பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் 100கிராம் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்ததால் நீர்ச்சத்து குறைந்து உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றி வந்த இவர் இன்று நாடு திரும்பினார். இவருக்குப் பொதுமக்கள் மற்றும் சக வீரர்கள் கண்ணீர் மல்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.