articles

img

மாதவிடாய் குற்றமல்ல எவரெஸ்ட் உச்சியில் ஏறி உரக்கச் சொன்ன பெண்

மாதவிடாயின் போது நேபாளத்தில் இருக்கும் பல பெண்கள் வீட்டைவிட்டு வெளியே இருககும் சிறிய குடிசைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். இந்தப் பழக்கத்தை ‘ச்சாவ்படி’ என்ற சொல்கிறார்கள். இப்படி மாதவிடாயின்போது விலக்கி வைக்கப்படுவதற்கு எதிராக அந்நாட்டில் பல பெண்கள் தனிப்பட்ட முறையிலும், சமூக அளவிலும் போராடி வந்திருக்கின்றனர். இன்னும் போராடி வருகின்றனர். அதில் ஒரு பெண் இந்தப் போராட்டத்தை இமயம் வரை எடுத்துச் சென்றிருக்கிறார், அவர் பெயர் சங்கீதா ரோகாயா. அவர், இவ்விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘ச்சாவ்படி முறையை ஒழிப்போம்’ என்ற பதாகையுடன் எவரெஸ்ட் நிகரத்தில் ஏறி உரத்து முழங்கியிருக்கிறார். இந்த உயரப் போராட்டம் அண்மையில் நடந்த மலையேற்ற சீசனில்தான் எவரெஸ்ட் சிகரத்தில் அரங்கேறியது.