districts

img

ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி: வணிகர்கள் கடையடைப்பு!

நாமக்கல், நவ.30- ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி, மாநில  அரசின் கடை உரிமம்க் கட்டணம், தொழில் வரி மற்றும் சொத்து வரி  உயர்வை கண்டித்து, வெள்ளி யன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிச.1 ஆம் தேதி (இன்று) முதல்  கடைகளின் வாடகைக்கு 18 சதவி கிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் உட் பட அனைத்து வணிகர்களும் பொரு ளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சேவை வரியை கைவிட வேண்டும். மேலும்,  மாநில அரசின் பேரூராட்சி நிர்வாகம்  சார்பில் 2025 – 2026 ஆம் ஆண்டு முதல்  அமல்படுத்தவுள்ள கடை உரிமக்  கட்டணம், தொழில் வரி, சொத்து  வரி உயர்வை கைவிட வேண்டும்  என்பதை வலியுறுத்தி, வெள்ளி யன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்ட னர். அதன்படி, நாமக்கல் மாவட்டத் தில் பரமத்திவேலூர் பேருந்து  நிலையம், சுல்தான் பேட்டை, கரூர் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, பேட்டை சாலை, சந்தைப் பேட்டை உள்ளிட்ட பகுதியில் 200க் கும் மேற்பட்ட கடைகளை வணி கர்கள் அடைத்திருந்தனர். ஆனால், பாலகம், மருந்துக் கடைகள் வழக் கம் போல் திறந்திருந்தன. சேலம் இதேபோன்று, சேலம் மாநகர், செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால்  மார்க்கெட் என மாநகரின் அனைத்து  பகுதிகளிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை  கடைகள் அனைத்தும் இந்த கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.  காலை 6 மணி முதல் மாலை 6 மணி  வரை ஒருநாள் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. இதுகுறித்து வணிகர் கள் கூறுகையில், சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் தொழில் நடத்தி வரும் எங்களுக்கு இது போன்ற வரி விதிப்பால் நாங் கள் வாழ்வதா? இல்லை சாவதா?  என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள் ளோம். மாநகராட்சி நிர்வாகம் தொழில்வரி, குப்பை வரி, சொத்து வரி உள்ளிட்டவை உயர்த்துவதால், தொழில் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, இதுபோன்ற வரி களை உடனடியாக நீக்க வேண்டும்,  என்றனர். ஈரோடு அனைத்து தொழில் வணிக சங் கங்களின் கூட்டமைப்பின் முடி வின்படி, வெள்ளியன்று ஈரோட்டில் வேலை நிறுத்தம் மற்றும் கடைய டைப்பு நடைபெற்றது. இந்த வேலை  நிறுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் கடை கள், தொழில் நிறுவனங்கள், தொழிற் சாலைகள், சர்வீஸ் செக்டார்கள் பங் கேற்றன. மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. சத்தியமங்கலத்திலும், அனைத்து வணிகர் சங்கத்தினர், வியாபாரிகள் வணிக நிறுவனங்க ளுக்கு 18% ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்துள்ள ஒன்றிய அரசுசை கண்டித்து சனியன்று அனைத்து கடைகளையும் அடைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்திய மங்கலம் பேருந்து நிலையம், வடக்கு  பேட்டை, மணிக்கூண்டு, அத்தாணி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாலான கடைகள் அடைக்கபட்டுள் ளது.