பாலஸ்தீனம் மற்றும் காசா பகுதியில் நடத்தப்படும் இனப்படுகொலைகளை நியாயப்படுத்த இஸ்ரேலின் அதிகார வர்க்கம் மனிதத்தன்மையற்ற கொடூர மான வார்த்தைகளை அப்பட்டமாக பிர யோகிக்கின்றனர். “மனித மிருகங்களோடு போரிடுகிறோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட். “பூமியி லிருந்தே காசா எனும் ஒரு பகுதியை துடைத் தெறிய வேண்டும்” என்கிறார் நிதி அமைச்சர் பெஜலெல் ஸ்மோட்ரிச். “காசா பகுதியில் அப்பாவிகள் என யாருமே கிடையாது” என படுகொலையை தூண்டுகிறார் அவிக்டர் லிபர்மேன். “காட்டுமிராண்டிகளுக்கெதிராக நாங்கள் யுத்தம் நடத்துகிறோம்” என்கிறார் பெஞ்சமின் நேதன்யாகு. இது அமெரிக்காவில் 1880களில் தோன்றிய யூஜெனிக் இயக்கம், பின்னர் நாஜிகளால் இனப்படுகொலைகளை அரங்கேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு முறையை நினைவூட்டுகிறது. ஒரு மக்கள் குழுவை ‘அறிவற்ற மனிதக் கூட்டம்’ என அடையாளப்படுத்தி நடத்தப்பட்ட படுகொலைகளை இது நினைவூட்டுகிறது.'
யூஜெனிக் கோட்பாட்டின் வரலாறு ‘அறிவுத்திறனில் மேலானோர்’ எனும் கருவியை இன அழிப்பு ஆயுதமாக கையில் ஏந்தியது நாஜி ஜெர்மனி. ஹிட்லர் 1925இல் எழுதிய ‘மெயின் கேம்ப்’ நூலில் இன அழிப்பிற்கு அடித்தளமிட்டார். யூதர்கள் இயற்கையாகவே பிறப்பிலேயே அறி வுத்திறனற்ற இழிபிறவிகள் என பறைசாற்றப் பட்டது. உயிரினரீதியாகவும் அறிவுத்திற னிலும் ஆரியர்களே மேன்மையானவர்கள் எனும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. 1939இல் யூதனேஷியா அல்லது T4 எனும் திட்டம் துவங்கி, ‘பிரயோஜனமில்லாதவர்கள், வாழத்தகுதியற்றவர்கள்’ என கூறி 2,50,000 பேரைக் கொன்றது ஹிட்லர் ராஜ்யம். ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்ட இனவெறி படுகொலைகளுக்கு அமெரிக்க யூஜெனிக் சட்டங்கள் முன்மாதிரியாக இருந்ததாக ஹிட்லர் தனது நூலில் போற்றுகிறார். அமெரிக்கத் துவக்ககால யூஜென்சி இயக்கம் வட ஐரோப்பியர்கள் பரம்பரையாக அறிவுத்திறன் மேம்பட்டவர்கள் என உரிமை கொண்டாடியது. அமெரிக்க பூர்வகுடிகள், கறுப்பர்கள், தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா விலிருந்து வந்தோர், உடல்குறைபாடுடைய வர்கள் மற்றும் ஏழைகள் உயிரின ரீதியாக வும் அறிவுத்திறனிலும் தாழ்ந்தவர்கள் என கருதப்பட்டனர். 1927ல் அமெரிக்க உச்சநீதி மன்றம் Buck எதிர் Bell வழக்கில் வலுக் கட்டாய கருத்தடைக்கு அனுமதி வழங்கியது. இதனால் 70,000 பேருக்கு வலுக்கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. இந்தியாவில் இனவெறி சித்தாந்தம் 1
930-1973 வரை ஆர் எஸ் எஸ் அமைப் பில் வலுவான செல்வாக்கு செலுத்திய கோல்வால்கர் தான் எழுதிய “நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசம்” எனும் நூலில், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றார். நாஜிகள் யூதர் களை நடத்தியது போல இங்கு சிறுபான்மை யினர் நடத்தப்பட வேண்டும் என ஆர் எஸ் எஸ்சின் இனவெறி கோட்பாட்டோடு இணைத்தார். முஸ்லிம்கள் தாழ்ந்த நிலை யை ஏற்றுக்கொண்டு அடிமைப்பட்ட இரண்டாந்தர குடிமக்களாக வாழ வேண்டும் என கூறினார். இப்படி உருவாக்கப்பட்ட ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற அப்பட்டமான படிநிலை கருத் தியல் வன்முறைகளையும் பிரிவினை களையும் வெகுஜன கொலைகளையும் உருவாக்கி உயர்குடி புனிதத்தையும் அவர்களுக்கு மட்டுமே தேவையான பாது காப்பு சட்டங்கள் என்ற தோற்றத்தையும் முன்நிறுத்துகிறது. பரிணாமக் கோட்பாட்டின் உண்மை அறிவுத்திறனை பரிணாம கோட்பாட்டு டன் புரிந்துகொள்வது, ‘பிறப்பால் அறிவு சார் மேன்மையானவர்கள்’ என்ற கட்டுக் கதையை அழித்தொழிக்க உதவும். டார்வி னின் பரிணாமம் குறிப்பிட்ட சமூக இனங் களுக்கானதல்ல. சுற்றுப்புறச்சூழல் அழுத்த ங்கள், உணவு கண்டுபிடிப்பு, மறு உற்பத்தி ஆகியவற்றிற்கு - உயிரினங்களின் எதிர்வினையாகும். அறிவுத்திறன் எண்ணிலடங்கா திசை களில் பரவும் பவளப்பாறைகள் போன்றது. பவளப்பாறைகள் சிறிய பாசிவகை கூட்டு யிரிகள், தழுவல், கூடி வாழ்தல், கால்சியம் கார்பனேட் சுரத்தல் மூலம் எலும்புக் கூடுகளை உருவாக்கி வளர்கின்றன. சுற்றுச் சூழலோடு இணைந்த இயங்கியலின் ஒவ் வொரு தழுவல்களும் இயற்கையின் வடிவத்தை தீர்மானிக்கின்றன. கடலில் மிதக்கும் பிளான்க்டன், ஒளியின் ஆழத்தின் அடிப்படையில் கடலின் ஆழத்தை யும் இயக்கத்தையும் தீர்மானித்து எதிரிகளி டமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள் கிறது. கடல் நத்தைகள் வெறும் 20,000 நரம்பு செல்கள் மூலம் கற்றும் நினைவில் வைத்தும் வாழ்வதற்கான வாய்ப்புகளை உயர்த்திக்கொள்கின்றன. ஆக்டோபஸ் அதன் அறிவுத்திறனையே முதன்மையான பாதுகாப்பாகக் கொண்டுள்ளது. காக்கை களும் குருவிகளும் சிக்கலான கருவிகளை யும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களை யும் கொண்டுள்ளன.
அறிவுத்திறனின் உண்மையான இயல்பு மனித இனம் சிக்கலான சமூக சூழலியல் புதிர்களை எதிர்கொள்கிறது. குழு உறவு களைக் கையாளுதல், பேச்சுகளை வெளிப் படுத்தல், வேட்டையாடுதல், பயிர் வளர்த்தல், கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற சவால்களுக்கு அவர்களின் அறிவுத்திறனே உதவியிருக்கிறது. பரிணாமம் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் பெருந் திட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடு அல்ல. இதற்கு மாஸ்டர் பிளான் என்பதெல்லாம் கிடையாது. நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்பட்டு வாழ்வியல் சவால்களை எதிர்கொண்டு தீர்வு காண்பதே பரிணாமம். அறிவுத்திறன் கற்பனையான படிநிலை பிறப்பால் நிலைநிறுத்தப்படுவதல்ல. வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடை யில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடை பெற்ற போராட்டங்களின் விளைவே ஒவ்வொரு உயிரினங்களின் அறிவுத்திற னாகும். இதை அங்கீகரிக்கும்போது, இனப்படுகொலைகளுக்கும் சுற்றுச்சூழல் நாசத்திற்கும் அடிப்படை நம்பிக்கையான ‘மேலானவர்கள்’ என்ற சித்திரமும், பரம்பரை யாக வருவதே அறிவுத்திறன் என்ற அபாய கரமான கட்டுக்கதையும் பலவீனப்பட்டு ஒழிந்துபோகும். இதைப் புரிந்துகொண்டால் தார்மீக ரீதியாக நியாயப்படுத்தப்படும் மனித இனங்களுக்குள் உருவான ஒடுக்குமுறை கண்ணோட்டம் அடியோடு நீக்கப்பட்டு மனித உயிரினங்களிடையே ஆழமான சகோ தரத்துவமும் ஒற்றுமையும் உருவாகும். பன்முகத்தன்மையுடைய அறிவுத்திறன் என்பது, படிநிலை தகுதியல்ல - வாழ்க்கைக் கான இயங்கியல் செயல்முறைகளின் விளைவே அறிவுத்திறன்! பீப்பிள்ஸ் டெமாக்ரசி தமிழில் சுருக்கம் : எஸ்.எம்.இப்ராகிம், கம்பம்