People's Democracy editorial

img

இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரைவார்க்காதே - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மோடி-2 அரசாங்கம், தனியார்மயம் நோக்கி பாய்ச்சல் வேகத்தில் செல்லக்கூடிய விதத்தில் முடுக்கிவிடப் பட்டிருக்கிறது. ஏற்கனவே, நிட்டி ஆயோக், ஒரு நூறுநாள் நடவடிக்கைத் திட்டத்தின்படி 46 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்திட அல்லது மூடிவிடப் போவதாக அறிவித்திருக்கிறது.