மோடி அரசாங்கத்தின் 5 ஆண்டுகள். அது முழுமையாக இந்த நாட்டில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் எதிரான ஒரு அரசாங்கமாகவே இருந்தது.ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்த அரசாங்கம் வெளிப்படையாகவே செயல்படத் துவங்கியது. முந்தைய அரசாங்கங்கள் கிடப்பில் போட்டிருந்த தொழிலாளர் விரோதநடவடிக்கைகள் பலவற்றை மிக வேகமாக அமலாக்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரானார்கள். தொழிலாளர்களுடைய சட்டங்களை, போராடிப் பெற்ற உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுதலிக்கக்கூடிய நடவடிக்கைகள் மிக வேகமாகத் துவக்கப்பட்டன. சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரால் தொழிலாளர் துறையில் தனியாக ஒரு பிரிவை உருவாக்கி மிக வேகமாக அந்த சட்டத் திருத்தங்களை எல்லாம் முன்மொழியத் துவங்கினர். அங்கிருந்து துவங்கி, இந்த நாட்டின் தொழிலையே அழிக்கக் கூடியவையாக தொழிலாளர் சட்ட அமலாக்கப் பிரிவுகள் தான் செயல்படுகின்றன என்பதுபோல ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளைத் துவக்கினார்கள். பிரதமர் மோடி அவர்கள் நேரடியாகவே தொழிலாளர் சட்ட அமலாக்கத்திற்கு எதிராக பேசத் துவங்கினார். ஒவ்வொரு சட்டமாக சட்டத் திருத்தங்கள் முன் மொழியப்பட்டன.
பென்சன் எங்கே?
இது ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் தொழிலாளர்கள் நீண்ட காலமாக முன் வைத்திருக்கிற எந்தகோரிக்கைகளை பற்றியும் கவலைப்படாத அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் இருந்தது. விதிவிலக்காக உடனடியாக ஒரு அறிவிப்பு என்ற முறையில் வருங்காலவைப்புநிதியில் (பிஎப்) பென்சன் பெறக் கூடியவர்களுக்கு 1000 ரூபாய் பென்சன் என்று நாடு முழுவதும் விழாக் கோலத்தில் நடவடிக்கைகள் துவங்கப்பட்டன. கடந்த அரசாங்கம் யுபிஏ 2 காலத்தில் தொழிலாளர்கள் போராடி உருவாக்கிய குறைந்த பட்ச பென்சன் உயர்வு என்பதை மோடி அரசு நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாயும் கிடைக்கவில்லை.
நிரந்தர வேலை முற்றாக ஒழிப்பு
ஒட்டுமொத்த உழைப்பாளி மக்கள் சட்ட திருத்தம்மட்டுமல்ல, வேலை பறிப்பு, காண்ட்ராக்ட் முறை புகுத்தப்படுவது, வெளிப்புற ஒப்பந்த முறை (அவுட்சோர்சிங்) இப்படி பல வகையில் தொழிலாளர்களுடைய நிரந்தர வேலை என்பதே முற்றிலுமாக இல்லை என்று ஆக்கிவிட்ட ஒரு அரசாங்கம்.பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் தொழிலாளர் துறையினுடையஅமைச்சர் அமர்ந்திருக்கக்கூடிய கட்டிடம் உட்பட எங்குமே ஒப்பந்தத் தொழிலாளிக்கு குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கப்படவில்லை.அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்க உரிமைகள் என்பது முற்றாக பறிக்கப்பட்ட கட்சி இது. 1926ம் ஆண்டிலேயே தொழிலாளர் சட்டம் இந்த நாட்டில் கொண்டுவரப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பே 21 ஆண்டுகளுக்குமுன்னதாக, ஆனால் இன்று புதிதாக துவங்கப்பட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் எங்கேயும் அது தமிழகமாகட்டும், மகாராஷ்டிரமாகட்டும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா எந்த மாநிலத்தில் புதிய தொழில்கள் வந்திருக்கிறதோ அங்கெல்லாம் அரசாங்கத் தரப்பில் இருந்து நடவடிக்கை என்ன?
மத்திய அரசு வரிசையாக கொண்டு வந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராக சக்தியாக, மிக சக்தியாக ஒவ்வொரு துறை வாரியாகத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். அதனுடைய விளைவு தான் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம். மோடி அரசை ஆதரிக்கக்கூடிய பிஎம்எஸ் தவிர உள்ளஅனைத்து சங்கங்களும், 2016ல் இரண்டு வேலை நிறுத்தங்கள். ஒவ்வொரு வேலை நிறுத்தத்திலும் தொழிலாளர்களுடைய பங்கேற்பு கூடுதலாக இருந்தது. அந்தஇரண்டு வேலை நிறுத்தங்களுக்குப் பிறகும் அரசு தரப்பிலிருந்து தொழிலாளர்களை அழைத்துப் பேசுவதுஎன்பதைக் கூட செய்யவில்லை.
தொழிலாளர் சட்டங்கள் சிதைப்பு
ஒட்டுமொத்தமாக 44 தொழிலாளர் சட்டங்கள் இருக்கின்றன; இந்தச் சட்டங்களையெல்லாம் திருத்தி, 5 தொகுப்புகளாக மாற்றப்படும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டது. இன்னொரு புறத்தில் தொழிற் பயிற்சி என்ற பெயரால் ஏற்கனவே அப்ரெண்டிஸ் சட்டம் 1961 இருக்கிறது. அதிலே திருத்தங்கள் கொண்டு வந்து எந்த அளவிற்கு வேண்டுமானாலும் பயிற்சியாளர்களை எடுத்துக் கொள்ளலாம்; நிரந்தரத் தொழிலாளர்களுடைய எண்ணிக்கையை விட பன்மடங்கு பயிற்சியாளர்கள் என்கிற ஒரு கேவலமான சூழல் உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக பச்சையாக பகிரங்கமாக ஒரு சுரண்டல்முறையாக அமலாக்குவது என்று துவங்கினார்கள்.
மிக மோசமான சுரண்டல் வடிவங்கள்
இப்போது கடைசியாக ஆட்சிக் காலம் முடிகிறபோது என்ன நிலைமை? ஒரு புறத்தில் பயிற்சியாளர்கள் என்கிற நிலை. இன்னொருபுறத்தில் அவர்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட் என்ற பெயரால் புதிய பல பெயர்களில் சுரண்டல் வடிவங்கள். வேலைவாய்ப்பு நிரந்தரமானது என்பது மறுக்கப்பட்டு ‘குறிப்பிட்ட காலத்திற்கான வேலை இப்போது கடைசியாக ஆட்சிக் காலம் முடிகிற போது என்ன நிலைமை? ஒரு புறத்தில் பயிற்சியாளர்கள் என்கிற நிலை. இன்னொருபுறத்தில் அவர்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட் என்ற பெயரால் புதிய பல பெயர்களில்சுரண்டல் வடிவங்கள். வேலைவாய்ப்பு நிரந்தரமானது என்பது மறுக்கப்பட்டு ‘குறிப்பிட்ட காலத்திற்கான வேலை இப்போது கடைசியாக ஆட்சிக் காலம் முடிகிறபோது என்ன நிலைமை? ஒரு புறத்தில் பயிற்சியாளர்கள் என்கிற நிலை. இன்னொருபுறத்தில் அவர்களுக்கு ஸ்கில்டெவலப்மெண்ட் என்ற பெயரால் புதிய பல பெயர்களில்சுரண்டல் வடிவங்கள். வேலைவாய்ப்பு நிரந்தரமானது என்பது மறுக்கப்பட்டு ‘குறிப்பிட்ட காலத்திற்கான வேலை
தமிழகத்தில் இருக்கக்கூடிய நிலையை எடுத்துக் கொண்டாலும் கூட இன்றைக்கும் நெய்வேலி நெய்வேலியாக இருக்கிறது என்றால் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம். அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் அதற்கு கொடுத்த உதவி. நிச்சயமாக நெய்வேலி பாதுகாக்கப்பட்டதில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுடைய பங்கு நிச்சயமாக உண்டு. ஆனால் சேலம் எஃகாலை இப்போது பெயரளவில் இயங்குகிற நிலைஇருக்கிறது. பங்கு விற்பனை என்பதும் தனியார்மயம் என்பதும் ஆட்சியாளர்கள் தங்களது கொள்கையாக வரிசையாக அமலாக்கியதினுடைய விளைவு இது. அதற்குப்பிறகும் இன்றைக்கும் மிச்சமிருக்கிறது பெல் நிறுவனம். செயில் நிறுவனம். இந்தியாவினுடைய வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை - இவை எல்லாம்பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அதற்குதொழிற்சங்க இயக்கம். வங்கித் துறையில், இன்சூரன்ஸ் துறையில்,பொதுத் துறையில் என்று நடத்திய போராட்டங்களுடைய தொடர்ச்சியாக தொழிலாளர்களும் விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை உணர்ந்து தொழிலாளி - விவசாயி இணைந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி பிரம்மாண்டமான பேரணி தில்லியிலே நடத்தினோம்.
தொழிலாளி - விவசாயி ஒற்றுமை
இது எந்த சூழ்நிலையில் நடந்தது? ஒரு பக்கம் விவசாயிகள் அவர்களுடைய உரிமைகளுக்காக போராடினார்கள். இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். இருவரும் மோடி அரசாங்கத்தால் தாக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து போராட வேண்டுமென்கிற உணர்வோடு அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றோம். அதனுடைய தொடர்ச்சி தான் இந்த ஆண்டு ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெற்ற 48 மணி நேர வேலை நிறுத்தம். மூன்று முறை தேசம் தழுவிய வேலை நிறுத்தங்களும், ஒவ்வொரு துறையிலும் துறைவாரியான போராட்டங்களும் பல ஆயிரக்கணக்கான பெண்கள், பல கோடிக்கணக்கானோரில் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்கள் அல்லது கிசான் மித்ரா என்று பல பெயர்களிலே இருக்கக்கூடிய ஆசிரியர்கள். இவர்களுக்கு ஊதியமில்லை; உரிமைகளில்லை என்கிற முறையில் ஒவ்வொரு துறையினரும் அது கல்வித்துறையாக இருந்தாலும், சுகாதாரத் துறையாக இருந்தாலும் , விவசாயத் துறையாக இருந்தாலும் எல்லா துறைகளிலும் இருக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய கூட்டம்; மிகப் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அவர்கள் ஒவ்வொருமாநிலத்திலும் நாடு தழுவிய முறையிலும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் இந்தியதொழிற்சங்க இயக்க வரலாற்றிலேயே பதிக்கப்படவேண்டிய பக்கங்களாக மாறி இருக்கிறது.
இவ்வளவும் நடந்த பிறகு கடைசியாக தேர்தல் நேரத்தில் முறைசாரா தொழிலாளிகளுக்கு 18 வயதில்இருந்து 60ம் வயதிற்குள் 42 வருடம் 55ரூபாய் ஒவ்வொருமாதமும் செலுத்தினால் 3000ரூபாய் 42 வருடத்திற்குப் பிறகு பென்சன் கிடைக்கும் என்று சொல்லக்கூடிய ஒருமோசடியான வாக்குறுதியை மோடி தருகிறார்.வாக்குறுதி என்று கூட அதைச் சொல்ல முடியாது. காரணம் அது அவ்வளவு பெரிய ஒரு மோசடித் திட்டம்.2014ஆம் ஆண்டு மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாதவர்கள் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் துணை போகக்கூடிய மாநில அரசுகளுடைய பட்டியல். அது ராஜஸ்தானில்இன்று அகற்றப்பட்டிருக்கக் கூடிய பாஜகவினுடைய அரசாங்கம். மத்தியப் பிரதேசத்தில் அகற்றப்பட்டிருக்கக்கூடிய பாஜகவினுடைய அரசாங்கம், அல்லது ஒருகாலத்தில் பாஜகவுக்கு முழுமையாக துணை நின்றஆந்திராவினுடைய அரசாங்கம், அல்லது தெலுங்கானா அரசாங்கம், இவர்களெல்லாம் மத்திய அரசாங்கத்தால் செய்ய முடியாத சட்டத் திருத்தங்களை அவரவர்களுடைய மாநிலத்தில் கொண்டுவந்தார்கள். அதனுடைய ஒரு தொடர்ச்சியாக தமிழகத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தினுடைய அரசாங்கம் தொழிலாளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடியதாக, மத்திய அரசாங்கத்தினுடைய இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் ஒத்துப் போகக் கூடியவர்களாக, அது தொழிலாளியாகட்டும், விவசாயியாகட்டும், மாணவர்களாகட்டும், வியாபாரிகளாகட்டும் இவர்கள் சாதாரண மக்களுடைய உரிமைகளை பறிப்பதற்கு மத்திய அரசோடு சேர்ந்து நின்று அவர்களுக்கு அடிபணிந்து நின்று இன்னும் சொல்லப்போனால் அடிமைகளாக நின்று கூட, செயல்படக்கூடிய ஒரு நிலை தான் தமிழகத்தினுடைய நிலை.
நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?
அதற்கெதிராகத்தான் இன்றைக்கு தமிழகத்தினுடைய இந்த அரசையும், மத்தியில் ஆளுகிற மோடி அரசையும் தொழிலாளர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தினுடைய இறுதிநிலை தான் இன்றைக்கு நடக்க இருக்கக்கூடிய தேர்தல்என்பது. 18ம் தேதி வாக்குச் சாவடிகளுக்கு செல்லுகிற போது இந்த நாட்டினுடைய உழைப்பாளி மக்கள் நிச்சயமாக இந்த ஆட்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். இன்றைக்கு மத்திய அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளுக்கெதிராக எந்த அமைப்புகளெல்லாம் சேர்ந்து தொடர்ச்சியாகப் போராடினார்களோ அவர்கள்தொழிலாளர்களுடைய கோரிக்கை சாசனம் (றடிசமநசள’உhயசவநச) என்று பிப்ரவரி 6ம் தேதி தில்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் உருவாக்கி அந்த கோரிக்கை சாசன அடிப்படையில் நாட்டு மக்களிடையே தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி, தங்களுடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்று அடையாளங்காணுங்கள் என்ற வேண்டுகோளோடு இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது தொழிற்சங்க இயக்கம்.இதில் வெற்றி பெறுவோம் என்கிற முழு நம்பிக்கையோடு தேர்தல் பணியிலே தொழிலாளர்கள் நாடு முழுவதும் களத்தில் நிற்கிறார்கள்.
தொகுப்பு : ஜனனி