திருப்பூர், ஜன.15- கலிலியோ துளிர் இல்லம் மாணவர்கள் செவ்வாயன்று ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ரங்கநாதபுரம் கிளை சார் பில் துளிர் இல்ல மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். இதையடுத்து மாணவர்களுக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஓடக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள அறிவியல் இயக்க மாவட்ட அலுவல கத்திலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் ராம மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கௌரிசங்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.