்தது. இதனால்,  தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை அதி கரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில்  போதை கலாச்சாரம் தலை விரித்தாடும் நிலையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்திருப்பதால் போதை பழக்கத்திற்கு மேலும் பல இளைஞர்கள் அடிமையாகும் சூழல் ஏற் பட்டுள்ளது.   எனவே உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்து உணவு பாதுகாப்புச் சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு விதிக் கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதைப் பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும். புகையிலை ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குள் இருந்தாலும், மக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.  இதனால்தான், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அதிகாரத்தால், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்க ளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒவ்வொரு ஆண்டும் அரசாணை வெளி யிட்டு நீட்டிக்கப்பட்டது. சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருள் கள் சட்டம் 2003-இன் படி, புகையிலைப் பொ ருள்கள் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் தொடர்பாக மட்டுமே கட்டுப்பாடு கள் விதிக்க முடியும். முற்றிலும் தடைவிதிக்க முடியாது. மேலும், புகையிலைப் பொருள்க ளுக்கு தடைவிதிக்க, உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு அதிகாரம் இல்லை என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக உணவுப் பாது காப்புத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக் சாண்டரிடம் பேசிய போது, தமிழகத்தில், பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் துப்புதல் தடைச்சட்டம் 2002 நடைமுறையில் உள்ளது. இன்றும் இந்த சட்டத்தின் கீழ் போலீ சார் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழ கத்தைப் போலவே, நாட்டின் பல மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது என்று கூறுகிறார்.  1997இல் கோவாவில் கொண்டுவரப்பட்ட சட்டத்தில், குட்கா, பான் மசாலா பயன்பாட்டை யும் சேர்த்தனர். இதனால், கோவாவில் இப்போது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகை யிலைப் பொருள்களுக்கு நிரந்தர தடை உள்ளது. இதே போல, தமிழ்நாட்டிலும், பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் துப்புதல் தடைச்சட்டம் 2002-இல் திருத்தம் கொண்டுவந்து, குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சேர்க்க முடியும். இதே போல, 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்ட சரத்து 34-இன் கீழ். மெல்லும்வகை புகை யிலைப் பொருட்களை தடை செய்ய மாநில அரசால் முடியும். தனியாக சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் கூட இல்லை. தம் கையில் இருக்கும் சட்டத்தில் சிறிய திருத்தம் செய்தால் போதும். கோவா மாநிலத்தில் சாத்தி யமாக்கியதை, நம்மால் நிச்சயம் செய்துகாட்ட முடியும் என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குட்கா விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு விதித்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கி யிருந்தது. இதனிடையே கடைகளில் குட்கா விற்பனை செய்யலாமா என்பதில் குழப்பம் நிலவிய நிலையில், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். குட்கா தடை நீக்கம் குறித்துப் பேசிய அவர், “குட்கா தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இருப்பினும், மாநில அரசு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற லட்சி யத்தை வைத்துள்ளது. எனவே, உணவுப் பொருட்களை விற்கும் மளிகைக் கடைகளில் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் குட்காவை விற்க வேண்டாம் என்று வணிகர் சங்க பிரதி நிதிகளுக்கு நான் கோரிக்கையாகவே கேட்கி றேன். நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேல்முறை யீடு செய்யப்படும். அவர்கள் சட்டத்தில் இருக்கும் பிரச்சனையைச் சுட்டிக்காட்டியுள்ள னர். வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தேவைப் பட்டால் சட்டத்திருத்தம் செய்யப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்னொருபுறம் இந்தியாவை பொறுத்த வரை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே நடை பெறுகிறது. அதேபோல் கடல் மார்க்கமாகவும் அதிக அளவில் கடத்தல் நடைபெறுகிறது என்று அரசே தெரிவிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களும், அதனை பறிமுதல் சம்பவங்களும் வழக்கத்தை விட அதிகளவில் நடந்துள்ளது என்று ஒன்றிய அரசே சுட்டிக்காட்டியுள்ளது. போதைப்பொருட்களில் பிரதானமாக பறி முதல் செய்யப்பட்டிருப்பது ஹெராயின் என்பது ஆகும். கடந்த 2017-ஆம் ஆண்டும் 2146 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து அதன் தொடர்ச்சியாக 2022-ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 282 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை 2017-ஆம் ஆண்டு டன் ஒப்பிடுகையில் 70 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2021 செப்டம்பர் மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கண்டெய்னரிலிருந்து 3 டன் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது அரபிக் கடல் மார்க்கத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் சரளமாக நடப் பது உறுதி செய்யப்பட்டது. இங்கே ஹெரா யின் என்பது ஒரு ஒப்பீடு மட்டுமே இதே போல் அபின், கோகெயின், மெத்தாம் பேட்டமைமின், கேட்டமைன் ஆகிய போதை மாத்திரைகளும் மிக அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடத்தல் மட்டுமின்றி இதற்கான உற்பத்தியும் இந்தியாவில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தடுக்க வேண்டிய இடத்தி லுள்ள ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் ஏராளமான கெமிக்கல் மற்றும் மருந்து நிறுவனங்களும் உள்ளன. இவைகளின் மூலம் போதைப்பொருட்களும் போதை மாத்தி ரைகளும் உற்பத்தி செய்யப்படுவதை ஐநா வின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.  இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் போதைப் பொருள் பயன்பாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை தன்னார்வ அமைப்புகள் நடத்தியுள்ளன. இந்த ஆய்வில் இந்தியாவில் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்களில் 45 சதவிகிதம் பேர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்றும், 33 சதவிகிதம் பேர் 25 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் தெளி வாகியுள்ளது. இந்த பட்டியலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கட்டுமான வல்லுநர்கள், திரை யுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி சில விஐபிக்களும் இடம்பெற்றி ருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இவர்கள் அனைவரிடமும் ஏதாவது ஒரு நிலையில் இந்தியாவை வழி நடத்தி செல்ல வேண்டிய திறமை உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால் அவர்களின் திற மைகளுக்கு போதைப் பொருட்கள் பெரும் சவாலாகவே உள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கஞ்சா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளின் கொட்டத்தை அதிரடி ஆப ரேசன்கள் மூலம் அடக்கி வைப்பதற்கு தமிழ்நாடு காவல் துறை முனைப்பு காட்ட வேண்டும். மாநில எல்லைகளிலும் காவல் துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். அந்த வகையில் இந்திய எல்லையின் அனை த்து மார்க்கங்களிலும் அபாயம் பரப்பும் விஷம சக்திகளை விரட்டியடிக்க ஒன்றிய அரசும் வீரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த தீமை களை புறிந்துகொண்டு தமிழ்நாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இளைஞர் அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைக்கான பிரச்சாரங்களிலும் விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து இயக்கங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவது வரவேற்கத் தகுந்ததாகும். இத்தகைய நடவடிக்கைகள் போதையால் பாதை மாறும் நவீன இந்தியாவை உருவாக்கு வதற்கு சிறந்த வழிகாட்டுதலாக அமையும்.