அவிநாசி, ஜன.15- அவிநாசி அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளியில் ஜன.14 முதல் நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக் கும்படி மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தியும், செவ்வாயன்று நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட வில்லை. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பயிற்சி மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் தடை விதித்ததை தொடர்ந்து, கடந்த வாரம் அவிநாசியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரை சந்திப்பது என முடிவு செய் யப்பட்டது. அதன்படி திங்களன்று திருப் பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்கிழமை தைப்பொங்கல் நாளிலிருந்து காலை 5 மணி முதல் 7.15 வரை நடைபயிற்சி மற் றும் விளையாட்டு பயிற்சிக்கு அவி நாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் அனு மதி அளிக்குமாறு மாவட்ட கல்வி துறை அலுவலருக்கு உத்தரவு வழங்கினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் செவ்வாயன்று நடை பயிற்சி மேற் கொள்ள சென்ற போது பள்ளி கதவு பூட் டப்பட்டியிருந்தது. மாவட்ட ஆட்சி யர் உத்தரவை மதிக்காத தலைமை ஆசி ரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் உள் ளிட்டோர் மீது சட்டரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.