articles

உலக இயன்முறை மருத்துவ நாள்:  முதல்வர் வாழ்த்து

உலக இயன்முறை மருத்துவ நாள்:  முதல்வர் வாழ்த்து

! சென்னை, செப். 8 - உலக இயன்முறை மருத்துவ நாளையொட்டி இயன்முறை மருத்துவர் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது மருத்துவத் துறையின் மிக முக்கிய அங்கமாக இயன்முறை மருத்துவர்கள் இருக்கிறார்கள். மக்களின் உடல்நலத்தை மேம்படுத்து வதிலும், உடலியக்கத்தைச் சீர்ப்படுத்துவதிலும், சுதந்தி ரமாக இயங்குவதிலும், பிறர் துணையை நாடாமல் வாழவும் இயன்முறை மரு த்துவம் எனும் பிசியோ தெரபி மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.  இத்துறை மேலும் வளர்ச்சி பெற்று, மானுட சமுதாயம் பயன் பெற இந்நாளில் எனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முத லமைச்சர் தெரிவித்துள் ளார்.