articles

img

நாளை துவங்கும் மாதர் சங்க மாநாடு மார்த்தாண்டத்தில் ஒலிக்கும் விடுதலைக் குரல்

நாளை துவங்கும் மாதர் சங்க மாநாடு மார்த்தாண்டத்தில் ஒலிக்கும் விடுதலைக் குரல்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 24-27 வரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் எழுச்சியோடு நடைபெற இருக்கி றது. தமிழகத்தில் மாதர் சங்கம் துவங்கி அரை நூற்றாண்டை நிறைவு செய்யும் இம்மாநாடு வர லாற்று முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் 7 லட்சம் பெண்களை உறுப்பினர்க ளாகக் கொண்ட மாதர் சங்க மாநாட்டுக்கான வர வேற்புக் குழு கூட்டமும் தயாரிப்பு பணிகளும் மும்முர மாக நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்களும் வீடுகள்தோறும் உண்டியல் வசூல் இயக்கமும் நடைபெறுகின்றன. 17 கருத்த ரங்கங்கள் மாவட்டங்களில் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன.

மோடி அரசின் மனுவாத தாக்குதல் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த பதினொரு ஆண்டுகளாக, போராடிப் பெற்ற பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மனுஸ்மிருதி கோட்பாடு களை அமல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது பாஜக அரசு. “பெண்களுக்கு உரிமைகள் இல்லை, அனைத்து முடிவுகளும் ஆண்களால் எடுக்கப்பட வேண்டும், பெண்களை கண்டிப்பான கண்காணிப்புடன் வைத்தி ருக்க வேண்டும், கணவன் குடிகாரனாக இருந்தாலும் பெண் அவனை வணங்க வேண்டும்” என்பது போன்ற பிற்போக்கு சித்தாந்தத்தை திணிக்கிறது. 33% இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அது நடைமுறை க்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஒரு பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதியாக்கி மார்தட்டிக்கொண்டா லும், புதிய நாடாளுமன்றத்தை அதே பெண் ஜனாதி பதி திறந்து வைக்க அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரச் சீரழிவும் வேலையிழப்பும் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் கடு மையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. பண  மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏராளமான சிறுகுறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகின.

கிராமப்புறங்க ளில் 65 லட்சம்  பெண்களும், நகர்ப்புறங்களில் 23 லட்சம் பெண்களும் வேலை இழந்துள்ளனர்.  வேலையின்மை விகிதம் 2012இல் 9.7%ஆக இருந்ததி லிருந்து 2018இல் 17.3%ஆக உயர்ந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது மாநில அரசுக ளுடன் கலந்தாலோசிக்காமல் திடீர் முடிவெடுத்ததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். 4,520 தொழில்கள் முடங்கின. குடும்ப வருவாய் இழப்பால் பல பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தி வேலைக்குத் தள்ளப்பட்டனர். கடந்த ஆறு ஆண்டு களில் குழந்தை உழைப்பு அதிகமாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி, சுகாதாரம் அனைத்தும் தனியார்மயமாகும்போது நிரந்தர பணியி டங்கள் ஒப்பந்த வேலைகளாக மாற்றப்படுகின்றன. தூய்மைப் பணியில் 80% பெண்கள் ஈடுபடுகின்றனர். இதுவும் இன்று அவுட்சோர்சிங் செய்யப்படுவதால் குறைந்த கூலி, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. கேரளாவில் சிலந்தி வடிவ ரோபோவைக் கொண்டு இப்பணியை செய்யும்போது, பிற மாநிலங்களில் பெண்கள் இந்த வேலைக்குத் தள்ளப்பட்டு  மோசமான நிலையில் உள்ளனர். சமூக, கலாச்சாரத் தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீரில் பிரிவு 370 -ஐ ரத்து செய்த பின்னர்  ஊரடங்கு, இணைய சேவை துண்டித்தல், மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி பெண்கள் சொல் லொணா துயரத்தையும் பாதுகாப்பின்மையையும் அனுபவித்தனர். குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை ஒன்றிய அரசு வன்முறையால் ஒடுக்கியது. வெறும் 15 பெண்களுடன் துவங்கிய போராட்டம் ஒரு கிமீ தூரத்திற்கு பந்தல் போடும் அளவுக்கு ஆயிரக்கணக் கான பெண்கள் பங்கேற்ற போராட்டமாக மாறிய வரலாற்றை, ஒடுக்குமுறையால் மறைக்க முடியாது. மணிப்பூரில் குக்கி-மெய்டெய் மோதலின்போது இரு குக்கி இனப் பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட பயங்கரம் வெளியில் பரவிய பிறகும் பிரதமர் மோடி மௌனமாகவே இருந்தார். பெண்கள் கடும் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். தேவா லயங்கள் சூறையாடப்பட்டன. ஹிஜாப் அணிய தடை போடுவதன் மூலம் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு தடை போடும் கொடுமையும் நடக்கிறது. பெண்கள் மீதான கொடூர வன்முறை ஜம்மு - காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொல்லப் பட்ட கொடூரச் சம்பவம் கோவிலுக்குள் நடந்தது. இன்றுவரை இதுபற்றி மோடி வாய் திறக்கவில்லை. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் பெண்களுக் கெதிரான வன்முறைகளில் முதலிடம் வகிக்கிறது

. ஹாத்ரஸில் தலித் பெண் நான்கு உயர்சாதி ஆண்க ளால் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை யுண்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் பொய் சொல்வதாக கூறி குற்றவாளிகளை பாதுகாத்தது பாஜக அரசு. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு வின் குடும்பத்தை அழித்து, அவரை பலாத்காரம் செய்து குழந்தையைக் கொன்ற குற்றவாளிகளுக்கு சுதந்திர தினத்தன்று விடுதலை கிடைத்தது. மாலை போட்டு குற்றவாளிகள் வரவேற்கப்பட்டனர். மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆதாரத்துடன் புகாரளித்தபோதும் மோடி மௌனமாகினார். தில்லியில் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அவர்களைத் தாக்கியது. குற்றவாளி பிரிஜ் பூஷண் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. வரதட்சணை தடுப்புச் சட்டம் செயலற்றுள்ளது. பெண் கருக்கலைப்பு என்பது, சட்டத்தையும் மீறி நடந்துகொண்டிருக்கிறது, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாகவே நடக்கின்றது.  இத்தகைய சூழுலில் நாடு முழுவதும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம், களத்தில் இல்லாத இடமே இல்லை என்று, தலை நிமிர்ந்து சொல்வோம். தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தின் போராட்டக்களம் தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அரை நூற்றாண்டுகளாக பல்வேறு போராட் டங்களில் முன்னணியில் நின்றுள்ளது. வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்கள் வீதிக்கு வந்து மதுக்கடை களுக்கு எதிராக போராட வைத்த வரலாறு இதற்கு உண்டு. தீண்டாமைக் கொடுமைகள், சாதி மத ஆண வக்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைக்கு எதி ரான போராட்டங்களில் தொடர்ந்து களத்தில் நிற்கிறது. உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் அகற்றும் போராட்டம் போன்ற முக்கியமான சம்பவங்களில் பங்கு கொண்டது.

சிதம்பரம் பத்மினி வழக்கு, வாச்சாத்தி, சின்னாம் பதி, பொதும்பு பள்ளி தலைமையாசிரியருக்கு சிறைத்  தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கு, அருப்புக் கோட்டை நிர்மலா தேவி வழக்கு, பொள்ளாச்சி வழக்கு, கலாஷேத்ரா மாணவிகள் மீதான பாலியல் துன் புறுத்தல் வழக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு போன்ற எண்ணற்ற பல்வேறு சம்பவங்களில் முக்கிய பங்கு வகித்தது. “உணவு, வேலை எங்கள் உரிமை”, “வீடு கொடு வாழ விடு” போன்ற முழக்கங்களுடன் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதாவில் கையெழுத்திட மறுத்த கவர்னரை கண்டித்து மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாட்க ளை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்றும் பல ஊர்களில் பெண்கள் யாராவது பாதிப்புக்குள்ளாகிவிட்டால், “உடனே மாதர் சங்கத்தி னரிடம் சொல்லுங்கள்” என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது. பெண்ணியப் புரட்சியின் அழைப்பு “முதலாளித்துவ அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால் இருநூறு ரூபாயோடு வரலாம். ஜனநாயக மாதர் சங்க கூட்டத்துக்கு சென்றால் அரசியலோடு வர லாம்” என்கிற மாற்றத்தை பெண்கள் மத்தியில் மாதர் சங்கம் உருவாக்கியுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெண்க ளுக்கான தனி மருத்துவமனைகளை அறிவித்த கையோடு இம்மாநாட்டில் சிறப்புரையாற்ற இருக்கிறார். சாதி, மத, இனப் பாகுபாடு, பாலின பாகுபாட்டுக்கு எதிராக தொடர்ந்து இயங்கி, நாட்டில் சமமற்ற சமூக, பொருளாதாரத் தளத்தில் மாற்றத்தை உண்டாக்கும் நெடிய போராட்டத்திற்கு அடித்தளம் இடும் மாநாடாக 17ஆவது மாநில மாநாடு அமைய இருக்கிறது. மதவெறியை வேரோடு சாய்ப்போம், பெண்கள் குழந்தைகளின் மீதான வன்முறையற்ற தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற இலக்குகளுடன் இம்மாநாடு பெண்ணியத்தின் எழுச்சியை அறிவிக்கிறது.