articles

img

ஆளும் வர்க்கத்தின் சதிகள்; அழிவின் பிடியில் தொழில்கள்

சிஐடியு அகில இந்திய 17ஆவது மாநாடு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பொதுச் செயலாளர் தபன்சென், உலக மற்றும் இந்திய தொழிலாளர் நிலை, தொழில்களின் நிலை பற்றிய விரிவான அறிக்கையையும் சிஐடியு அமைப்பு குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தார். அதன் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர் மற்றும் தொழில்களின் நிலை பற்றி இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு விபரங்கள், இந்திய பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொடிய சுரண்டலையும், அவர்களது கூட்டுக் களவாணியாக உள்ள மோடி ஆட்சியின் நாசகரக் கொள்கைகளையும் அம்பலப்படுத்துகின்றன. அந்த அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் இங்கு தரப்படுகின்றன.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 1991 முதல் 2019 வரை 5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. அனைத்து உற்பத்தித் துறைகளிலு மாக 1991இல் 58%க்கும் அதிகமாக இருந்த தொழி லாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 2021இல் 40 சத வீதம் ஆகக் குறைந்தது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் 7% கணிசமாக வீழ்ந்துள்ளது.

வாங்கும் திறன் சமநிலையின் அடிப்ப டையில் இந்தியாவின் கீழ்மட்டத் தில் உள்ள 50% மக்கள் தொகையில் வயது வந்தோருக்கான சராசரி ஆண்டு வருமானம் ரூ.53,610 மட்டுமே. 2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கருத்தில் கொண்டால், அடிமட்ட பாதிக் குடும் பத்தின் சராசரி வருமானம் மாதத்திற்கு வெறும் ரூ.8,935 ஆக இருக்கும். இது தற்போதைய பண வீக்க சூழ்நிலையில் ஒரு குடும்பம் உயிர் வாழ்வ தற்கான அடிப்படைத் தேவையின் அளவைவிட மிகக் குறைவாகும்.

இந்தியாவின் மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் (27.9%) பல வகைகளில் வறுமையில் வாழ் கின்றனர். 22%பேர் ஒரு நாளைக்கு ரூ.160க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர். 2021ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 20 கோடி பேர் வறு மைக் கோட்டின் கீழ் விழுந்துள்ளனர்.

விவசாய நெருக்கடியின் காரணமாக ஒவ் ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். தினசரி கூலித் தொழிலாளிகளின்  தற்கொலை அதிகரித்துள் ளது. விவசாயம் அல்லாத பிரிவுகளில் பிற தொழி லாளர்களின் தற்கொலை 2019இல் 32000இலி ருந்து 2020இல் 38000 ஆகவும், 2021இல் 42000 ஆகவும் அதிகரித்துள்ளது. 

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை யின்படி, 2021ல் நடந்த தற்கொலைக ளில் 1,64,033 தற்கொலைகளில் நான்கில் ஒருவர் தினக் கூலித்தொழிலாளிகள். விவசாய நெருக்கடியும், கிராமப்புறங்களில் வேலை யின்மையும், நகர்ப்புற மையங்களில் நிச்சய மற்ற வேலையும், குறைந்த வருமானமும் இத்த கைய ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கு கின்றன.

நவீன தாராளமயத்திடம் சரணடைதல், ஏகாதி பத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட பாரபட்ச மான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சார்புக் கொள்கைகள் ஆகியவை இந்திய தற்சார்பு தொழில் மயமாக்கலின் வேர்களை ஈவிரக்கமின்றித் தாக்கு கின்றன. பொறுப்பற்ற இறக்குமதி தாராளமயமாக்கல் கொள் கைகளின் காரணமாக, நுகர்வோர் அல்லாத மற்றும் நீடித்த நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி மிகவும் சரிந்துள் ளது. உள்நாட்டு தொழில்துறை நடவடிக்கைகளுக்கு கூட நாடு இறக்குமதியை சார்ந்து இருக்கிறது. தொழில்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றிற்கு சேவை செய்யும் உள்கட்டமைப்புத் துறையை தனியார் மயமாக்கும் அழிவுகரமான செயல்பாடு ஒட்டுமொத்த பொருளாதாரச் சீரழிவுக்கு பாதையாக மாறுகிறது.

துறைமுகங்களின் கதி

முக்கிய துறைமுகங்கள் சரக்கு போக்கு வரத்தை கையாளும் திறன் 2018-19 நிதி யாண்டில் கிட்டத்தட்ட 20 லட்சம் டன்கள் அதிகரித் துள்ளது. ஆனால் இதுபோன்ற தொடர்ச்சியான நல்ல செயல்திறன் இருந்த போதிலும், வழக்கமான தொழி லாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. பெரிய துறைமுகங்களின் மேலாண்மை தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ரயில்வே மற்றும் போக்குவரத்து

ரயில்வேயானது, தனியார்மயமாக்கலுக்கு இலக்காகி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. வேலைநிலை மையைச் சீரழிக்கிறது. நன்றாகச் செயல்படும் இன்ஜின் மற்றும் கோச் உற்பத்தி ஆலைகள் ‘பொது -தனியார் கூட்டு’ என்ற வழியின் மூலம் தனியார்மய மாக்கப்படும் அபாயத்தில் உள்ளன. உள்நாட்டுத் திறன் இருந்தும் இன்ஜின்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தற்கொலை நடவடிக்கை அந்த செயல்முறையை விரைவுபடுத்தப்போகிறது. ரயில்வே துறையுடன், சாலைப் போக்குவரத்துத் துறை, பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்கு வரத்து ஆகிய இரண்டும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

கார்ப்பரேட் வசம் மின்சாரம்

ஆரம்பத்திலிருந்தே புதிய தாராளமய சீர்திருத்தத்தின் மிக மோசமான பாதிப் பாக மின்சாரத்துறை மாறியுள்ளது. மின் சார உற்பத்தியில் ஏற்கெனவே தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் அடுத்தடுத்த அரசாங்கங்களின் சட்டவிரோத ஆதரவுடன் பெரும் பங்கை ஆக்கிர மித்துள்ளனர்.

சிறு,குறு தொழிலுக்கு மரண அடி

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொ டர்ந்து சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் மரண அடியைப் பெற்றன. உள்ளீட்டு செலவு,  ஜிஎஸ்டி அதிகரிப்பு, மின்சாரம், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அபரிமிதமாக அதிகரித்த தன் காரணமாக சிறு,குறு நடுத்தரத் தொழிற் கூடங்களின் அவலநிலை தொடர்ந்து, கடுமையான பின்ன டைவைச் சந்தித்தன. சிறு மற்றும் நடுத்தர ஜவுளித் தொழிற்சாலைகள் மற்றும் துணைத் தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

சிமெண்ட் உற்பத்தி வீழ்ச்சி

இதே பிரச்சனையை முக்கிய பெரிய தொழிற் சாலைகளும் கூட எதிர்கொள்கின்றன. உதா ரணமாக, சிமெண்ட் துறையில் இந்திய நாடு, உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி யாளராக இருந்தாலும், 2019 ஆம் நிதியாண்டில் 329 மில்லியன் டன்னிலிருந்து 2021 நிதியாண்டில் 294 மில்லியன் டன்னாக உற்பத்தியில் சரிவை எதிர் கொண்டுள்ளது. இது கட்டுமானத் துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 லட்சம் வேலை பறிபோகும்

ஆட்டோமொபைல் துறையில், முடிவுற்ற ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி 2019 முதல் 2022 வரை நிலையான சரிவைக் கண்டது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை 2022இல்  13.4 மில்லியன் யூனிட்களாக இருந் தது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. இந்த துறையில் சுமார் 10லட்சம் வேலைகள் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேக்கநிலையில் பொறியியல்

இந்தியாவின் தொழில்துறைகளில் பொறியி யல் துறை மிகப்பெரியது. இது தொழில் துறையில் உள்ள மொத்த தொழிற் சாலைகளில் 27சதவீதம் மற்றும் ஒட்டுமொத்த வெளி நாட்டு பங்கேற்பில் 63 சதவீதம் ஆகும். உள்நாட்டுச் சந்தை சரிவை எதிர்கொண்டாலும், அவற்றின் ஏற்றுமதி திறன், 2018 நிதியாண்டில் 18.76 பில்லியன் டாலரிலி ருந்து 2021 நிதியாண்டில் 21.77 பில்லியன் டாலராக மதிப்பில் ஓரளவு அதிகரித்தாலும்அது தேக்கத் தையே குறிக்கிறது.

பெரும் சரிவில் ஜவுளி

33 லட்சம் கைத்தறி தொழிலாளர்கள் உட்பட சுமார் 5 கோடி தொழிலாளர்கள் பணிபுரி யும் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில், உள்நாட்டுச் சந்தை இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இதை நம்பியுள்ள தொழிலாளர்களின் ஏழ்மை அதிகரித்து வருகிறது. 2018 முதல் 2021 நிதி யாண்டில் 37 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தத் துறை கடந்த நிதியாண்டில் 30 பில்லியன் டாலர்கள் அளவிற்கு மட்டுமே ஜவுளி ஏற்றுமதி செய்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

சட்ட உரிமைகள் இல்லை

இந்த தொடர்ச்சியான நெருக்கடி நிலை காரண மாக முறைசாராத் துறையின் தொழிலா ளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள னர். முறைசாராத் துறையானது 90 சதவீதத்திற் கும் அதிகமான தொழிலாளர்களை பிரதிநிதித்து வப்படுத்துகிறது. பணி நிலைமைகளை வரையறுக் கும் சட்ட உரிமைகள் அவர்களுக்கு இல்லை. பீடித் தொழில் ஏற்கெனவே நெருக்கடியின் மத்தி யில் உள்ளது. ‘பெரிய புகையிலை நிறுவனங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் பாரபட்சமான கொள்கை கள் ஏற்கெனவே பீடித்துறையை மிகவும் கடினமான சூழ்நிலையில் ஆழ்த்தியுள்ளது. சுரங்கத்துறையில் நிரந்தரப் பணியிடங்கள் படிப்படியாக கைவிடப்பட்டு, காண்ட்ராக்ட் மயம் தீவிரமடைந்துள்ளது.

‘இ-ஷ்ரம்’ ஒரு புரளி

சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு வசதியாக, புலம்பெயர் தொழி லாளர்கள் உட்பட 28 கோடி அமைப்புசாராத் தொழிலாளர்களை ‘இ-ஷ்ரம்’ (E-Shram) போர்ட்ட லில் பதிவு செய்வது குறித்து மோடி அரசாங்கத்தால் உரக்க சத்தம் எழுப்பப்பட்டது. படாடோபமாக அறி விக்கப்பட்டது. இது ஒரு புரளி அன்றி வேறில்லை. ஏனெ னில் அனைவருக்கும் ஒருங்கிணைந்த சமூகப் பாது காப்புப் பலன்கள் பற்றி உரக்கப் பேசினாலும், இந்த அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை வகுக்க பாஜக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுத்துறையில் காண்ட்ராக்ட்மயம்

பொதுத் துறையில் உள்ள உற்பத்தித் துறை நிறுவனங்களிலும் பொறி யியல் துறை நிறுவனங்களிலும் உள்ள மொத்த தொழிலாளர்களில் ஒப்பந்தத் தொழி லாளர்களின் விகிதம் ஏற்கெனவே 50 முதல் 60சத வீதத்தைத் தாண்டியுள்ளது.  பெட்ரோலியம், பிஎச்இஎல், பவர்கிரிட், என்டிபிசி, என்எச்பிசி போன்ற சில துறைக ளில் சராசரியாக 70 முதல் 75 சதவீதத்தையும் அல்லது அதற்கு மேலும் எட்டியுள்ளது. இந்திய அரசாங்கத் தின் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த அறிக்கையின் படி, இந்தியாவில் 2015-16 ஆம் நிதியாண்டு முதல் 2019-20 நிதியாண்டு வரை பொதுத்துறை நிறுவனங்க ளில் ஒப்பந்த முறையில் உள்ள மற்றும் இதர நிரந்தர மற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை முறையே 86%  மற்றும் 178% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நிரந்தரப் பணியிடங்களின் எண்ணிக்கை 25சதம் குறைந் துள்ளது. 2000 -01 முதல் 2015-16 வரையிலான 15 ஆண்டுக ளில் அமைப்பு சார்ந்த உற்பத்தித் துறை நிறுவனங்க ளில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் விகிதச்சாரம் 15.5% லிருந்து 27.9% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேசப் பொருளாதார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சில் (ICRIER) அறிக்கை வெளியிட்டுள்ளது. தொற்று நோய்க்குப் பிந்தைய காலத்தில் ஒப்பந்தத் தொழிலா ளர்களின் விகிதாச்சாரம் இரண்டு மடங்காக அதி கரித்துள்ளது.

ஆளும் வர்க்கத்தின் புதிய சதி

‘வேலையில் இருக்கும் பயிற்சியாளர்கள்’ , ‘நீண்ட கால பயிற்சிப் பணியாளர் கள் (FTTEs), ‘நீங்கள் சம்பாதிக்கும் போதே கற்றுக்கொள்ளுங்கள்’, ‘ஜுனியர் எக்ஸிகி யூட்டிவ்கள்’, ‘குறிப்பிட்ட கால ஊழியர்கள் (FTEs)’ அல்லது ‘NEEM’, ‘NETAP’ மற்றும் ‘SITA’ திட்டப் பயிற்சியாளர்கள் போன்ற பல்வேறு அரசாங்க நிதியுத வித் திட்டங்களின் மூலம், புதிய வகையில் வெளிப்படை யாக, மிகவும் பலவீனமான நொறுங்கும் தன்மையுடன் கூடிய தொழிலாளர் படையாக அப்ரண்டிஸ்களை/பயிற்சியாளர்களை உருவாக்கி வருகிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் வெளிப்படையாகவே மிக அதிக அளவில் குறைக்கப்பட்டு வருகிறார்கள். இன்னும் சில தொழில்துறைகளில் மொத்த பணியாளர்களில் 10%க்கும் குறைவாகவே நிரந்தரப் பணியாளர்கள் உள்ளனர். ஆளும் வர்க்கத்தின் புதிய சதி என்னவென்றால், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் பிற சட்டங்க ளால் மிகவும் கடைசியாக எஞ்சியிருக்கும் தொழிலாளர் உரிமைகளையும் பறிப்பது; முக்கிய மைய உற்பத்தி செயல்முறைகளில் கூட (core production processes) அதிக எண்ணிக்கையிலான அப்ரண்டிஸ்க ளை/பயிற்சியாளர்களை ஊதியம் இல்லாமல் பணியமர்த்துவதன் மூலம் தொழிலாளர்களுக்காக ஆகும் செலவினத்தைக் குறைக்க முயல்வதாகும்.

இவை இந்தியாவின் உழைக்கும் மக்கள் மீது ஆளும் வர்க்கம் நடத்தும் மிருகத்தனமான தாக்குதலின்  வெளிப்பாடுகள் ஆகும். நெருக்கடிக்குள் சிக்கியுள்ள முதலாளித்துவ அமைப்பின் விரக்தியின் வெளிப்பாடாகும்.  இது நவீன தாராளவாத கட்டமைப்பின் நோயாகும். 

;