கடன் தரும் செயலிகள் மூலமாக நடைபெற்றுவரும் மோசடிக் குற்றங்களுக்கு (loan app crimes) பலியாகி, பலர்தங்கள் இன்னுயிரைஇழந்து வருகிறார்கள் என்றும் இதனைத்தடுக்க
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் வலியுறுத்தினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் செவ்வாயன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் ஏ.ஏ. ரஹீம் இதுதொடர்பான பிரச்சனையை எழுப்பிப் பேசினார். அவரது பேச்சின் சாராம்சம்:
சமீபத்தில் நாட்டில் கடன்தரும் செயலிகளின் கீழ் நடைபெறும் குற்றங்கள் (loan app crimes) கணிச மான அளவிற்கு அதிகரித்திருக்கின்றன. மொபைல் போன்கள் மூலமாக விரைவாகவும் எளிதாகவும் கடன்கள் வழங்கப்படுவதன் மூலம் இந்த மோசடி நட வடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இது மாறியிருக்கிறது. எப்படி இந்தக் கடன் செயலிகள் மூலமாக மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இதற்குக் காரணங்கள் என்ன?
இளைஞர்களுக்கு கடன்தர மறுக்கும் வங்கிகள்
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், வாழ்க்கைச் செலவும் உயர்ந்து வருகிறது. விவசாயி கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது அவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட எந்தவொரு வங்கியும் சாமானிய மக்களுக்கு கடன் வழங்குவதில்லை. அதே சமயம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகையை கொடுக்கத் தயங்குவதில்லை.
இவ்வாறு வங்கிகளிடம் சாதாரண மக்கள் கடன்பெற முடியாத நிலையைப் பயன்படுத்தி, அவர்களிடம் ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் பெரும் தொகையை சுரண்டுகின்றன. நாட்டில் கடன் செயலிகள் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்றிய அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் ஆகும்.
அவமானத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் மக்கள்
கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவோரின் நிலை மிகவும் பரிதாபமானவை. அவர்கள் கடனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில், மாபியா பேர்வழி களால் பல்வேறு வடிவங்களில் மிரட்டப்படுகின்றனர். பயனரின் படங்களை மார்பிங் செய்து மிரட்டுகின்ற னர். இதன் காரணமாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். இதில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. இதனை ஒன்றிய அரசாங்கம் எப்படி எதிர்கொள்கிறது என்றால், அதன் பதில் ‘அமைதி’ என்பதாகவே இருக்கிறது.
சிறு கடன்கள் கிடைக்க ஏற்பாடுகள் தேவை
எனவே, பொதுத்துறை வங்கிகள் மூலமாக சிறு கடன்கள் வழங்குவதற்கான திட்டங்களை அதி கப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். கூட்டு றவுத்துறையை வலுப்படுத்தி, கூட்டுறவு வங்கிகள் மூல மாகவும் கடன் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடன் செயலிகளின் தில்லுமுல்லுகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தில்லுமுல்லு செய்திடும் செயலிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இது இளை ஞர்கள் மற்றும் சாமானியர்களின் உயிர்களைப் பறித் திடும் பிரச்சனையாக இருப்பதால், ஒன்றிய அரசா ங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.