articles

img

தேர்தலில் போட்டியின்றி தேர்வு... ‘மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது’ போன்றது - அசோக் லவாசா

மக்கள் எவரும் வாக்களிக்கவில்லை என்றா லும், ‘சுதந்திரமாக, நியாயமாக’ தேர்தல் நடைபெற்றது என்ற மாயையை ஏற்படுத்தியுள்ள சூரத், அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் விவாதங்களுக்கான அழைப்புகளை விடுக்கின்றன.       தற்போதுள்ள தேர்தல் சட்டங்கள் மற்றும் நடை முறைகளில் போட்டியின்றி ஒருவர்  தேர்ந்தெடுக்கப் படுவது சட்டப்பூர்வமான காரியமாகவே இருக்கிறது.  அது மெய்சிலிர்க்கவும் வைக்கிறது வாக்குச்சீட்டில். ஒரு வருடைய பெயர் மட்டுமே இடம் பெறும் காரணத்தால் அவரால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மக்க ளின் நிகரற்ற பிரதிநிதியாகி விட முடிகிறது. தேவை யான முயற்சிகள் எதுவுமின்றி சாதித்துக் காட்டும் செயலாகவே அதுபோன்ற வெற்றி அமைகிறது.                      

தேர்தல் நடத்தை விதிகள் - 1961ல் உள்ள பதினொன்றாவது விதி 

‘(1) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை யைக் காட்டிலும் குறைவாக அல்லது அதற்குச் சமமாக இருக்கும்பட்சத்தில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலின் நகலை தேர்தல் நடத்தும் அலுவலர் தன்னுடைய அலுவலகத்தில் குறிப்பிடத்தக்க ஓரிடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அவ்வாறு ஒட்டிய பிறகு இரண்டா வது துணைப் பிரிவு அல்லது விதி 53இன் மூன்றா வது துணைப் பிரிவின் கீழ் 21 முதல் 21 பி வரை யிலான படிவங்களில் பொருத்தமானதாக உள்ள படிவத்தில் தேர்தல் முடிவை அந்த அலுவலர் அறிவித்திட வேண்டும்....’    எனக் கூறுகிறது.  

ஜனநாயக உரிமைகள், செயல்முறைகள்

தேர்தலின்றி அதுபோன்று அறிவிக்கப்படும் முடிவுகளில் வெற்றியாளர் என்று ஒருவர் இருப்பார். ஆனாலும் தோற்கடிக்கப்பட்டவர் என்று யாரும் இருப்பதில்லை. தேர்தல் விதிகளில் வேட்புமனு நிரா கரிக்கப்பட்டவர்கள், தாமாக முன்வந்து வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற முடிவு செய்தவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. சூரத் மக்களவைத் தொகுதியில் இரண்டு வேட்பா ளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, எட்டு பேர் தங்கள் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்ட சமீ பத்திய நிகழ்வை இங்கே நினைவில் கொள்ளலாம்.  தேர்தல்களே இல்லாமல் அருணாச்சலப் பிரதேசத்திலும் பத்து சட்டமன்ற இடங்கள் கைப்பற்றிக் கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951இன் 53ஆவது பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது:             ‘(1) நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை யைக் காட்டிலும்  போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  (2) வேட்பாளர்களின் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும் போது தேர்தல் நடத்தும் அலுவலர்  அந்த இடங்களை நிரப்பும் வகையில் வேட்பாளர் கள் அனைவரையும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் என்று உடனடியாக அறிவிக்க வேண்டும்’     தேர்தலில் யாரும் போட்டியிடாமல் அல்லது வாக்காளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்து தங்கள் பிரதிநிதியாக ஒரு வரைத் தேர்ந்தெடுக்கத் தவறினால்... காலியிடத்தை நிரப்பத் தவறினால் என்ன நடக்கும் என்ற கேள்வி  இங்கே எழுகிறது. 

ஒரேயொரு ஒற்றை வேட்பாளர் என்று வரும் போது தன்னுடைய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து வாக்காளர் (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வாக்காளர் என்பவர் ‘தற்போது நடைமுறையில் உள்ள அந்தத் தொகுதி யின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர், எந்தவொரு தகுதியிழப்புக்கும் உட்படாதவர்’ என்பவராக வரையறை செய்யப்பட்டுள்ளார்) ஒரு வகையில் விலக்கியே வைக்கப்படுகிறார். தொகுதி மக்களிடமிருந்து ஒரு வாக்கைக்கூட பெறாத ஒருவர் அந்தத் தொகுதியின் சார்பாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் உரிமையைப் பெறுகிறார்.       ஒரு சில வேட்பாளர்களால் லட்சக்கணக்கான வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் வழியில் தேர்தல் செயல்முறையைக் கட்டுப்படுத்த அல்லது கையாள முடியும் என்பதாக இத்தகைய நடைமுறை யை எடுத்துக் கொள்ளலாமா?  மிக அபூர்வமான சூழலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அனைவராலும் (அவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பத்தாயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் இருந்தாலும்) இந்த தேர்தல் அமைப்பில் இதுபோன்று பங்கேற்க முடியும். அவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் தற்போதுள்ள செயல்முறைக்கு இணங்கிச் செல்லும்  அந்த வேட்பாளர்களால் நூறு கோடி வாக்காளர்களின் சட்டப்பூர்வ உரிமையை முற்றிலுமாக மறுத்து, ஜனநாயக உணர்வுகளைச் சிதைத்து விட முடியும்.  இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூற முடியாத அளவிற்கு நடப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாக உள்ள இந்த வாய்ப்பைச் சரிசெய்ய என்ன செய்வது?         போட்டியில் வேட்பாளர்கள் யாரும் இல்லாத போது, வாக்காளர்களுடைய உரிமை மறுக்கப்படு கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் ஜனநாயகச் செயல்முறையின் நோக்கம் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தால் மட்டுமே நிறைவேற்றப்படும். நீங்கள் யாருக்காவது உங்கள் வாக்கைச் செலுத்த வேண்டுமென்றால், உங்களிடம் யாராவது வந்து வாக்கு கேட்டே ஆக வேண்டும்.    

தேர்தலில் வேட்பாளருக்கே முக்கியத்துவம்  

உண்மையாகப் பார்த்தால் இந்த தேர்தல் அமைப்பு முற்றிலும் வேட்பாளர்களுக்கு ஆதர வாகவே இருக்கிறது. மக்களின் தேர்தல் புறக்கணிப்பை, வேட்பாளர்கள் அனைவரும் பூஜ்ஜியம் வாக்கைப் பெறுகிறார்கள் என்றே மக்கள்  பிரதிநிதித்துவச் சட்டம் கருதுகிறது. எனவே  ‘சமமான வாக்குகள்’ பெறுவது தொடர்பான 65ஆவது பிரிவில் அந்த நிலைமையைக் கையாளுகிறது.  குறிப்பிட்ட அந்தப் பிரிவில் “வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வேட்பாளர்கள் சம வாக்குகளுடன் இருப்பது கண்டறியப்பட்டு, கூடுதலாக ஒரு வாக்கு  சேர்த்தால் அந்த வேட்பாளர்களில் ஒருவர் தேர்ந்தெ டுக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்றால், அந்த வேட்பாளர்களுக்கு இடையே சீட்டைக் குலுக்கிப் போட முடிவு செய்து, சீட்டுசாதகமாக விழும் வேட்பா ளர் கூடுதல் வாக்கைப் பெற்றார் என்று கருதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது. மக்கள்  தேர்வு செய்திட உதவுவதற்கு மாறாக, தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்காத மக்களை யார் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் கண்டறிவதாக தேர்தல் அமைப்பின் நோக்கம் மாற்ற மடைகிறது. இந்த இடத்தில் ‘மக்களால், மக்களு க்காக நடத்தப்படும் மக்கள் அரசு’ என்று ஜனநாய கத்தை வரையறுப்பது முரண்பாடாகவே உள்ளது.          

வேட்புமனுவை யாருமே தாக்கல் செய்யாத நிலைமையில் இன்னொரு முறை மீண்டும் அறிவிப்பை வெளியிட வேண்டுமென்று கூறும் மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், திரும்பவும் இரண்டாவது முறை யாக அதே போன்று நடந்தால் செய்ய வேண்டி யவை பற்றி எதுவும் கூறாமல் தவிர்க்கிறது.  வேட்பாளர் களால் தேர்தல் நடைமுறையை ரத்து செய்ய முடிகின்ற போதிலும், வாக்காளர்களால் கூட்டுச் சேர்ந்து  அவ்வாறு செய்து விட முடிவதில்லை.        அதிகம் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுகிறார் என்று தற்போது நடைமுறையில் இருக்கின்ற முறையை மாற்றி, வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தபட்ச சதவிகித வாக்கைப் பெற வேண்டும் என்று திருத்திக் கொள்ளலாமா? இரண்டாவது முறையும் எந்தவொரு வேட்பாளரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை என்றால் அரசைக் கலந்தாலோசிக்காமல் இந்தியக் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படும் தகுதியுள்ள ஒருவரை அந்த இடத்திற்கு நியமனம் செய்து கொள்ளும் வகையில் அந்தக் காலியிடத்தை மாற்றிக் கொள்ளலாமா?           இதுபோன்ற கேள்விகள் பரந்த விவாதத்திற்கான அழைப்பை விடுக்கின்றன. பயத்தால் அடிபணிந்து போவது அல்லது ஆதரவான நடவடிக்கைகளால் தள்ளாடுவது என்று வாக்களித்து வருகின்ற வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்காமலேயே தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடத்தப்பட்டது என்று  மாற்றிக் காட்டுகின்ற ‘மழையால் ஆட்டம் நிறுத்தப் பட்டது’ அல்லது ‘வஞ்சமாக வெல்வது’ போன்ற  வாய்ப்புகள் உருவாவதை அத்தகைய விவாதங்களின் மூலமாகத் தவிர்த்து விட முடியலாம்.      

நன்றி: தி இந்து
தமிழில் சுருக்கம் : தா.சந்திரகுரு

;