articles

img

வங்கம் நிச்சயம் வழிகாட்டும்

கேள்வி : கடந்த 44 ஆண்டுகளில் முர்ஷிதாபாத் தொகுதி யிலிருந்து 10 முறை இடதுசாரிகளும், 2 முறை காங்கி ரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.  2019இல் மட்டும் தான் திரிணாமுல் காங்கிரசால் முதன்முறையாக இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற முடிந்தது.  கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது பெரும்பா லும் இத்தொகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.  2011ஆம் ஆண்டில் மார்க் சிஸ்ட் கட்சி இம்மாநிலத்தின் அதிகாரத்தை இழந்த திலிருந்து கட்சி இத்தொகுதியில் தனது ஸ்தாபன பலத்தை எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளதா? 

முகம்மது சலீம் : முர்ஷிதாபாத் மாவட்டம் என்பது திரி ணாமுல் காங்கிரசின் தாக்குதலை எதிர்த்து நாங்கள் போரிடும் களமாக மட்டுமில்லை.  மாறாக மேற்கு வங்கத்தில் எங்களது கட்சி ஸ்தாபன ரீதியாக மீண்டெழுந்து வருவதை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.  நாங்கள் முன்னிலையில் உள்ள 5 மாவட்டங்களில் முர்ஷிதாபாத் மாவட்டம் ஒன்றா கும்.  பஞ்சாயத்து தேர்தல்களின்போது இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள், செயல்வீரர்கள் மற்றும் தலைவர்கள் கை கோர்த்து போராடினர்.  காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் தலையீடு பாதிப்பை ஏற்படுத்தி யது.  இல்லையென்றால், மக்களிடம் சென்று அவர்களை அணிதிரட்டுவதற்கான பலம் திரிணா முல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.  தற்போது இந்த தேர்தலிலும் கூட, காவல்துறையின் எஸ்பி  அல்லது டிஐஜிதான் திரிணாமுலின் பிரச்சா ரத்திற்கு திரட்டலையும், அக்கட்சிக்கான பிரச்சா ரத்தையும் செய்து வருகிறார்கள்.  

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் வரலாறு என்பது கடந்த 44 ஆண்டுகளை தாண்டியதாகும்.  சொல்லப் போனால், ஒரு காலகட்டத்தில் ஒடிசா, வங்கம் மற்றும் பீகார் ஆகியன நவாப்களின் ஆட்சியதிகாரத்தின் கீழ் இருந்தன.  அப்போது ஆட்சியதிகாரத்தின் இருப்பிட மாக முர்ஷிதாபாத் திகழ்ந்தது.  பிளாசிப் போருக் கும், கிழக்கிந்திய கம்பெனி இங்கு வருவதற்கும் முந்தைய வரலாற்றை நீங்கள் பார்த்தால் இப்பகுதி களைச் சார்ந்த எந்தவொரு கிராமமும் ஐரோப்பிய கண்டத்திலுள்ள எந்தவொரு கிராமத்தையும் விட  மேம்பட்டதாக இருந்தன. எனவேதான் டச்சுக்கா ரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரிட் டிஷ்காரர்கள்  இங்கு வந்து இங்குள்ள வளங்களை திட்டமிட்டுச் சூறையாடினர்.    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்கின்றன.  மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காகவே அவர்கள் மம்தா பானர்ஜியை வளர்த்தார்கள்.  இதன் மூலம் தற்போது வகுப்புவாத சக்திகள் தங்களது தொடர்புகளை மேம்படுத்தியுள்ளன.  தற்போதும் கூட, சில சம்பவங்கள் பர்கானாவில் நடைபெற்றதை பார்த்தோம்.  இதனைத் தடுக்கவே நாங்கள் விரும்பு கிறோம்.  வடஇந்தியாவில் என்ன நடக்கிறது?  நாட்டின்  இதர பகுதிகளில் என்ன நடக்கிறது? மால்டா, முர்ஷி தாபாத், தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்கள் தேசப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும். ஒரு காலத்தில் அதிகாரத்தின் மையமாக இருந்த முர்ஷிதாபாத் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். 

வங்கத்திற்கு ஒரு கலாச்சாரம் உண்டு

கேள்வி : மேற்கு வங்க அரசியல் தொடர்பான செய்தி களை கடந்த 28 ஆண்டுகளாக நான் தொகுத்த ளித்து வருகிறேன்.  இந்த 28 ஆண்டுகளில், அடுத்த டுத்து உள்ள  2 தொகுதிகளாக பெஹ்ராம்பூர் தொகு தியும் முர்ஷிதாபாத் தொகுதியும் உள்ளன.  இவற்றில் பெஹ்ராம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வலுவாகவும், முர்ஷிதாபாத்தில் இடது சாரிகள் வலுவாகவும் உள்ளனர்.  இங்கு காங்கிர சும், இடதுசாரி கட்சியும் ஒருவரையொருவர் தோற் கடிக்க போராடி வந்தன.  இந்நிலையில் நீங்க ளும் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி யும் ஒன்றிணைந்துள்ள போஸ்டர்களை, காங்கி ரஸ் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதை பார்ப்பது பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.  இத்தகைய புரிதல் எவ்வாறு ஏற்பட்டது?  இது எவ்வாறு செயல் படுத்தப்படுகிறது?  

சலீம் : ஆதிர் சவுத்திரியும், முகம்மது சலீமும்  இதர தலைவர்களோடு இணைந்து  செயல்பட்டு வருகிறோம்.  இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை யும், அரசியல் சாசன மாண்புகளையும் பேணிப் பாதுகாத்திட இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது மிக முக்கியமானது என்று துவக்கம் முதலே நாங்கள் கூறி வருகிறோம்.  நமது கூட்டாட்சி கட்ட மைப்பு, நாடாளுமன்ற ஜனநாயகம், மதச்சார் பின்மை ஆகியன மிக முக்கியமானவை ஆகும்.  மற்ற பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள் வோம்.  மக்களது வாழ்வாதாரம், மக்களது துன்ப  துயரங்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்பட வேண்டும்.  

தேசத்தை துண்டாட தற்போது பிரிவினைவாத சக்திகள் எப்படி எல்லாம் முயன்று வருகிறார்கள்? இன அடிப்படையில் துண்டாட முயல்வதை மணிப்பூ ரில் பார்க்கிறோம்.  மத அடிப்படையில்  பிளவு படுத்துவதற்கான முயற்சியை காஷ்மீரில் பார்க்கி றோம்.  சைவ உணவு சாப்பிடுபவர்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என உணவுப் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் பிரிப்பதற்கான முயற்சியை வடஇந்தியாவில் பார்க்கிறோம்.  மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்கள், அதை சாப்பிடாதவர்கள் என்று முதலில் பிரித்தார்கள்.  ஆனால், இப்போது பிரதமர் மீன் சாப்பிடுவதையே குற்றம் என்கிறார்.  மேற்கு வங்கத்திற்கு என  ஒரு கலாச்சாரம் உள்ளது.  இந்தி யாவிற்கும் அப்படி ஒன்று இருந்தது.   நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எந்த உடையை உடுத்திக் கொள்கிறீர்கள், எந்த இடத்தில், எவ்வாறு  கடவுளை வழிபடுகிறீர்கள், உங்களது மொழி என்ன போன்றவற்றின் அடிப்படையில் நாங்கள் அரசியல் செய்வதில்லை.    தற்போது மேற்கு வங்கத்திற்கும் இது தான் தேவைப்படுகிறது.  காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி களும் ஒன்றிணைந்து செயல்படுவதில் முர்ஷிதாபாத் மிக முக்கியமான பங்கினை ஆற்றுகிறது.   இது சுமூ கமாக நடைபெற்று வருகிறது.  மேற்கு வங்கத்தின் வரலாற்றில் முதன் முறையாக, மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாட்டை இடது முன்னணி செய்து கொண்டுள்ளது.  12 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி யும், 30 தொகுதிகளில் இடதுசாரிக் கட்சிகளும் போட்டி யிடுகின்றன.  30இல் 23 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.  

நீங்கள் எழுப்பிய கேள்வி சரியானதே.  காங்கி ரஸ் கட்சியின் தொண்டர்களும், இடதுசாரிக் கட்சிக ளின் தொண்டர்களும் களத்தில் எவ்வாறு இணை ந்து செயல்படுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கி றீர்கள்.  ஆக இந்த முறை, இணைந்த செயல்பாடு என்பது தலைவர்கள் மட்டத்திலான கூட்டத்தில் மட்டும் இறுதி செய்யப்பட்ட முடிவு அல்ல.  குறிப்பாக  பஞ்சாயத்து தேர்தல்களின்போது பல படுகொலை கள், எண்ணற்ற கைதுகள், எண்ணிலடங்கா மூர்க்கத் தனமான வன்முறைகள் ஏவப்பட்டன. எனவே, எதிர்ப்பு மனநிலை மக்களிடையே அதிகரித்தது.  அவர்கள் ஒன்றிணைந்து எதிர்க்கத் துவங்கினர்.   அரசு நிர்வாகம், தேர்தல் கமிஷன், குறிப்பாக காவல் துறை ஆகியவற்றின் தற்போதைய நடவடிக்கை களைக் கண்ணுற்ற மக்கள், ஊழலுக்கு எதிராக, வகுப்புவாதத்திற்கு எதிராக, கிரிமினல்களுக்கு எதிரா கப் போராட ஆர்வத்துடன் முன்வருகின்றனர்.  எனவே, மேற்கு வங்க மக்களை நீங்கள் மதம் அல்லது சாதியின் அடிப்படையில் பிரிக்க முடியாது.  இவ்வா றாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணை ந்து செயல்படுவது சாத்தியமானது.  இந்த இணைப்பு கீழ்மட்டத்தில் களத்தில் தொண்டர்களிடமிருந்து உரு வாகி, தலைவர்கள் மட்டத்தில் இணைந்து செயல்பட நிர்ப்பந்தித்துள்ளது.

அனுபவங்களிலிருந்து கற்ற பாடம்

கேள்வி : உங்களது இந்த பதில் எனது அடுத்த கேள்வியை உருவாக்குகிறது.  இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தங்களது தலைவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று சொல்கிறார்களோ அவ்வாறே அவர்கள் தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என்பது தெரிந்த ஒன்றே.  ஆனால், காங்கிரஸ் கட்சி யைப் பொறுத்தவரை இதுபோன்று நடப்பதில்லை என்பதை பெரும்பாலும் நாம் பார்க்கிறோம்.  அப்படியிருக்கையில் காங்கிரஸ் ஆதரவாளர்களின் வாக்குகள் இடதுசாரிகளுக்கு கிடைக்கும் என்று உங்களுக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?     

சலீம் : கடந்த காலத்தில் 2016ஆம் ஆண்டு முதன்  முறையாக சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் தொகுதி உடன்படிக்கை செய்து கொண்டோம்.  துரதிர்ஷ்டவசமாக 2019 நாடாளுமன்ற தேர்த லின்போது அத்தகைய தொகுதி உடன்படிக்கை நடைபெறவில்லை.  நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக இந்த தேர்தலில் தொகுதி உடன் படிக்கை எட்டப்பட்டுள்ளது.  இது களத்திலிருந்து வந்த அழுத்தம்.  எனவே, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் அல்லது இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள், சொல்லப்போனால் எங்களது வாக்காளர்கள் அல்லது அவர்களது வாக்காளர்கள் ஏற்கனவே ஒன்றிணைந்துள்ளனர்.  

நாம் இப்போது உட்கார்ந்து பேசிக் கொண்டி ருக்கிற இந்த முர்ஷிதாபாத்தில் நடைபெறுகிற சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் இடதுசாரிகளின் ஆதரவோடும், இங்கு நடைபெறுகிற நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடும் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர்.   நாங்கள் ஒன்றாக பயணம் செய்கிறோம்.   ஒன்றாகப் பிரச்சாரம் செய்கிறோம்.  இது  அரசியல் ரீதியான தேவையில் இருந்து எழுந்துள்ள ஒருங்கி ணைப்பாகும்.  இதற்காக கடந்த இரண்டாண்டுகளாக நாங்கள் கடுமையாகப் பாடுபட்டுள்ளோம்.  மக்கள் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளனர்.  எனவேதான், ஊடகத்தில் ஒரு பகுதியினர் உள்ளிட்டு பல்வேறு முகமைகள் இந்த ஒற்றுமையைக் குலைக்க எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.  தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதி கூட இந்த ஒற்றுமையை சீர் குலைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால், மக்கள் உறுதியாக உள்ளனர்.  இந்த ஒற்று மையை சீர்குலைக்க எவரையும் அவர்கள் அனு மதிக்கவில்லை.  இது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சிக்கு எதிரான மக்களது ஒற்றுமையாகும்.   

மக்களோடு இரண்டறக் கலந்துள்ளோம்

கேள்வி : தேர்தல் பத்திரங்களைப் பற்றி பேசும் போது நிச்சயமாக இடதுசாரிகள் தார்மீக ரீதி யாக உயர்ந்த இடத்தில் உள்ளீர்கள்.  தேர்தல் பத்திரங்களால் ஆதாயமடைந்தவர்கள் பட்டியலில் உங்களது பிரதான எதிரிகள் இருவரும் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள னர்.  எனவே, இப்பிரச்சனை குறித்து உங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடையே எப்படி பேசு கிறீர்கள்?  மக்கள் எந்த அளவுக்கு இதைப் புரிந்து கொள்கிறார்கள்?  குறிப்பாக, மேற்கு வங்கத்தின் கிராமப்புற பகுதிகளில் இது எந்த அளவுக்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

சலீம் : மேற்கு வங்கத்தின் கிராமப்புற பின்புலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சி யும் மக்களிடையே எப்படிச் செல்கின்றன?  அதே  நேரத்தில் அபிஷேக் பானர்ஜி அல்லது மம்தா பானர்ஜி ஆகியோர் ஹெலிகாப்டரில் பறந்து செல் கின்றனர்.  மோடியோ தனி விமானத்தில் பயணிக் கிறார்.  திரிணாமுல் அல்லது பாஜகவின் தலை வர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின், அவர்க ளது அதிகாரிகளின் பாதுகாப்புப் படை புடைசூழ சென்று கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அதே நேரத்தில் நாங்கள் மக்களோடு இணைந்து நடைபயணமாக சென்று கொண்டி ருக்கிறோம்.  வேறுவிதமான ஏற்பாடுகள் எதுவும் கிடையாது.  சொல்லப்போனால், இப்படி வருபவர்க ளை உட்கார வைக்கக் கூட நாற்காலிகளை நாங்கள் இரவலாகப் பெறுகிறோம்.  இவ்வாறாக நாங்கள் மக்க ளோடு இரண்டறக் கலந்துள்ளோம்.  அபரிமிதமாக எதுவும் தேவையில்லை;  அவசியமானவை மட்டுமே தேவை என்பதே மேற்கு வங்க கலாச்சாரம் ஆகும்.  ஏனெனில், இது தேசத்தை, ஜனநாயகத்தை, பாரம் பரியத்தை, நமது ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பிரச்சனையாகும்.  சிஏஏ, என்ஆர்சி, ராமர் கோவில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்களது ஒற்று மையை சீர்குலைக்க அவர்கள் விரும்பினார்கள்.  ஆனால், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவின. வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார பாதுகாப்பு வசதி ஆகியவற்றையே மக்கள் கோருகிறார்கள்.  இவை யெல்லாம் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன.  தொழில் மயமாக்கல், குடிநீர், சாலை வசதி, பாலங்கள், ரயில் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் பின் தங்கியுள்ளன. மக்களது நோக்கம் தெளிவாக உள்ளது.  அவர்கள் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆட்சியதிகாரத்தி லிருந்து வெளியேற்றுவார்கள்.  

பாதையை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

கேள்வி : 2021இல் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) கட்சி, இடதுசாரிகள் மற்றும் காங்கி ரஸ் கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தீர்கள்.  தற்போது, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியுட னான கூட்டணியிலிருந்து ஐஎஸ்எப் வெளியேறி யுள்ளது.  மேலும், முர்ஷிதாபாத் போன்ற தொகுதி களில் அது தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.  இது இடதுசாரிகளின் தற்போதைய வாய்ப்பை பறிப்ப தற்கான முயற்சியாகவே தோன்றுகிறது.  இது எவ்வாறு, ஏன் நிகழ்ந்தது?  ஐஎஸ்எப்பின் இத்தகைய நடவடிக்கைக்கான காரணம் என்ன என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சலீம் : 2021ஆம் ஆண்டு ஜனவரியில் – அதாவது ஐஎஸ்எப் உருவாக்கப்பட்டு ஒரு மாத காலத்தில், நாங்கள் அவர்களோடு தொகுதி உடன்பாடு செய்து கொண்டோம்.  ஆனால், “இந்தியா கூட்டணி” உரு வானபோது, முதல் பிளவு வெளிப்பட்டது.  ஏனெனில், ‘இந்தியா கூட்டணியில்’ யாரெல்லாம் இருக்கிறார் களோ அவர்களோடு நாங்கள் சேர மாட்டோம் என்ற அறிவிப்பை அவர்கள் வெளியிட்டார்கள். 

அதன் பின்னர், மக்களது எண்ணங்களில் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தத் துவங்கினர்.  இரண்டாவ தாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போட்டியிடப் போவதாகவும், தங்களது உயர்மட்ட தலைவர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும் அறி வித்தனர்.  இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் உடன்பாட்டை எட்டுவதற்கு முன்னதாகவே இவர்களுக்கு தானாக முன்வந்து ஆதரவளித்தோம்.  ஏனெனில், திரிணாமுல்லின் அபிஷேக் பானர்ஜி தோற்கடிக்கப்பட வேண்டும்.  ஆனால், எங்கோ, ஏதோ நடந்தது.  ஏராளமான முகமைகள், அதிகளவி லான ஆதாயங்கள், பெருமளவிலான பணம் இதில் விளையாடுகிறது.  எனவே, எது எங்கே, எப்படி விளையா டியது என்பது குறித்து எந்தவொரு குற்றச்சாட்டையும் நான் முன்வைக்கப் போவதில்லை.  ஒட்டுமொத் தத்தில் இது ஒரு வித்தியாசமான விளையாட்டாகும்.   அதன் பின்னர், இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சி யும் சுமுகமான உடன்பாட்டை எட்டியபோது இதை உடைக்கவும் சிலர் முனைந்தனர்.  இருந்தபோதும், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைமை இந்த ஒற்றுமையை எட்டினோம்.  இந்த ஒற்றுமை எட்டப்பட்ட நொடியிலேயே, தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை துவங்கியபோது ஐஎஸ்எப் எங்களோடு இணைந்தால் அதை ஏற்பது  என்றுதான் நாங்கள் முடிவெடுத்தோம்.  ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாத சில நிபந்தனை களை முன்வைத்தனர்.  22 – 17 – 9 – 7 தொகுதிகள் அவர்களுக்கு வேண்டும் என்றனர்.  இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதி களை அவர்கள் கேட்டனர்.  எனவே, அவர்களது பாதையை அவர்கள் தேர்வு செய்தனர்.  எந்தவொரு அரசியல் கட்சியும், துவக்கி 2 ஆண்டுகளேயான இவர்களது கட்சியும், எந்த பாதையில் தற்போது பயணிக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

வேறுபட்ட கள நிலைமை''

கேள்வி : தற்போது, குறிப்பாக நீங்கள் வேட்பாளராகப் போட்டியிடும் முர்ஷிதாபாத் தொகுதியில் ஐஎஸ்எப்பால் உங்களது வெற்றிவாய்ப்பில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த இயலுமா?  

சலீம் :இந்த கூட்டணியை உடைத்து ஐஎஸ்எப் வெளியேறி யது.  எனவே, இதில் எத்தகைய பங்கு ஐஎஸ்எப்புக்கு இருக்கிறது என்பதை இதுவே தெரிவிக்கிறது.  முர்ஷிதாபாத்தின் பல பகுதிகளுக்கும், இந்த தொகுதியிலும் நீங்கள் பயணம் செய்துள்ளீர்கள்.  நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன்.  தொலைக் காட்சி பெட்டியின் திரை அல்லது செய்தித்தாள் இவற்றைத் தாண்டி வேறெங்கு நீங்கள் ஐஎஸ்எப் கட்சியைப் பார்த்தீர்கள்?  எனவே, இந்த தொகுதி யில் நடப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரி-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும் இடையே நேரடியாக நடக்கும் மோதல் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.  பாஜக கூட தனது தளத்தை இழந்துள்ளது.  எனவே,  எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.  களநிலைமை வேறுபட்டே உள்ளது.  சட்டசபையில் பாஜக பிரதான  எதிர்கட்சியாக உள்ளது.  ஆனால், களத்தில் தற்போது இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியி லிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவர் களேயாவர்.  கடந்த ஒரு மாத காலத்தில், 500 சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கும் திரிணா முல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இரவோடு இரவாகத் தாவிக் கொண்டுள்ளனர்.  எனவே, வேறெந்த அமைப்போ அல்லது தனிநபரோ இடையே வரு வதற்கு வாய்ப்பே இல்லை என மக்கள் கருது கிறார்கள்.  மக்கள் தங்களது வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை.      

தலைவர்கள் கூட்டணியல்ல; கொள்கை கூட்டணி

கேள்வி : தற்போது நான் இந்தியா கூட்டணி குறித்து  பேச விரும்புகிறேன்.  இடதுசாரிகளும், காங்கிரஸ்  கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக் கிறீர்கள்.  ஆனால், இத்தகையதொரு கூட்டணியை அமைப்பதில் ஆரம்பகட்டத்தில் முன்னணியில் இருந்த மம்தா பானர்ஜி, பெருமளவில் இதிலிருந்து பின்வாங்கி வருகிறார்.  எந்த அளவிற்கு என்றால், கூட்டணியைப் பொறுத்தவரை இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசி வரு கிறார்.  தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து  கொண்டு, மாநிலத்தில் அதில் இல்லாமல் அவர்  இருப்பது பற்றி தங்களது கருத்து?  இது மக்களிடையே சிறிது குழப்பத்தை ஏற்படுத்தாதா?

சலீம் : மம்தா மட்டுமல்ல, நிதிஷ்குமார் கூட முக்கிய பங்காற்றினார்.  சொல்லப்போனால், முதல் கூட்டமே பட்னாவில் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிதிஷ் குமார் அல்லது மம்தா பானர்ஜி, ஜேடியு போன்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எல்லாம் பாஜகவின் இயல்பான கூட்டாளிகள், விசித்திரமான கூட்டாளிகள் அல்லது சாத்தியமான கூட்டாளிகள்  என்றே நான் குறிப்பிடுவேன்.  

மம்தா எந்த கட்டத்தில் இருக்கிறார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று நீங்கள் தற்போது எண்ணிப் பாருங்கள். ஏனெனில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலின் பேரிலேயே காங்கிரஸ் கட்சியை பிளந்தார்கள்.  அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வளர்த்தார்கள்.  காங்கிரஸ் கட்சி  இல்லாத இந்தியாவை அவர்கள் உருவாக்க விரும்பி னார்கள்.  எனவே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  நாட்கள் செல்லச் செல்ல, தற்போது மக்கள் இதை உணர்ந்து வருகிறார்கள்.    ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும்  மேற்கு வங்கத்தில் வளர்ச்சி பெற அவர் வழி வகுத்தார்.  இதற்கு முன் எப்போதும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட பாஜகவிற்கு மேற்கு வங்கத்தில் இருந்ததில்லை. அந்த நிலையில் மாற்றம் ஏற்படுவதில் மம்தா பானர்ஜி  தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார்.  இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், பாஜகவிற்கும் பலனளித்துள்ளது.   எனவே, இந்தியா கூட்டணி உருவானபோது, இது தேசிய அளவிலான கூட்டணியல்ல – தேர்தலுக்கான கூட்டணியல்ல – இது பாஜகவிற்கு எதிரான கட்சிகளின் ஒருங்கிணைப்பாகும்;  தலைவர்கள் அல்ல – கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் துவக்கம் முதல் குறிப்பிட்டோம்.  பாஜகவிற்கு எதிரான கூட்டணியின் முகமாக யார் இருக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  ஆர்எஸ்எஸ் அமைப்பும் இதையே கேட்டது. இது ஒரு தனிநபரோ அல்லது அவரது செல்வாக்கோ அல்ல.  இது கொள்கைகள் பற்றியதாகும்.   இரண்டாவதாக, மாநில அளவிலான தொகுதி உடன்பாடு பற்றி குறிப்பிடுகையில், டிசம்பர் மாதத்திற்குள் அதை இறுதிசெய்திடுமாறு மம்தா எப்போதும் கூறி வந்தார்.  ஆனால், மாநிலத்திற்கு மாநிலம் நிலைமை வேறுபடும் என்பதில் அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு மிகத் தெளிவாக இருந்தது.  நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமை யை பாதுகாக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள் ளோம். பல்வேறு கலாச்சாரம் உள்ளடங்கியுள்ளது.  எனவே, இந்த வேற்றுமையை நீங்கள் பாதுகாக்க வேண்டுமெனில் நீங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்.  ஆனால், இது வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்க  வேண்டும்.  இதற்கான அணுகுமுறை வேறுபட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில், மணிப்பூரும் குஜராத்தும் ஒரே தளத்தில் இல்லை.  கேரளாவும் தில்லியும் ஒரே  தளத்தில் இல்லை.  எனவே, மாநிலத்திற்கு மாநிலம் உள்ள கள எதார்த்தங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதன்படி மாநில அளவிலான தொகுதி  உடன்பாடு எட்டப்பட்டது.  எனவேதான், தேசிய அளவில் எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் தனிநபர்கள் இக்கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றார்கள்.  

அலைவரிசை அறிவு ஜீவிகளை விட அதிபுத்திசாலிகள் மக்கள்

கேள்வி : மீண்டும் வளர்ச்சியடைந்து வரும் இடதுசாரி – காங்கிரஸ், குறிப்பாக இடதுசாரிகள் பற்றி பேசுகிற போது, இடதுசாரிகளும், இடதுசாரி தலைவர்களும் தங்களது பேரணிகளில், பிரச்சாரங்களில் பெருமள வில் மக்களை திரட்டுகிறீர்கள்.  தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியிலாவது மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது.  தற்போது இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு புதிய தலைமையை நீங்களும் உருவாக்கியுள்ளீர்கள்.  அவர்கள் இந்த தேர்தலில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்கள்.  இப்போது ஒரு ஊகத்திலான கேள்வியை நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.  இடதுசாரிகளின் வாக்குகள், வாக்கு சதவீதம் கணிசமான அளவிற்கு அதிகரிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?  இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவது சாத்தியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?  

சலீம் : தொலைக்காட்சி அலைவரிசையில் நிபுணர் களாக உட்கார்ந்திருக்கும் அறிவுஜீவிகளை விட தாங்கள் அதிபுத்திசாலிகள் என்பதை மேற்கு மக்கள் நிரூபித்திடுவார்கள்.  இரண்டாவதாக, மேற்கு வங்கத்தில்  ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மை யையும் மீட்டெடுத்திட, நீங்கள் வலுவான இடதுசாரி களை பெற்றிருக்க வேண்டும்.   இதற்குத் தான்  நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆக,  மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஸ்தாபன அமைப்பு மற்றும் இளைஞர்கள் தலைமையிலான ஒன்று பட்ட மக்களைக் கொண்டு இடதுசாரிகள் வளர்ச்சி யடைந்து வருகின்றனர்.  பெரும் எண்ணிக்கை யிலான இளைய தலைமுறையினர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  இன்றைக்கு ஒட்டுமொத்த பிரச்சாரத்தையும் அவர்கள் வழிநடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில், எங்களைப் போன்றவர்களும் எங்க ளது அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டு அவர்களோடு இருக்கிறோம்.    இந்த தேர்தல் என்பது இதற்கு முன்னெப்போதும் இருந்தி ராத ஒன்றாக இருக்கப் போகிறது. தேர்தல் முடிவுகள் என்பது இதற்கு முன்னெப்போதும் இருந்திராத ஒன்றாக இருக்கப் போகிறது.  இந்த தேர்தலின் இத்தகைய யூகிக்க முடியாத முடிவுக்காக அனை வரும் காத்திருக்க வேண்டும்.  

இது வாக்கு சதவீதம் பற்றிய கேள்வியல்ல.  2019, 2021, 2022 ஏன் 2023உம் கூட கடந்த காலமாகும்.  அதைப்  பற்றி மறந்து விடுங்கள்.  ஏற்கனவே பஞ்சாயத்து தேர்தல் களிலும், இடைத் தேர்தல்களிலும், நகர்மன்ற தேர்தல் களிலும் இடதுசாரிகள் – குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள் ளது என்பதை வாக்கு சதவீதத்தின் மூலம் நிரூபித்துள்  ளோம்.  இடதுசாரி – காங்கிரஸ் கூட்டாக, எவ்வாறு முன்ன ணியில் உள்ளார்கள் என்பதையும், பெருமளவில் பாஜக  தனிமைப்படுத்தப்படுவதையும் நீங்கள் காண்பீர்கள்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேவையும் இல்லாமல் போவதை நீங்கள் பார்த்திடுவீர்கள்.  

காணொலி வழி  : 
தமிழ்த் தொகுப்பு: எம்.கிரிஜா

  

 

;