பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் : சிறிதும் இரக்கமில்லா வெற்றுப் பேச்சு!
மணிப்பூர் மாநிலத்திற்கு, அப்போ தைய பாஜக தலைமையிலான முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையிலான அரசாங்கம் நடத்திய இன வன்முறையைத் தொடர்ந்து, 28 மாதங்கள் - துல்லியமாகச் சொன்னால் 864 நாட்களுக்குப்பின், மிகவும் தாமதமாக பிரதமர் பயணம் செய்திருக்கிறார். இந்தப் பயணம், மாநிலத்தில் மக்கள் மத்தியில் இழந்த அரசியல் தளத்தை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சியேயாகும். மாநில அரசாங்கத் தின் மீது மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை யிழந்துள்ள நிலையில், முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய மறுத்த பிடிவாதத்தை கைவிட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மிகவும் கூருணர்வு மிக்க ஓர் எல்லைப்புற மாநிலத்தில் மெய்டெய் மக்களுக்கும் குக்கி மக்களுக்கும் இடையே யான உறவுகள் கிட்டத்தட்ட சரிசெய்ய முடியாத அளவுக்கு சீர்குலைந்துபோயுள்ளன. இரு இனப்பிரிவினருக்கும் இடையே அதிக அளவில் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இனப்பிரிவின் இருபுறமும் வீடுகளும் மத நிறுவனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடு களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் மனிதாபிமானமற்ற முறையில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமைதிக்கு முழக்கமும் வன்முறையில் மவுனமும் மணிப்பூரில் 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இதே பிரதமர், “மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த முடியாதவர் களுக்கு ஆட்சி செய்ய உரிமை இல்லை” என்று இடிமுழக்கமிட்டார். ஆனால் அதன்பின்னர் இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், மக்களி டையே பிளவுபடுத்தும் பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்துவிட்டு, இன வன்முறையைத் தூண்டி, உள்நாட்டுப்போர் போன்ற சூழ்நிலையை உரு வாக்கி, மாநிலமே கொழுந்துவிட்டு எரிந்த போது, இவர் உணர்ச்சியற்ற முறையில் மவு னத்தைக் கடைப்பிடித்து, செயலற்று இருந்தார். இவ்வாறு இவரது வார்த்தைகளின் வெற்றுத் தனம் அப்பட்டமாக வெளிப்பட்டது. ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, இந்தியப் பிரதமர் கல வரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவர எந்த பச்சாதாபத்தை யும் உறுதியையும் காட்டவில்லை. இதன் காரணமாக மணிப்பூர் மக்கள் மத்தியில் இவ ருக்கு எதிராக இருந்த கோபம் நன்றாகவே தெரி ந்தது. மழை நாளில் பள்ளிக் குழந்தைகளை வரிசையில் நிற்க வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதிலும், இவரது நிகழ்வுகளுக்கு மிகக்குறைந்த அளவிலேயே மக்கள் கூடினர். மோடிக்கு எதிரான கேள்விகள் இவரது வருகைக்கு எதிராக இம்பாலிலும், சுராசந்த்பூரிலும் மக்கள் காட்டிய எதிர்வினை அனைத்தும், பிரதமரை இவ்வளவு கஷ்டப் பட்டு அழைத்துச்சென்றது ஏன் என்ற கேள்வி யை எழுப்பியிருக்கிறது. மக்கள் கொல்லப்பட்ட போது, பெண்கள் கும்பல் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டபோது அவர் எங்கே இருந்தார் என்ற கேள்வியையும், இனப்பதற்றங்களைத் தூண்டுவதற்கு அவர் ஏன் அனுமதித்தார் என்ற கேள்வியையும் எழுப்ப வைத்தது. உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் நம்பிக்கைத்துரோகம் “இரட்டை என்ஜின் அரசு” அமைதியைப் பேணுவதிலும், குற்றமிழைத்தவர்களை சட்டத்தின்முன் கொண்டுவந்து நிறுத்துவதிலும், 2023 ஜூனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகா தாரம், வீட்டுவசதி மற்றும் கல்வி அளிக்கப் படும் என்று உள்துறை அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப் படாமல் நம்பிக்கைத்துரோகம் இழைக்கப் பட்டும் படுதோல்வியுமடைந்தது. மருந்துகள் பற்றாக்குறையாலும், மருத்துவமனை களுக்குச் செல்ல முடியாததாலும், பசி-பஞ்சம்-பட்டினியாலும் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டிருப்போர் தற்கொ லைகள் செய்துகொள்கிறார்கள் என்று செய்தி கள் வந்துகொண்டிருக்கின்றன. பிரதமர் எந்த நிவாரண முகாம்களையும் பார்வையிட வில்லை. அவர் உண்மையான பிரச்சனை களை எதிர்கொள்ளாமல் தவிர்த்துவிட்டார். மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான உறுதியான திட்டம் எதை யும் வழங்கிட அவர் தவறிவிட்டார். வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பது இன்னும் வெகு தொலைவில் உள்ளது. ஆயுதக் கும்பல்கள் கட்டுப்படுத்தப்படாமல் உள்ளன. மேலும் அரசு ஆயுதக் கிடங்குகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. எரிந்த வீடுகள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் மீண்டும் கட்டப்படவில்லை. சோதனைக் கூடமான மணிப்பூர் மணிப்பூர் சங் பரிவாரத்தின் சோதனைக் கூடமாகப் பயன்படுத்தப்பட்டது. வட கிழக்கு மாநிலங்களில், பாஜக கால்பதித்த அனைத்து மாநிலங்களிலும், தன்னுடைய பிளவுவாத நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தி வருகிறது. அசா மில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்கு தல்கள், வெளியேற்றங்கள், நாடு கடத்தல் மற்றும் அரசு அடக்குமுறையை ஏவும் விதத்தில் முதலமைச்சர் வெறுப்பு என்னும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்று கோரி போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இதேபோன்றே திரிபுராவிலும் சிறு பான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் இனவெறித் தீ விசிறிவிடப்படுகிறது. மிசோரத்திற்கு ஆபத்து மிசோரமில், மாநில மக்களின் உரிமை களுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில், ஒன்றிய அரசுக்கு அதீத அதிகாரங்களை வழங்கிடும் விதத்தில் வனப் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 371-ஜி பிரிவு மற்றும் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்களின் அதிகாரத்தைப் பாதுகாக்கும் 244ஆவது பிரிவு ஆகியவற்றை மீறும் விதத்தில் சர்வதேச எல்லையில் 100 கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நலன் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியை இழந்த பிறகு சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சிலில் ஆளுநர் ஆட்சி விதிக்கப்பட்டதும் அமைதியின்மையை உரு வாக்கியுள்ளது. இந்திய-மியான்மர் எல்லை யில் சுதந்திரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார உறவுகளை சீர்குலைப்பதை மிசோரம் மற்றும் நாகாலாந்து மக்கள் எதிர்க் கின்றனர். இந்தப் பிரச்சனை ஒரு குறிப்பிடத் தக்க வெடிப்புப் புள்ளியாக மாறக்கூடும். நாகாலாந்தில் மீண்டும் ஆயுதங்களுக்குத் திரும்பும் ஆபத்து நாகா அமைதி செயல்முறை திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் நிரந்தர இடைத்தரகர் ஒருவரை நியமிக்க பிடிவாதமாக மறுத்து வருவது கடுமையான பதற்றம் மற்றும் துயரத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது. 2015 ஆகஸ்ட் 3 அன்று நரேந்திர மோடியால் “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” என்று பாராட்டப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தேக்கநிலை கணிசமான பதற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இந்த செயல்முறை விரைவுபடுத்தப்படாவிட்டால், அமைதியற்ற குழுக்கள் மீண்டும் ஆயுதங்களுக்குத் திரும்பும் அபாயம் உள்ளது. மணிப்பூர் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில், நாகா பகுதி களில் வன்முறை மீண்டும் ஏற்படுவதற்கான ஆபத்து, பிராந்தியத்தின் பலவீனமான சூழ்நிலையை மேலும் அச்சுறுத்தும். தேவை ஜனநாயகச் செயல்முறை மணிப்பூரிலும், பிராந்தியத்தின் பிற மாநிலங்களைப் போலவே, எண்ணெய்ப் பனை பணி, கனிம ஆய்வு மற்றும் பிரித்தெடுத்தல் போன்றவற்றின் பெயரில், கனிமங்கள், நிலம், காடுகள் போன்ற வளங்களை சுதந்திரமாக சுரண்டுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பெரு நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. அமைதி செயல்முறை, சமரசம் மற்றும் நல்லிணக்கத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இராணுவமயமாக்கல் மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இன்றியமையாதது. ஜனநாயகச் செயல்முறை மற்றும் அனைத்துத் தரப்பினர்களுடனும் கலந்துரையாடல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் ஆகி யவை மட்டுமே மணிப்பூரை இயல்பு நிலைக்கு இட்டுச் செல்லும். செப்டம்பர் 17, 2025 - தமிழில்: ச.வீரமணி