வரலாற்றின் அழியா சாட்சிக்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம்
மூன்று மலைகளால் சூழப்பட்ட முக்கோண வடிவில், பழைய தென்னாற்காடு மண்ணில் எழுந்து நிற்கும் செஞ்சிக் கோட்டை, வெறும் கல்லும் சுண்ணாம்பும் மட்டுமல்ல. அது நம் முன்னோர்களின் வீரத்தின் வெளிப்பாடு, கலை நயத்தின் கூத்தாட்டம், பொறியியல் நுணுக்கத்தின் பிரதிபலிப்பு. சோழர் காலத்தில் ‘சிங்கபுரி’ என அழைக்கப்பட்ட இந்த நகரம், காலப்போக்கில் செஞ்சி என்று மருவியுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் ‘ஆனந்தக் கோன்’என்ற குறுநில மன்னரால் நிறுவப்பட்ட கோன் வம்சத்தின் கீழ், இந்தக் கோட்டை முதன்முதலில் கட்டப்பட்டது என்ற நாட்டார் கதை உள்ளது. உண்மையில் அது எப்படியிருந்தாலும், அவரது தொலைநோக்குப் பார்வையும் கட்டடக் கலை அறிவும்தான் இந்தப் பிரமாண்ட கோட்டையின் அடித்தளமாக அமைந்தது.
பொற்காலமும்-புகலிடமும் விஜயநகர
ஆட்சியில் செஞ்சி தனது உச்ச கட்ட வளர்ச்சியைக் கண்டது. இருநூறு ஆண்டு கள் செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்கள், இங்குள்ள கோயில்களையும், கல்யாண மகா லையும், கோட்டை மதில்களையும், கொத்த ளங்களையும் கட்டியெழுப்பியுள்ளனர். அந்தக் காலத்தில் போர்ச்சுகீசிய மதபோதகர் பிமெண்டா, “நான் இந்தியாவில் பார்த்த நகரங்களில் செஞ்சி மிகச் சிறப்பானது. போர்ச்சு கல் நாட்டில் இருக்கும் லிஸ்பன் நகரைத் தவிர மற்ற எல்லா நகரங்களையும்விட இது பெரியது” என தெரிவித்திருப்பது குறிப்பிட தக்கதாகும். வீர சிவாஜி செஞ்சிக் கோட்டையைக் கண்ட போது, “இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை” என்று பாராட்டியிருக்கி றார். மராட்டிய மண்ணிலும் இவ்வளவு பாது காப்பான கோட்டை இல்லை என்று கூறிய அவர், இந்தக் கோட்டையை இன்னும் வலிமை யுடன் பலப்படுத்தினார். சிவாஜியின் மகன் ராஜாராம் வட இந்தியாவில் மொகலாயர்களி டம் தோல்வியுற்றபோது, அடைக்கலம் புகுந்தது செஞ்சியில்தான். ஔரங்கசீப்பின் மாபெரும் படை கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் முற்றுகை யிட்டும், இந்தக் கோட்டை வீழவில்லை. அற்புத கட்டக்கலையும்-வீரகாவியம் செஞ்சி என்றதும் நினைவுக்கு வரும் பெயர் ராஜா தேசிங்கு. மொகலாயர்களின் ஆளுநராக செஞ்சியை நிர்வாகம் செய்த சொரூப் சிங்கின் மகன் தேஜ் சிங்தான், மக்களால் அன்புடன் ‘தேசிங்கு’ என அழைக்கப்பட்டார். 22 வயதில் ஆட்சிக்கு வந்த இந்த இளம் அரசன், ஆற்காட்டு நவாப்புக்கு கப்பம் செலுத்த மறுத்துவிட்டார். 80 ஆயிரம் குதிரைப்படையுடன் வந்த நவாப்பை, வெறும் 350 குதிரை வீரர்களும் 500 காலாட் படையினரும் கொண்ட சிறிய படை யுடன் எதிர்கொண்ட தேசிங்கு, சில மணி நேரங்க ளிலேயே வீரமரணம் அடைந்தார். “வீரம் என்பது மரணத்தை வெல்வது அல்ல, மரணத்தையும் மீறி நினைவில் நிலைப்பது” என்பதற்கு ராஜா தேசிங்குவே சிறந்த உதாரணம். இன்றும் அவ ரது வீரம் போற்றப்படுகிறது. செஞ்சிக் கோட்டையின் கட்டடக்கலை அம்சங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மூன்று பெரிய மலைகளும் இரண்டு சிறிய குன்றுகளும் சூழ்ந்த பன்னிரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள மதில்சுவர்கள், அகழி, ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க்கம், சங்கிலி துர்க்கம் என்ற கோட்டைக் காவல் அமைப்பு கள் இவையெல்லாம் அந்தக் கால கட்டடக் கலைஞர்களின் தொழில்நுட்ப வல்லமையை வெளிப்படுத்துகின்றன. கிழக்கின் டிராய்... கோன் மன்னர்கள், விஜயநகர நாயக்கர் கள், பீஜப்பூர் சுல்தான்கள், மராத்தியர்கள், மொக லாயர்கள், ஆற்காடு நவாப்புகள், பிரெஞ் சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் ஆட்சி செய்த இந்தக் கோட்டை, “மாறுபடும் காலம் ஆனாலும் மாறாத வீரம்” என்பதற்கு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களுடைய கட்டடக்கலை முத்திரையை இங்கு பதித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை “கிழக்கின் டிராய்” என்று அழைத் தனர். டிராய் நகரம் போலவே, இந்தக் கோட்டை யும் பல ஆண்டுகள் எதிரிப்படைகளின் முற்றுகை யைத் தாங்கி நின்றது. பிரெஞ்சு வரலாற்றாசிரி யர்கள் புஸ்ஸியின் தலைமையில் வெறும் இரு பத்திநான்கு மணி நேரத்தில் இந்தக் கோட்டை யைக் கைப்பற்றியதை, இந்தியாவில் பெற்ற முக்கிய வெற்றியாகப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டை களில் ஒன்றாக இது விளங்கியது. தமிழர் பெருமையின் சாட்சி தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டி யர்கள் கலைநயத்துடன் உருவாக்கிய கோயில் கள் எங்கும் காணப்படுகின்றன. ஆனால் அந்த மன்னர்கள் கட்டிய கோட்டைகளோ, வாழ்ந்த அரண்மனைகளோ முழுமையான வடிவத்தில் எதுவும் மிச்சமில்லை. செஞ்சிக் கோட்டை மட்டுமே தமிழ் மன்னர்களின் வாழ்க்கை முறை யையும் ஆட்சி நடைமுறைகளையும் காட்டும் ஒரே சிறந்த உதாரணம். இன்றும் அது நம் மனக்கண்ணில் வீரர்களின் குதிரைக் குளம்படி ஒலியையும், வாள்களின் உரசல் சத்தத்தையும், போர்முரசின் கர்ஜனையையும் எதிரொலிக்கச் செய்கிறது. யுனெஸ்கோ அங்கீகாரத்துடன் செஞ்சிக் கோட்டை உலக கவனத்தைப் பெற் றுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இக்கோட்டையின் பன்முக வரலாற்றையும், பல்வேறு பண்பாட்டு பாரம்பரியங்களின் சங்க மமாக இது விளங்கும் தன்மையையும் உல குக்கு எடுத்துரைக்க வேண்டும். செஞ்சிக் கோட்டை வெறும் கல்லும் சுண்ணாம்பும் அல்ல - அது நம் பெருமையின் பிரதிபலிப்பு, நம் வீரத்தின் வெளிப்பாடு, நம் பண்பாட்டின் பதிவுக்கூடம். இந்த அழியா சாட்சியை நாம் போற்றுவோம், பாதுகாப்போம்! அங்கீகாரமும் சர்ச்சைகளும் 1921ஆம் ஆண்டு முக்கியமான தேசிய நினை வுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, 2024-25ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னத்திற்கான பரிந்துரை யில் ‘Maratha Military Landscapes’ என்ற பட்டியலில் இடம்பெற்றது. 2025 ஜூலை 11ஆம் தேதி பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 47ஆவது அமர்வில், செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகள் ‘மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்’ என்ற பெய ரில் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீக ரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒரு குறிப்பி டத்தக்க விவாதம் எழுந்துள்ளது. தமிழகத்தின் செஞ்சிக் கோட்டை ‘மராட்டிய ராணுவ நிலப் பரப்புகள்’ என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டி ருப்பது, வரலாற்று நுணுக்கங்களைப் புறக்க ணிப்பதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். செஞ்சிக் கோட்டை மராத்தியர்களுக்கு முன்பே பல நூற்றாண்டுகளாக தமிழ் மன்னர் களால் கட்டப்பட்டது. மராத்தியர்கள் இக் கோட்டையை மேம்படுத்தியது உண்மைதான், ஆனால் அதன் அடிப்படை அமைப்பும் வர லாற்று முக்கியத்துவமும் தமிழ் பாரம்பரி யத்தோடு தொடர்புடையது. எனவே செஞ்சிக் கோட்டையின் முழுமையான வரலாற்றையும் யுனெஸ்கோ பதிவுகளில் சேர்க்க வேண்டும். கோன் மன்னர்களிலிருந்து தொடங்கி விஜய நகர நாயக்கர்கள், மராத்தியர்கள் வரையிலான அனைத்து காலகட்டங்களின் பங்களிப்புகளை யும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். கோட்டையில் தமிழ், ஆங்கிலம், மராத்தி மொழிகளில் வரலாற்று விளக்கங்கள் தந்து, அனைத்து சமூகங்களின் பங்களிப்புகளையும் கவுரவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு செஞ்சிக் கோட்டையின் பன்முக வரலாற்றைக் கற்பிக்கும் சிறப்பு பாடத்திட்டங் களை உருவாக்க வேண்டும். செஞ்சியில் ஒரு வரலாற்று ஆராய்ச்சி மையம் நிறுவி, இக்கோட் டையின் பல்வேறு காலகட்ட ஆட்சியாளர்களின் பங்களிப்புகள் குறித்த தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். யுனெஸ்கோ அங்கீகாரத்தின் பலனாக அதிகரிக்கும் சுற்றுலாவை முறையாக நிர்வ கித்து, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். சர்வதேச அங்கீகா ரத்தின் மூலம் கிடைக்கும் நிதியை சரியாகப் பயன்படுத்தி, கோட்டையின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு வேலைகளை மேற்கொள்ள வேண் டும்.