நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பேட்டிங் - பவுலிங் - பீல்டிங் - டாஸ் இந்த நான்கில் எது முக்கியக் காரணம் என்ற காரசார விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் நிச்சய மாக டாஸ் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா டாஸில் வெற்றிபெற்றிருந்தால்கூட அவரே கூறியதுபோல் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்திருப்பார். அப்படியானால் மற்ற மூன்றில் எது தோல்விக்குக் காரணமாக அமைந்தது. நிச்சயமாக மூன்றும்தான்.
இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கும்போது கோப்பைக்கான வரிசையில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பி ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இருந்தன. ஆனால் போட்டிகள் துவங்கிய பிறகு பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டன. நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து படுமோசமான தோல்விகளைத் தழுவி 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் பாதிவழியில் நாடு திரும்பியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் வழக்கம் போல் அரையிறுதியில் தோல்வியுற்று வெளியேறின. முதலில் இரண்டு தொடர் தோல்விகளைத் சந்தித்த ஆஸ்திரேலியா தனது மேம்பட்ட ஆட்டத்திறனால் தொடர்ந்து எட்டு வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இத்தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் பிரமிக்கவைப்பதாக இருந்தது. தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித் துவங்கிய இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை அரையிறுதி வரை யாராலும் தடுத்த நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்று முன்னேறிய இந்தியா தனது ஒவ்வொரு வெற்றியிலும் முழு மையான ஆதிக்கத்தைச் செலுத்தியது.
ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை
முதல் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி யைத் தழுவிய ஆஸ்திரேலிய அணியே இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் எதிராளியாக வாய்த்தது. கோப்பைக்கான போட்டியில் இந்தியா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் இருபது ஓவர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடியது எனலாம். டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தபோது இந்தியாவின் வெற்றி உறுதி என்று நினைக்காதவர்கள் மிகக் குறைவாகவே இருந்திருப்பார்கள்.
முதல் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி யைத் தழுவிய ஆஸ்திரேலிய அணியே இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் எதிராளியாக வாய்த்தது. கோப்பைக்கான போட்டியில் இந்தியா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் இருபது ஓவர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடியது எனலாம். டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தபோது இந்தியாவின் வெற்றி உறுதி என்று நினைக்காதவர்கள் மிகக் குறைவாகவே இருந்திருப்பார்கள்.
பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களைச் சேர்த்த ரோஹித் வெளியேறியவுடன் காற்று திசைமாறி வீசத் தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்களுக்கு நடையைக்கட்டி அதிர்ச்சியளித்தார். விராட் கோலியும் கே.எல்.ராகுலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிக் காட்டுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கிட்டத்தட்ட 17 ஓவர்களுக்கு அவர்களால் ஒருமுறைகூட பந்தை மைதானத்தின் எல்லைக்கோட்டைக் கடக்க செய்ய இயலவில்லை.
ஆடுகளத்தில் வேகம் குறைவாக இருந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் துல்லியமான தாக்குதல் இந்திய மட்டையாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அந்த நெருக்கடியிலிருந்து மீள்வ தற்கு அவர்களிடம் வேறு திட்டங்கள் இல்லாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகிப் போனது. நடுகள வீரர்கள் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்யத் தவறியதும் இந்தியாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிய சூரியகுமார் யாதவின் செயல் பாடு (28 பந்தில் 18 ரன்) விமர்சனத்திற்குள்ளாவதில் ஆச்சரியமில்லை. அனைத்திற்கும் மேலாக ஆஸ்தி ரேலிய அணியின் பீல்டிங் பிரமிக்கத் தக்கவகையில் அமைந்தது. ஆஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் தக்கவிதத்தில் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி இந்திய வீரர்களைக் கட்டுப்படுத்தினார்.
ஆர்ப்பரிப்பைத் தக்க வைக்க முடியா சோகம்
241 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டி விடலாம் என்ற முழு நம்பிக்கையுடன் பந்து வீச்சைத் துவங்கிய இந்தியா பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது அந்த நம்பிக்கையை சரிதான் என்பது போல் இருந்தது. முகமது ஷமி தனது முதல் ஓவரில் அபாயகரமான டேவிட் வார்னரை கோலியின் கைகளுக்கு அனுப்பி வெளியேற்றினார். அடுத்ததாக பும்ரா, மார்ஸையும் ஸ்மித்தையும் அவுட்டாக்கி கேலரியை ஆர்ப்பரிக்கச் செய்தார். ஆனால் அதற்குப் பிறகு அந்த ஆர்ப்பரிப்பைத் தக்கவைக்க இந்தியப் பந்துவீச்சாளர்களால் இயலாமல் போனதுதான் சோகம்.
லீக் ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஜடேஜா, குல்தீப் போன்றவர்கள் சூழ் நிலைக்குத்தக்கவாறு செயல்படவில்லை. மேலும் இந்திய அணிக்கு 6ஆவது பந்து வீச்சாளர் இல்லாத தன் குறைபாடு நன்றாகவே வெளிப்பட்டது. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாட இயலாமல் போனதும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பேசப்படுகிறது.
மேலும் லீக் ஆட்டங்களில் இந்திய அணி எந்தவித நெருக்கடியும் இல்லாமல் அனைத்து அணிக ளையும் வென்றுவிட்டு இறுதிப் போட்டியில் ஒட்டு மொத்தமாக நெருக்கடியில் சிக்கிக் கொண்டது என்று தான் கூறவேண்டும். ஆனால் ஆஸ்திரேலியா அப்படி யல்ல. அவர்கள் ஒவ்வொரு வெற்றிக்காகவும் கடுமை யாகப் போராடினார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியிலிருந்து மீண்டுவந்த அந்த மன உறுதியை (மேக்ஸ்வெல் தனி ஒருவராக வெற்றியைத் தேடித்தந்தார்) எப்படி பாராட்டாமல் இருப்பது?
மூன்றிலும்
சிறப்பான செயல்பாடு
எது எப்படி இருந்தாலும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துத் துறையிலும் மிகச் சிறப்பாக அமைந்தது என்றே கூறவேண்டும். பேட்டிங்கில் லபுசாக்னேவு டிராவிஸ் ஹெட்டும் சிறப்பான பங்க ளிப்பை செலுத்தினார்கள். ஆரம்பத்தில் சற்று தடுமாறி னாலும் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டமும் (4 சிக்ஸர்கள், 15 போர்கள் என மொத்தம் 120 பந்துகளில் 137 ரன்கள்) லபுசாக்னேவின் நிலையான ஆட்டமும் (110 பந்தில் 58 ரன்கள்) ஆஸ்திரேலிய அணியை முன்னோக் கிப் பயணிக்கச் செய்தது. பந்து வீச்சில் மிட்செல் மார்ஷூம், பேட் கம்மின்ஸும் அசத்தினார்கள்.
இறுதிப் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் கூறியதை கச்சித மாக நிறைவேற்றிக் காட்டியுள்ளார். அவர் கூறியது இதுதான் “நிச்சயமாக எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்காது என்பது தெரியும். வலுவான இந்திய அணியை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதையும் அறிவோம். இச்சூழலில் பார்வையாளர்கள் அரங்கில் நிரம்பிவழியும் இந்திய ரசிகர்களை அமைதியடைச் செய்வதுதான் எங்களின் நோக்கமாக இருக்கும்.’’
ஆட்டம் துவங்கும்போது ஆர்ப்பரிக்கும் ஒரு நீலக்கடலில் மிதக்கும் சிறு படகுபோல் காட்சியளித்த ஆஸ்திரேலிய அணி, ஆட்டத்தின் முடிவில் கடலின் ஆர்ப்பரிப்பை சமாளித்து வெற்றிகரமாகப் பய ணித்தது. மூன்றாவது உலகக் கோப்பை என்ற இந்தியா வின் கனவைத் தகர்த்த ஆஸ்திரேலியா தனது ஆறாவது கோப்பையை முத்தமிட்டது. நீலக்கடல் நிசப்த மானது.