ஆறாவது அகில இந்திய மாநாடு முடிந்த ஒன்பது மாதங்க ளில் பொதுச் செயலாளர் அஜாய்கோஷ் காலமானார். தேர்தல்கள் நடந்து கொண்டிருந்ததால் உடனடியாக மத்தியக் குழு கூடி புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மூன்று மாதங்களுப்பிறகு தான் மத்தியக் குழு கூடியது. மத்தியக் குழுவில் வலதுசாரிகளும் இடதுசாரிகளும் அநேகமாக சமபலத்துடன் இருந்தனர். எனவே, பொதுச் செயலாளர் பதவி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்தப் பதவியை யார் ஏற்பது என்பதில் கடுமையான முரண்பாடு ஏற் பட்டது. இறுதியாக இரு தரப்பினரும் எனது பெயரை ஒப்புக்கொண்டனர். நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் வலதுசாரிகள் ஒரு நிபந்தனை யை முன்வைத்தனர். அதுவரை நடைமுறை யில் இருந்த ஒரே ஒரு பொதுச் செயலாளர் என்பதற்குப் பதிலாக ஒரு தலைவர், ஒரு பொதுச் செயலாளர் என்று இருக்க வேண்டும் என அவர்கள் வற்புறுத்தினர். தலைவராக எஸ். ஏ. டாங்கே தேர்ந்தெடுக்கப்படுவாரானால் என்னைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெ டுக்கலாம் என்று அவர்கள் கூறினர். அந்த அடிப்படையில் ஒரு சமரசம் ஏற்பட்டது.
சீன எதிர்ப்புப் புயல்
இது நடந்து ஆறு மாதங்களுக்குப் பின் இந்திய-சீன எல்லையில் கவலையளிக்கும் மோதல்கள் வெடித்தன. நாடு முழுவதும் சீன எதிர்ப்புப் புயல் வீசியது. அந்தப் புயலின் அலைகள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையை யும் விட்டு வைக்கவில்லை. சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தைச் செய்ய மறுத்த இடதுசாரிகள் மீது வலதுசாரிகள்-காங்கிரஸ், ஜனசங்கம் மற்றும் முதலாளித்துவ பத்திரிகைகளின் உதவியோடு ஒரு தாக்குதலைக் தொடுத்தனர். இடதுசாரிகளோடு என்னை நான் முழு மையாகப் பிணைத்துக் கொண்டிருக்க வில்லை என்றாலும்கூட, சீன எதிர்ப்பு வெறி யை விசிறிவிட்டுக் கொண்டிருந்த வலதுசாரி களோடும் நான் சேரவில்லை. எனவே “சீன ஏஜெண்ட்டுகள்” பட்டியலில் நானும் சேர்க்கப்பட்டேன். பொதுவாக இடதுசாரித் தோ ழர்களுக்கும் குறிப்பாக எனக்கும் எதிராக நடத்தப்பட்ட இந்தப் பிரச்சாரத்துக்கு நடுவே கட்சியின் தேசியக் கவுன்சில் கூடி, இந்திய-சீன மோதல் பற்றி விவாதித்தது. மற்ற இடதுசாரித் தோழர்களைப் போல நானும் அதற்கு (வலது சாரிகளின் முடிவுக்கு) உடன்படவில்லை. ஆனால் செயற்குழுவிலிருந்து அந்தத் தோழர்கள் விலகியபோது நான் பொதுச் செயலாளராக நீடித்தேன். இவ்வாறு என்னைச் செய்ய வைத்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், தேசிய அரசியல் பிரச்சனைகளைப் போலவே இந்திய-சீன தகராறுகளிலும் சீன-சோவியத் முரண்பாடுகளிலும் வலதுசாரி களிடமிருந்து முற்றிலுமாக நான் வேறு பட்டிருந்தேன் என்றாலும்கூட இடதுசாரிகளின் நிலையையும் என்னால் நூற்றுக்கு நூறு ஒப்புக் கொள்ள முடியவில்லை. இரண்டாவது காரணம், தேசியக் கவுன்சி லில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் வன்மையாக எதிர்த்த காரணத்திற்காக ராஜி னாமா செய்வது முறையாக இருக்காது என்று நான் நினைத்தேன்.எனது சொந்தக் கருத் தைப் பதிவு செய்த பிறகு பெரும்பான்மை முடி வுக்குக் கட்டுப்பட்டு அதையே நடைமுறைப் படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் என்ற ஒரு கட்டுப்பாடு உணர்வுக்கு நான் ஆட்பட்டி ருந்தேன். இவ்வாறாக இடதுசாரிகள் எவரும் இல்லாத முழுக்க முழுக்க வலதுசாரிகள் மட்டுமே இருந்த ஒரு செயற்குழுவின் தலை மைப் பொறுப்பில் சம்பிரதாயப்பூர்வமாக நான் தொடர்ந்து இருந்தேன்.
சுயமரியாதைக்குப் பங்கம்
இந்த நிலைமை இரண்டு மாதங்களுக்குத் தான் நீடித்தது. இடையே, எனது சுயமரியாதை க்குப் பங்கம் விளைவித்த மூன்று முக்கிய சம்பவங்கள் நடந்தன. முதலில், தேசியக் கவுன்சில் தீர்மா னத்தை விளக்கி (மற்ற நாடுகளின்) சகோதரக் கட்சிகள் அனைத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பு வது என செயற்குழு முடிவு செய்தது. அதில் நான் மாறுபட்டேன். பொதுச் செயலாளர் என்ற முறையில் கடிதத்தில் நான் கையெழுத்திட் டாக வேண்டும் என அவர்கள் வற்புறுத்தி னர். நானும் அவ்வாறு கையெழுத்திட்டேன். (அவ்வாறு நான் செய்திருக்கக் கூடாது என்பதை இங்கு நான் சுயவிமர்சனத்தோடு குறிப்பிட்டாக வேண்டும். எந்தக் காரணத்திற்கா கவும் நான் அதில் கையெழுத்திடப் போவ தில்லை என்றும், தலைவர் என்ற முறையில் டாங்கே கையெழுத்திடட்டும் என்றும் நான் அவர்களிடம் சொல்லியிருந்திருக்க வேண்டும்). இரண்டாவதாக, பொதுச் செயலாளர் என்ற முறையில் மட்டுமின்றி ‘நியூ ஏஜ்’ பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையிலும், சுமார் ஆயிரம் தோழர்கள் கைது செய்யப் பட்டதை விமர்சித்து ஒரு தலையங்கம் எழுதி யிருந்தேன். இதை வெளியிடுவதில்லை என்று ஆசிரியர் குழு முடிவு செய்தது. மூன்றாவதாக இதையெல்லாம் நியாயப் படுத்திய டாங்கே. “நீர் அல்ல உண்மையான பொதுச் செயலாளர்; நீர்வெறும் பொம்மை தான். நாங்கள்தான் எல்லாவற்றையும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். அதற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மற்ற இடதுசாரி தோழர்க ளைப் போல நானும் ராஜினாமா செய்திருக்க வேண்டுமென்பதை உணர்ந்து கொண்டேன். எனது ராஜினாமா கடிதத்தை எழுதினேன். அந்தக் கடிதம் எனது தத்துவார்த்த நிலை பாட்டிலிருந்து சர்வதேச-தேசிய அரசியலின் பல்வேறு பிரச்சனைகளை மதிப்பீடு செய்த ஒரு நீண்ட ஆவணமாக இருந்தது. வறட்டுச் சூத்திரவாதமும் திருத்தல்வாதமும் அந்த ஆவணம், வலதுசாரிகளின் அரசி யல் மற்றும் ஸ்தாபன அணுகுமுறைகள் காரணமாக கட்சி உடையப்போகும் நிலை மையின் விளிம்பில் நிற்கிறது என்று அப்பட்டமாக, தயக்கமேதுமின்றிக் கூறியது. நூறு பக்கங்களுக்கு மேல் வந்த அந்த ஆவ ணம். ‘இந்திய கட்சியில் வறட்டுச் சூத்திரவாத மும் திருத்தல்வாதமும்’ என்ற தலைப்பில் ஒரு பிரசுர வடிவில் தேசியக் கவுன்சில் உறுப்பினர்க ளிடையே விநியோகிக்கப்பட்டது. சுயவிமர்ச னத்தோடு இப்போது திரும்பிப் பார்க்கும்போது இன்று தவறானவைகளாகத் தெரியும் பல விஷயங்கள் அந்த ஆவணத்தில் இருந்தன’ என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதன் பொதுவான முடிவுகள் சரியான வையாகவே இருந்தன. இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் பிரிந்து நின்ற தோழர்கள் முறையே வறட்டுச் சூத்திரவாதத்திற்கும் திருத்தல்வாதத்திற்கும் பலியானவர்களாக இருந்தனர். அந்த இரண்டு போக்குகளுக்கும் எதிராக நான் என் னால் முடிந்த வரையில் போராடிக் கொண்டி ருந்தேன். லெனின் சொன்னதைப் போல-இடதுதிரிபு, வலது திரிபு ஆகிய இரண்டுமே ஒன்றுக்கொன்று உதவி செய்வதேயன்றி முரண்பட்டவை அல்ல. எனக்குத் தெரிந்த அடக்கமான வழியில் அந்த இரண்டையும் எதிர்த்து நான் போராடி வந்தேன். உதாரண மாக, 1960இல் கூடிய 6ஆவது அகில இந்திய மாநாட்டில் நான் ஒரு ஆவணத்தை சமர்ப்பித் தேன். இடது-வலது ஆகிய இரு சாராரின் ஆவணங்களுடனும் உடன்படாததாக அது இருந்தது. அதே நிலைமை 1963ஆம் ஆண்டி லும் நீடித்தது. இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி யாக வேண்டும். 1960ஆம் ஆண்டிலும் சரி, 1963ஆம் ஆண்டிலும் சரி, அதற்குப் பின்பு 1964இல் நடந்த 7ஆவது மாநாடு வரையி லான காலத்திலும் சரி-இடதுசாரிகளின் நிலையை விட வலதுசாரிகளின் நிலையை யே நான் அதிகமாக எதிர்த்து வந்தேன். அத னால் தான் 1962இல் பொதுச் செயலாளர் பத விக்கு எனது பெயரை இடதுசாரித் தோழர் கள் முன்மொழிந்தனர். டாங்கேயைத் தலைவ ராக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு மட்டுமே வலதுசாரிகள் அதை ஏற்றனர். டாங்கே பச்சையாகச் சொன்னது போல அவர் கள் என்னை ஒரு பொம்மையாக வைத்துக் கொண்டு தங்களது கொள்கைகளை மட்டுமே நிறைவேற்றிக் கொண்டார்கள்.
வலதுசாரிகள் கோரிக்கை
அதனால்தான் 1962இல், மற்ற இடதுசா ரித் தோழர்களைப்போல நானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, ஒரே வாரத்தில் விடுதலை செய்யப் பட்டேன். மற்ற தலைவர்கள் சிறைக் காவலில் இருந்தபோது, என்னை மட்டும் விடுதலை செய்யுமாறு வலதுசாரித் தலைவர்கள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டனர். அப்போது சீன-எதிர்ப்பு நிலை பற்றி சகோதரக்கட்சிக ளுக்கு விளக்குவதற்காக டாங்கே வெளி நாட்டுப் பயணம் மேற் கொள்ளவிருந்தார். அந்த விளக்கத்துக்கு அடிப்படையான கடிதத்தில் கையெழுத்திட்ட நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அது பற்றி சகோதரக் கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்வது டாங்கேக்கு சங்கடமாக இருக்கும் என்பதால்தான் வலதுசாரி தலைவர்கள் என்னை விடுதலை செய்துவிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டனர்.
ஆவணக் காப்பகத்தில் ஒரு தகவல்
இதனிடையே, வலதுசாரிகளுக்கும் இடது சாரிகளுக்கும் இடையேயான மோதலைக் கூர்மையாக்கிய ஒரு சம்பவம் நடந்தது. மத்திய அரசின் ஆவணக் காப்பகத்தில் ஒரு விண்ணப்பக் கடிதம் இருப்பதாகவும், அது வலதுசாரிகளின் தலைவரான எஸ். ஏ. டாங்கேயால் 1920 ஆம் ஆண்டு சிறையிலி ருந்து (தன்னை விடுவிக்கக் கோரி) பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பம் என்றும் ஒரு தகவல் வந்தது. அந்தத் தகவல் உண்மையானது தான் என்றால், சாதாரண தேசியவாதிகளிடையே கூட அவருக்கு மரி யாதை கிடைக்காது: கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இடதுசாரித் தோழர்கள் சிலர் அந்தத் தகவல் உண்மை தானா என்று உறுதிப்படுத்துவதற்காக ஆவ ணக்காப்பகத்துக்குச் சென்றனர். அது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு திரும்பி வந்தனர். இந்தப் பிரச்சனை கட்சியின் தேசியக் கவுன்சிலில் கிளப்பப்பட்டது. இதைப்பற்றி விவாதிக்கும் போது, அந்தக் கூட்டத்திற்கு டாங்கே தலைமை தாங்கக் கூடாது என்று கோரப்பட்டது. டாங்கே அந்தக் கோரிக்கையை நிராக ரித்தார். அதை எதிர்த்து 32 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்தனர். அவ்வாறு வெளிநடப்புச் செய்தவர்களைக் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யும் ஒரு தீர்மானத்தைக் கூட்டத்தில் மீத மிருந்த மெஜாரிட்டி உறுப்பினர்கள் நிறை வேற்றிக் கொண்டனர். வெளிநடப்புச் செய்த வர்கள் போட்டி தேசிய கவுன்சில் ஒன்றையும் போட்டி நிர்வாகக் குழு ஒன்றையும் அமைத்துச் செயல்பட ஆரம்பித்தனர். இதன் வளர்ச்சிக் கட்டமாகவே ஏழாவது அகில இந்திய மாநாடு கூடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவெடுத்தது.
இந்திய நிலைமைகள் பற்றி ஒரு ஆய்வு முயற்சி
என்னைப் பொறுத்தவரையில் முழுக்க முழுக்க இடதுசாரிப் பார்வையையோ அல்லது வலதுசாரிப் பார்வையையோ சார்ந்திராமல் நான் ஒரு சுயேச்சையான நிலையையே எடுத்திருந்தேன் எனமுன்னர் குறிப்பிட்டேன். இந்த நிலைபாட்டிலிருந்து, இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளையும், அரசி யல் பிரச்சனைகளையும் பற்றி ஆய்வு செய்யும் முயற்சி ஒன்றை நான் மேற்கொண்டேன். அதன் பலனாக, 1966இல் ஒரு ஆங்கிலப் புத்தகம் வெளியானது. அதில், காங்கிரஸ் கட்சி தனது ஆவடி மாநாட்டில் அறிவித்த ‘சோசலிச பாணி’ லட்சியத்தின் பொருளாதார அம்சங்களையும் அரசியல் அம்சங்களையும் நான் பரிசீலித்திருந்தேன். அந்த ஆய்வில் செய்த முடிவுகளின் அடிப்ப டையில்தான் நான் 1964 நடந்த 7ஆவது அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கட்சித் திட்டத்தின் நகலுக்கு சில திருத்தங்க ளைக் கொண்டு வந்தேன். அவற்றில் பல நிராக ரிக்கப்பட்டன என்றபோதிலும் சில திருத்தங் கள் ஏற்கப்பட்டன. இடதுசாரிகளின் நிலைபாட் டில் எனக்கிருந்த கருத்துவேறுபாடுகள் அநேகமாக அத்தோடு நீங்கின. இடதுசாரிக ளால் அமைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னால் சேரமுடியும், பிளவுபடாத கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்தது போல இதிலும் வேலை செய்ய முடியும் என்ற கட்டத்துக்கு நான் வந்தேன்.
புதிய கட்சியின் தன்மை
இக்கட்டுரையை முடிப்பதற்கு முன்னதாக ஏழாவது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தத்து வார்த்த நிலைகள் குறித்தும் கொள்கை நிலை கள் குறித்தும் சில உண்மைகளைத் தெளிவு படுத்தியாக வேண்டும். அப்போதுதான் புதிய கட்சியின் தன்மை தெளிவாகப் புலப்படும். அதையே இப்போது நான் செய்து கொண்டி ருக்கிறேன். 1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப் பட்டது மாவோயிச தத்துவார்த்த அடிப்படை யில்தான் என்று சிபிஐ தோழர்கள் அன்றும் சொன்னார்கள். இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை யென்றால், ஏழாவது மாநாட்டில் சீனக் கட்சியுடன் உடன்படுகிற ஒரு ஆவணத்தை நிறைவேற்றியிருக்க மாட்டோமா? (சிபிஐ கட்சியின் ஏழாவது மாநாட்டில், சோவியத் கட்சியின் நிலைக்கு ஆதரவான ஒரு ஆவணம் அங்கீகரிக்கப்பட்டது). ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் உலக அரசி யல் தொடர்பாக எந்தத் தீர்மானமும் நிறை வேற்றப்படவில்லை. அதன் மீதான விவாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2) தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், 1951ஆம் ஆண்டின் திட்டத்தில் உள்ளபடி, ‘மக்கள் ஜனநாயகம்’ என்பதே மார்க்சிஸ்ட் கட்சித் திட்டத்தின் மையமான கோஷமாகும். எனினும், மக்கள் ஜனநாயக இயக்கத்தின் பகுதியாக, கட்சியானது தேர்தல்களில் பங்கெடுப்பதோடு மட்டுமின்றி பெரும்பான் மை கிடக்கிற இடங்களில் அரசுகளையும் அமைக்கும். அல்லது மற்ற எதிர்க்கட்சிகள் அரசு அமைக்குமானால் அதற்கு ஆதரவும் அளிக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள் ளது. அதே சமயத்தில் நாடாளுமன்றப் பணி கள் மூலமாகவே சோசலிசத்தை அடைந்து விடலாம் என்ற சமூக ஜனநாயகக் கோட் பாட்டைக் கட்சி நிராகரித்தது. புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதில் நாடாளுமன்றப் பணி யையும் தேர்தல் அரசியலையும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மார்க் சிய-லெனினிய நிலையில் கட்சி உறுதியாக நின்றது. 3) வலதுசாரிகளுடன்தான் பிரதானமான மோதல் இருந்துவந்தது என்பதால் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சந்திக்க வேண்டியி ருந்த தலையாய சவால் திருத்தல்வாதத்திலி ருந்து வரும் சவாலாகவே இருந்தது என ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏழாவது மாநாட்டிலும் அந்த நிலை நீடித்தது. மாநாட்டில் கொண்டுவரப்பட்ட அரசியல் அறிக்கையின் தலைப்பு “ திருத்தல் வாதத் திற்கு எதிரான போராட்டம்” என்று தரப்பட்டி ருந்தது. திருத்தல்வாதத்துக்கு எதிராக போ ராடுகிற அதே நேரத்தில் தனிக்குழு வாதத்து க்கு எதிரான போராட்டத்தையும் கட்சி தொடர்ந்து நடத்தியாக வேண்டுமென்றும் அந்த அறிக்கை தெளிவாகக் கூறியது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அந்த அறிக்கை, தனிக்குழுவாதம் இரண்டு வகை களில் வெளிப்படுகிறது என சுட்டிக்காட்டி யது. ஒன்று ஆளும்கட்சியான காங்கிரசின் பின்னால் அணி திரண்டுள்ள கோடிக்கணக் கான மக்களை அது காண மறுக்கிறது. இன் னொன்று முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் பின்னால் உள்ள பெரும் மக்கள் கூட்டத்தை யும் அது பார்க்கத் தவறுகிறது. ஆளும் காங்கி ரஸ் கட்சியின் பின்னாலும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் பின்னாலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொழிலாளி வர்க்கத்தின் பால் ஈர்ப்பதற்கான ஒரு இலக்குத்திட்டமும் (strategy-யுத்த தந்திரம்), நடைமுறை உத்திகளும் (tactics) வகுக் கப்பட வேண்டும் என்பது இதன் அர்த்தம். 4) இதன் அடிப்படையில்தான், கேரள இடைத் தேர்தல்களுக்கான நடைமுறைக் கொள் கைகள் தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மா னத்தை 7ஆவது மாநாடு நிறைவேற்றியது. காங்கிரசைத் தோற்கடிப்பதற்காக, காங்கிரசி லிருந்து பிரிந்து வந்தவர்களால் அமைக்கப் பட்டிருந்த கேரள காங்கிரஸ் கட்சியோடும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சியாக மக்களை அணுகிய முஸ்லிம் லீக் கட்சியோ டும் வரம்புக்கு உட்பட்ட உடன்பாட்டிற்குக் கட்சி வரவேண்டும் என்று கேரளத் தோழர் கள் கூறினர்; அந்த இரண்டு கட்சிகளின் முத லாளித்துவ எதிர்க்கட்சித் தன்மையை முற்றிலும் மனதில் வைத்துக் கொண்டு-கேரளத் தோழர்களின் அந்த நிலையை மாநாடு அங்கீகரித்தது. பிளவுபடாத கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தபோது நான் தயாரித்த “வறட்டுச் சூத்திரவாதத்துக்கும் திருத்தல்வாதத்துக்கும் எதிராக” என்ற பிர சுரத்தில் விளக்கப்பட்டிருப்பது போல், ஒரு இரட்டைப் போராட்டத்தை நடத்துகிற கட்சியாக இந்திய கம்பூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்னை உருவாக்கிக் கொண்டது என்பதையே இவையனைத்தும் காட்டுகின்றன.