தஞ்சாவூர், ஜன.25- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், இந்தியாவை நேசிக்கும் கோடானு கோடி மக்களை தேச துரோகிகள் என்று முத்திரை குத்துகிறார்கள் என க.கனகராஜ் சாடினார். தஞ்சாவூரில் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கருத்தரங்கில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதாவது: சுதந்திரத்திற்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி சிறை சென்றுள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் எவரும் சிறை சென்றதில்லை. சங்பரிவார் அமைப்பின் ஒட்டு மொத்த வரலாற்றில் ஒருவர் கூட சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. ஆனால் இன்றைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங் களை சுதந்திரப் போராட்ட தியாகிகளாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். வாஜ்பாய், அவரது சகோதரர் இருவரை யும் பிரிட்டிஷ் அரசு கைது செய்த போது, வேடிக்கை பார்க்கத் தான் சென்றோம் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வந்தவர்கள். இதுகுறித்து 1998 ல் பிரண்ட்லைன் இதழ் தெளிவாக பிரசுரித்துள்ளது. பிரிட்டி ஷாரை எதிர்த்து சங்பரிவார் அமைப்புகள் ஒரு முறை கூட குரல் எழுப்பியதில்லை. ஆனால் அவர்களை 14 முறை புகழ்ந்து பாராட்டிப் பேசி உள்ளனர். திப்பு சுல்தானை முதலில் வீரன் என பாராட்டிப் பேசிய சங்பரிவார் அமைப்புகள், பிரிட்டிஷார் தலையிட்ட பிறகு தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டனர். மாவீரன் பகத்சிங் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட போது, “நாங்கள் குண்டு வீசியது உண்மை. ஆனால் யாரையும் கொலை செய்யும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அத னால் தான் ஆட்கள் இல்லாத இடத்தில் குண்டு வீசினோம்” என சொன்னார். அவருக்கு பிரிட்டிஷ் அரசு மரண தண்டனை விதித்து, கண்ணில் கருப்புத் துணி கட்டி தூக்கு மேடை யில் நிறுத்திய போது,” எனது கண்ணை மூட வேண்டாம். நான் குற்றவாளி இல்லை. எனது தேசத்தின் விடுதலைக்காக போராடியவன். எனது தேசத்தைப் பார்த்துக் கொண்டே மர ணத்தை தழுவுகிறேன்” என முழங்கினார். இப்ப டிப்பட்ட பகத்சிங்கை மாவீரனாக ஏற்கக் கூடாது என்பவர்கள் பாஜகவினர். பாஜகவினரின் புத்தகங்களை படிக்கும் போது தான் அது முட்டாள்களை உருவாக்கு கிறது என உணரமுடிகிறது. காந்தியை விட சிறந்த ராம பக்தர் இல்லை. கோட்சேவால் சுடப்பட்டு மரணத்தைத் தழுவும் போது கூட “ஹேராம்” என்றவர். அவரை ஏன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கொன்றனர்? கருத்து வேறுபாடு வந்தால் கொலை செய்யவும் தயங்காத மூர்க்கர் களின் கூட்டம் தான் ஆர்எஸ்எஸ். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்க மாட்டோம்; காரணம் அவற்றில் மனுதர்மத்தின் கூறுகள் இல்லை என்றனர். ஜனகனமன என்ற தேசிய கீதத்தை ஏற்கமாட்டோம்; வந்தே மாத ரத்தை தான் ஏற்போம் என்றனர். மூவர்ணக் கொடியை மதிக்க மாட்டோம்; ஏற்கமாட்டோம் என்றனர். இது குறித்து அவர்களது ‘ஆர்க னைசர்’ பத்திரிக்கையில் பகிரங்கமாக எழுதி னார்கள். ஆனால் இன்றைக்கு தேசிய கீதத்தை, தேசிய கொடியை மதிக்கவில்லை எனக்கூறி மற்றவர்களை தாக்குகின்றனர். தங்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை மிக மோசமாக தாக்கி அதை ஏற்க வலியுறுத்து கின்றனர். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. மொழிவாரி மாநிலங் கள் என்பது தேசிய இனங்களின் கூட்ட மைப்பு. ஆனால் இன்றைக்கு ஒரே தேசம், ஒரே சட்டம், ஒரே ரேஷன் கார்டு என கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலம் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு சட்டங்களாக கொண்டு வந்து மாநிலங்களின் உரிமையை அழிக்க முயற்சிக்கின்றனர். பாகிஸ்தானில் மத ரீதியிலான தாக்குதல் உள்ளது என்கிறார்கள். இந்தியாவில் அவ்வாறு இல்லையா? மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று சொல்லியும், ரமலான் பண்டிகைக்காக ரயிலில் சென்றவர்களையும் அடித்துக் கொன்றது முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தானே. இது மத ரீதியான தாக்குதல் இல் லையா? எதிரி முட்டாளாகவும் மூர்க்கத்தன மாகவும் உள்ளான். தந்திரக்காரனாகவும் இருக்கிறான். பொய்யை அப்பட்டமாக பேசுபவனாகவும் இருக்கிறான். இத்தகைய பாசிச சக்திகளை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டிய கட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.