புதன், டிசம்பர் 2, 2020

tamilnadu

img

இளைஞர் கொலை நீதி் கேட்டு திரண்ட கிராம மக்கள்

தூத்துக்குடி:
சாத்தான்குளம் அருகே சொக் கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35).இவரை, கடந்த 17ஆம் தேதி சிலநபர்கள் காரில் கடத்தி சென்று கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசி சென்றனர். 

இந்த கொலை வழக்கில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்ததையடுத்து இவ்வழக்கு திசையன்விளை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சொக்கன்குடியிருப்பில் சனியன்று மதியம் ஆலயமணி அடிக்கப்பட்டது. ஊர் மக்கள்,செல்வன் மனைவி ஜீவிதா மற்றும்அவரது உறவினர்கள் அங்குள்ள புனித தனிஸ்லாஸ் ஆலயம் முன்புதிடீரென கூடினர். குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட குடும் பத்துக்கு நிவாரணம் மற்றும் அரசுவேலை தர வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை செல்வன் உடலை பெற மாட்டோம் எனக் கூறினர்.
தகவலறிந்து வந்த மாவட்டஎஸ்பி ஜெயக்குமார், வட்டாட்சியர் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

;