articles

img

கை கால் விலங்குகளோடு அமெரிக்கா அனுப்பிய குரூரம்! - க.சுவாமிநாதன்

கை கால் விலங்குகளோடு அமெரிக்கா அனுப்பிய குரூரம்! - க.சுவாமிநாதன்

“மோசமான சோசலி சம் கூட மிகச் சிறந்த முதலா ளித்துவத்தை விட மேலானது” என்று மார்க்சிய தத்துவ அறிஞர் ஜார்ஜ் லூகாஸ் 1969 இல் கூறிய வார்த்தைகள் இன்றைக் கும் பொருந்துகின்றன. தற்போது டிரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் இருந்து கைகளை கால்களை விலங் கால் பிணைத்து ஆவணமற்ற வெளி நாட்டவர்களை ராணுவ விமானங்களில் ஏற்றி வெளியேற்றுகிற குரூரம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரப்பி உள்ளது. பிரேசிலுக்கு அனுப்பப்பட்ட விமானத்தில் பல மணி நேரம் தண்ணீர் கூட கொடுக்காமல் தவிக்க விட்டதால் பலர் மயக்கம் அடைந்தனர். பிரேசில் அரசு அதைக் கண்டித்த பிறகும் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுக ளுக்கும் கை கால்களை விலங்கால் பிணைத்து அனுப்பி வைக்கிற அவலம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இப்படி அனுப்பப்படுபவர்களில் பெண்க ளும் குழந்தைகளும் உண்டு. இதற்கு எதிரான இந்தியாவின் குரல் மிகச் சன்ன மானதாக இருந்தது வேதனைக்குரியது. இக்குரூரத்தின் ஆழமான வேர்களை பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.  ஜார்ஜ் லூகாஸ் 1970களில் மேற்கண்ட கருத்தை வெளியிடும் போது அவர் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளில் நிலவிய சூழலை அடிப்படையாகக் கொண்டே தெரிவித்தார். அவருடைய கருத்தை மேலை நாடுகளின் இடது சாரி வட்டாரங்கள் கூட அப்போது ஏற்க வில்லை. ஆனால் அவ்வாறு ஜார்ஜ் லூகாஸ் கூறியதற்கு இரண்டு மிக முக்கிய மான காரணங்கள் உண்டு.

இது வெறும் டிரம்ப் இசமா?

ஒன்று, தற்போது அமெரிக்கா மேற் கொள்ளும் இந்த வெளியேற்றத்தின் பின்புலத்தில் உள்ள இன அடிப்படையி லான வெறுப்பு முந்தைய சோசலிச நாடுக ளில் இருந்ததில்லை. அந்நாட்டு மக்கள் மத்தியில் இனவெறிக் கருத்துக்கள் சில வெளிப்பட்டிருக்கக்கூடும். எனினும் சோசலிச நாடுகளின் அரசுகள் அத்த கைய வெறுப்பு மனோபாவத்தை தங்க ளின் செயல்பாடுகளில் வெளிப்படுத்திய தில்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு எதிரான நிலைபாடுகளையே எடுத்தன. ஆனால் சோசலிசம் அந்த நாடுகளில் பின்னடைவைச் சந்தித்த பிறகு இத்தகைய இனவெறிச் சிந்தனைகள் முன்னுக்கு வந்தன.  இத்தகைய இனவெறிக் கருத்துக்கள் முதலாளித்துவ சமூகத்தில் அதன் உள்ளார்ந்த பண்புகளாகவும், இன்னும் சொல்லப்போனால் முதலாளித்து வத்தின் உருவாக்கமாகவுமே இருக்கின் றன. வளர்ந்த முதலாளித்துவ நாடுக ளில் சகிப்புத் தன்மை மிக்க, இனவெறி க்கு எதிரான முயற்சிகளில் ஈடுபடும் முற் போக்கு சக்திகள் மத்தியிலேயே அமெ ரிக்காவின் இந்த வெளியேற்றம் என்பது முதலாளித்துவத்துடன் இணைத்துப் பார்க்கப்படுவதில்லை. மாறாக இதை “டிரம்ப் இசம்” என்று கருதுகிறார்கள். அமெரிக்காவில் ஆட்சியை இயக்குகிற நவீன பாசிசக் குழு ஒன்றின் செயல்பா டாக மட்டும் சுருக்கிப் பார்க்கிறார்கள். “டிரம்ப் இசத்தை” அப்படியே முதலா ளித்துவத்தின் மறு உருவாக பார்க்க வேண்டியதில்லை என்பது உண்மை எனினும், முதலாளித்துவத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத, துண்டிக்கப்பட்ட நிகழ் வாக அதைப் பார்ப்பதும் தவறானதாகும்.

ஏகாதிபத்தியத்தின் விளைபொருள்

நவீன காலத்திய இனவெறி என்பது ஏகாதிபத்தியத்தின் விளைபொருள் ஆகும். முதலாளித்துவ உற்பத்தி முறை என்பதை ஏகாதிபத்தியம் இல்லாமல் இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்திற்குள் எழுகிற முற்போக்குச் சிந்தனைகள் கூட ஏகாதி பத்தியத்தை கடந்த கால வெறுக்கத்தக்க சுரண்டல் முறைமை என்று ஏற்க வில்லை. மாறாக தொலைதூர சமூகங்க ளுக்கு வளர்ச்சியையும் “நவீனத்தையும்” கொண்டு போய் சேர்த்த நிகழ்வு என்றும்  கருதுகிறார்கள். இதன் பொருள் என்ன?  அந்த தொலைதூர சமூகங்கள் தாங்களா கவே வளர்ச்சியையும் நவீனத்தையும் எட்டும் சக்தி இல்லாதவையாக இருந்தன என்பதே. அவர்களைப் பொறுத்தவரை யில் ஏகாதிபத்தியம் ஒரு தீங்கற்ற அமைப்பு. ஏகாதிபத்திய திட்டத்தோடு இணைந்த மேன்மை மிக்க இனம் தாங்கள் என்கிற பார்வை இது. ஆகவே மேலை நாடுகளில் உள்ள  முற்போக்கு சிந்தனைகளுக்கு எவ்வ ளவு நல்ல எண்ணம் இருந்தாலும் ஏகாதி பத்திய அமைப்பின் சுரண்டலை ஏற்றுக் கொள்ளாத வரை அவர்களால் இனவெ றிக் கருத்துக்களில் இருந்து தங்களை பிரித்துக் கொள்ள முடியாது. இந்த பல வீனத்தின் காரணமாகவே, ஏகாதிபத்தி யம் கட்டவிழ்த்து விட்ட அண்மைக் கால த்திய இரண்டு போர்களில், இந்த முற் போக்கு சக்திகள் தவறான நிலைபாடு களை மேற்கொண்டுள்ளன. ஒன்று, ஒட்டு மொத்த பாலஸ்தீன மக்கள் மீது ஏவி விடப்பட்ட இனப்படுகொலை. இரண்டா வது மேலை ஏகாதிபத்திய விரிவாக்க முயற்சியின் விளைவாகத் திணிக்கப்பட்ட ரஷ்ய- உக்ரைன் போர்.

“நாம் - பிறர்” கருத்தாக்கம்

இனவெறி என்பது மேலை நாடுகளின் ஆளும் வட்டாரங்களின், அவற்றுக்குள் ளே உள்ள தாராளவாத சிந்தனையா ளர்களிடம் கூட,  உள்ளார்ந்த, நீறு பூத்த பாகுபாட்டு உணர்வாகவே பதிந்துள்ளது. முதலாளித்துவ நெருக்கடி காலங்களில் இத்தகைய “பிறர்” கருத்தாக்கத்திற்கு ஏகபோக மூலதனம் ஊக்கமளிக்கிறது. “குடியேறியவர்கள்” மீது வெறுப்பு அரசி யலை கட்டவிழ்த்து விடுகிறது. தனது மேலாதிக்கத்திற்கான சவாலை எதிர்கொள்ளவும், உழைப்பாளி மக்கள்  மத்தியில் பிரிவினைகளை உருவாக்க வும் இத்தகைய “பிறர்” அரசியல் அவர்க ளால் கையாளப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முந்தைய சோசலிச நாடுகளில் ஆட்சியில் இருந்த அரசியல் சக்திகள் இனவெறிக்கு முற்றிலும் எதி ராக இருந்தன. இனவெறி குறித்த வெளிப் பாடுகளை அவை எதிர்கொண்டு எழாமல் பார்த்துக் கொண்டன. இதைக் கூட பலர் திணிப்பு என்று சொல்வார்கள். ஆனால்  இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய மான அம்சம் எதுவெனில், “டிரம்ப் இசம்” போன்ற நிலைபாடுகள் வளர்வதற்கான எந்த வாய்ப்பும் அந்த சோசலிச சமூகங்க ளில் தரப்படவில்லை.

மண்ணின் பக்குவம்

இரண்டாவது மிக முக்கியமான வித்தி யாசம் எதுவெனில், அன்றைய சோசலிச நாடுகளில் இத்தகைய “பிறர்” என்கிற வெறுப்பு அரசியல் வளர்வதற்கான சூழலே இல்லாமல் பார்த்துக் கொள்ளப் பட்டதுதான். அதாவது, வேலையின்மை ஒழிக்கப்பட்டு முழு வேலை வாய்ப்பை  நோக்கி அந்த சமூகங்கள் நகர்ந்ததுதான். இதனால் குடியேறியவர்களுக்கு எதிரான வெறுப்பு எண்ணங்கள் வளர்வதற்கான சூழல் அங்கே தடுக்கப்பட்டது. இப்போது ஏன் மூன்றாம் உலக நாடு களின் மக்கள் அமெரிக்கா நோக்கி நகர முனைகிறார்கள்? அவர்கள் பிறந்த நாடு களில் நிலவும் உச்சபட்ச வேலை யின்மையே. இப்படி புலம்பெயர்ந்தவர் கள் எல்லோரும் ஏதிலிகள் என்று கூற முடி யாது. ஏனெனில் அமெரிக்காவுக்குள் “கழுதை வழி” நுழைவதற்கு இடைத்தர கர்களுக்கு அவர்கள் 45 லட்சம் வரை தர வேண்டி இருக்கிறது. “கழுதை வழி” என்பது சட்டவிரோதமாக நுழைவதற் கான பாதைகள் ஆகும். பல நாட்கள் உணவு கூட இல்லாமல் பாம்புகளும் முத லைகளும் நிறைந்த பகுதிகள் வாயிலாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப் பட்டதாக குடியேறியவர்கள் தெரிவிக்கிற கதைகள் மிக சோகமானவை.  அவர்கள் அவ்வாறு நகர்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அதிக வருமானம் கொண்ட வேலை வாய்ப்புகள் சொந்த நாடுகளில் இல்லா தது. இரண்டாவது சொந்த நாடுகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அவர்க ளுக்கான பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவதாக இல்லை என்கிற அதிருப்தி. சொந்த நாடுகளின் முதலா ளித்துவக் கட்டுமானம் பலவீனமாக இருப்பதே அதற்குக் காரணம். எவ்வ ளவு வேகமாக ஜி.டி.பி வளர்ச்சி இருக்கி றது? எவ்வளவு டிரில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக அந்த ஜி.டி.பி வளர் கிறது என்பதையெல்லாம் கடந்து அவர்களின் அதிருப்தி விஞ்சி நிற்கிறது. அதனால் ஒரு பகுதி மக்களிடம் புலம் பெயரும் விருப்பம் மேலோங்குகிறது. கூண்டு மிருகங்கள் போல... இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு களை கடந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் ஏக்கம் ஒரு பகுதி மக்களிடம் வெளிப்படுவது பேரவலம் ஆகும். இப்படி புலம்பெயரும் போது தாங்கள் மிரு கங்கள் போல நடத்தப்படுவோம், கூண்டு களில் அடைத்து சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவோம் என்ற இடர்களை அறிந்தும் இத்தகைய முயற்சி யை அவர்கள் மேற்கொள்கிறார்கள். இது மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்து வம் கட்டமைக்கப்படும் பாதையின் தவிர்க்க இயலாத விளைவே ஆகும். இன்னொரு புறத்தில் அரங்கேறுகிற வினோதமும் முக்கியமானது. பூர்வீகக் குடிகளின் நிலத்தை பிடுங்கி ஐரோப்பிய குடியேற்றங்கள் மூலமாகவே உருவெ டுத்த சமூகமாக அமெரிக்கா இருந்தா லும், ஏன் டிரம்ப் இப்படி கடுமையான அணுகுமுறையோடு “ஆவணமில்லா வெளிநாட்டவர்களை” திருப்பி அனுப்புகி றார்? இந்த கேள்விக்கு விடை, அமெ ரிக்காவில் நிலவும் அதீத வேலை யின்மையே. முதலாளித்துவ பொருளாதாரக் கருத்தாக்கங்கள் கூறுவது என்னவெ னில், அதன் நீடித்த வளர்ச்சியானது தொழி லாளர் சக்தியின் வளரும் விகிதத்தை பொறுத்தது என்பதே. இது முற்றிலும் மோசடியான முழக்கமாகும். அவர்களின் இந்த முழக்கம் உண்மையானால், வெளிநாட்டவர்களை அமெரிக்கா வர வேற்க வேண்டும். தங்கள் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அவர்களை பயன்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.  வேலையின்மை நிலவுவதால், குடியேறியவர்களுக்கு எதிராக டிரம்ப் கையில் எடுத்துள்ள சாட்டை பிரபலமாகி உள்ளது. இதில் வருந்தத்தக்க முரண் என்னவெனில், ஜெர்மனியின் மிக முக்கியமான இடதுசாரிக் கட்சியான, “சஹ்ரா வாகன்நெக்ட்” (Sahra Wagen Knect) குடியேறியவர்களுக்கு எதிராக எடுத்துள்ள நிலைபாடு ஆகும். ஜெர்மனி யின் வலதுசாரி நிர்வாகத்தின் நிலை பாட்டில் இருந்து எந்த வேறுபாடும் அதற்கு இல்லை. இந்த இடதுசாரி கட்சி தனது தாய் இடதுசாரி அமைப்பான “டி லிங்கே” (Die Linke) நேட்டோ போர்களில் எடுத்த ஆதரவு நிலைக்காக உடைத்துக் கொண்டு வெளியே வந்த கட்சியாகும். இருந்தா லும் வேலையின்மையின் உச்சம் அவ்வளவு ஊடுருவி இருக்கிறது.  பிறந்த நாட்டிலும், குடியேறிய நாட்டி லும் பாதிப்புகளை உருவாக்கியி ருக்கின்றன. முதலாளித்துவத்தின் இருப் போடு சேர்ந்தே வருகிற வேலையின்மை, நெருக்கடி காலத்தில் தற்போது மிகக் கடுமையான வடிவங்களை எடுக்கிறது. இதுதான் மனிதாபிமானமற்ற சூழலுக்கு வேராகத் திகழ்கிறது. மக்களை கால் நடைகள் போல நடத்துவதும், கை கால் விலங்குகள் திருப்பி அனுப்புவதுமான கொடூரத்திற்கு வழி வகுத்துள்ளது.

சோசலிசத்தின் மேன்மை

இதற்கு நேர் மாறாக முந்தைய சோச லிச சமூகங்கள் இருந்தன. வேலை யின்மையிலிருந்து முற்றிலுமாக அவை விடுபட்டிருந்தன. உண்மையில் அவை தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித் தன. ஜானோஸ் கொரனாய் என்கிற பிரபலமான ஹங்கேரி பொருளாதார நிபுணர் “கிராக்கி குறைவான” (Dema nd Constrained) அமைப்பிற்கும், “ஆதார வளங்கள் பற்றாக்குறையாக உள்ள” (Resource Constrained) அமைப்பிற்கும் இடையேயான வித்தியா சத்தை தெளிவாக எடுத்துரைத்தார். அவர் சோசலிஸ்ட் அல்ல. முதலாளித்துவம் “கிராக்கி குறைவான” (Demand Constr ained) அமைப்பாகவும், சோசலிசம் “ஆதார வளங்கள் பற்றாக்குறையாக உள்ள” (Resource Constrained) அமைப்பாகவும் அவரால் சுட்டிக்காட்டப் பட்டது. இதன் பொருள் முந்தைய சோசலிச சமூகங்களில் பற்றாக்குறை நிலவியது. ரேஷன் முறை இருந்தது. க்யூ வரிசை கள் இருந்தன. ஆனால் ஆதார வளங்கள் - தொழிலாளர் சக்தி உட்பட - முழுமை யாக பயன்படுத்தப்பட்டன. அன்றைய விலைகளில் அங்கு நிகழ்ந்த உற்பத்தி மக்கள் கைகளில் இருந்த வாங்கும் சக்தி யை விட குறைவாக இருந்தது. உண்மை யில் நவீன யுகத்தில் முழு வேலை வாய்ப்பை உறுதி செய்த சமூகங்களாக சோசலிச சமூகங்கள் மட்டுமே இருந்தன. தொழிலாளர் சக்தியை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கு பெண் தொழிலாளர் பங்கேற்பும் பெருமளவு உறுதி செய்யப்பட்டது. இது பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களையும் ஏற்படுத்தியது. வேலை வாய்ப்புகளின் மூலமாக வருமான ஈட்டல் மட்டுமின்றி, சோசலிச சமூகங்களின் தொழிலாளர்கள் சுயமரியாதையோடு வாழவும் வழி கிடைத்தது. வேலையின்மை என்கிற மரி யாதைக் குறைவான அவலத்தை அவர்கள் எதிர் நோக்கவில்லை.

மாற்றை நோக்கிய பயணம்

முந்தைய சோசலிச சமூகங்கள் வீழ்ச்சி அடைந்த பின்னர், மிகக் கடுமை யான விமர்சனங்கள் அவை மீது முன் வைக்கப்பட்டன. இடதுசாரி சிந்தனையா ளர்களே கூட அத்தகைய விமர்சனங்களை வைத்தனர். சோசலிச சமூகத்தின் வீழ்ச்சி க்குப் பின்னர் நம்மைப் போன்ற முதலா ளித்துவ சமூகங்களுக்கு மாற்றே இல்லை என்கிற எண்ணம் உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில், முதலாளித்து வத்தை எவ்வளவு காலம் நாம் கடைப் பிடிக்கிறோமோ அவ்வளவு காலம் நாம் பில்லியனர்களை உருவாக்கலாம். ஆனால் காலனி ஆதிக்கம் உருவாக் கிய “லோ கிளாஸ் இந்தியர்” என்ற அவ மானகரமான பிம்பம் நம்மை விட்டு அகலாது. சாதாரண உழைப்பாளி மக்கள் கால் நடைகள் போல நடத்தப்படுவார்கள். முன்னேற்றகரமான வாழ்க்கையை நாடி  நம் எல்லைகளைக் கடந்து செல்பவர்கள் மீண்டும் பொதி மூட்டைகள் போல திருப்பி அனுப்பப்படுவார்கள். கைகளி லும் கால்களிலும் சங்கிலிகள் பூட்டப்பட்ட அவமானகரமான பயணங்கள் அரங் கேறும். சோசலிச சமூகம் மட்டுமே நல்ல தொரு சூழலை நம் தேசத்திலும் உரு வாக்க முடியும். கடந்த கால படிப்பினை களிலிருந்து கற்றுக்கொண்டு வேலை யின்மை என்கிற அவலத்தை எதிர் கொள்ள முடியும். கூண்டு மிருகங்கள் போல் இந்தியர்கள் நாடு திரும்புவதை தவிர்க்க முடியும். (பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் பிப்ரவரி 16, 2025 பீப்பிள்ஸ் டெமாக்ரசி  இதழில் எழுதியுள்ள “The Inhumanity engendered by Capitalism” கட்டுரையின் சாரம்)