மோடி அரசாங்கத்தின் 5 ஆண்டுகள். அது முழுமையாக இந்த நாட்டில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் எதிரான ஒரு அரசாங்கமாகவே இருந்தது.ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்த அரசாங்கம் வெளிப்படையாகவே செயல்படத் துவங்கியது. முந்தைய அரசாங்கங்கள் கிடப்பில் போட்டிருந்த தொழிலாளர் விரோதநடவடிக்கைகள் பலவற்றை மிக வேகமாக அமலாக்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரானார்கள். தொழிலாளர்களுடைய சட்டங்களை, போராடிப் பெற்ற உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுதலிக்கக்கூடிய நடவடிக்கைகள் மிக வேகமாகத் துவக்கப்பட்டன.
கடந்த தேர்தலில் கல்விக்காக செலவிடும் நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீதமாக உயர்த்தப்படும் என பாஜக தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்ததும் கல்விக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக கல்விசார் முதலீடுகளுக்கு கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தத் துவங்கியது