காண்பதும், ரசிப்பதும், சுவைப்பதும் பொதுவான மனித உணர்வுகள். இயற்கையிடம் மட்டுமல்ல சக மனிதர்களின் மீதான நேசத்துடன் இணைந்த உணர்வுகளும் கூட! குறிப்பாக பாலின வேறுபாடு காரணமாக வேறுபட்ட வாழ்நிலை கொண்ட ஆண் பெண்களிடையே இயல்பாய் மலரும் ஈர்ப்பு நேசமாக மாற மனிதரை மனிதர் மதிக்கும் குணம் மிகமிக அவசியமாகிறது!ஆனால் நடைமுறையில் ஆண் தன்னை மேலானவனாய் நிறுத்திக் கொண்டு பெண்ணைக் காண்பதால் அவளின் குண மதிப்பு மட்டுமல்ல உயிர் மதிப்பு கூட அவன் கண்ணுக்குத் தெரிவதில்லை!