india

img

டுவிட்டர் எக்ஸ் தளத்திற்கு மோடி அரசு மிரட்டல் அமித் ஷா பேசிய வீடியோ நீக்கம்

அம்பேத்கரை இழிவுபடுத்தி அமித் ஷா பேசிய வீடியோ தொகுப்புடன் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதி ராக சமூகவலை தளங்களில் ஹேஸ்டேக்குடன் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனால் பதற்றம் அடைந்த மோடி அரசு, அமித்ஷா பேசிய வீடியோவை நீக்க டுவிட்டர் எக்ஸ் தளத் திற்கு மிரட்டல் விடுத் துள்ளது. ஒன்றிய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் டுவிட்டர் எக்ஸ் தலைமையகத்திற்கு,”அமித் ஷாவின் வீடியோ இந்திய சட்டங்களை மீறுவதாக உள்ளது. அதனால் அமித் ஷா பேசிய வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும்” என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

வீடியோக்கள் நீக்கம்

அமித் ஷாவின் வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி தலைவர்களுக்கு டுவிட்டர் எக்ஸ் நிர்வாகம்,”அமித் ஷாவின்  நாடாளுமன்ற வீடியோவை உடனடியாக நீக்க  வேண்டும்” என நோட்டீஸ் அனுப்பி, வீடியோவை நீக்கும் வேலையை துவங்கியுள்ளது. 

ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் இருக்கும் சைபர் கிரைம் (Cyber Crime Coordination Centre) அனுப்பிய நோட்டீஸின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக் கப்படுவதாகவும் பயனர்களுக்கு டுவிட்டர் எக்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.