districts

img

உங்களுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்

ஈரோடு, ஜன. 15- ஆதிக்க சாதியினருக்கு துணை  போகும் அரசு நிர்வாகத்தால் பலி வாங்கப்பட்ட பட்டியலின மக்களை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் ததீஒமு, விதொச உள்ளிட்ட அமைப்பின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தி யூர் வட்டம், நகலூர் கிராமத்திற்குட் பட்டது குண்டுமூப்பனூர். இங்கு சுமார் 80 பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய கூலி தொழிலாளர்களான இப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. தொடர் வலியுறுத்தலுக்கு பின்னர், ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரு விளக்கு அமைக்க மின்கம்பங்கள் நடப்பட்டது, இதனை, அருகிலி ருந்து தோட்டத்தின் உரிமையாளர்  அவ்விடத்தை ஆக்கிரமித்து, மின் கம்பங்களை பிடுங்கி எரிந்துள் ளார். மேலும், தீண்டாமை சுவரை யொத்த மதில் சுவரும் எழுப்பியி ருந்தார். இதனையடுத்து, சர்வே துறை மூலம் உரிய முறையில் அள வீடு செய்யப்பட்டு, எல்லைக்கற் கள் நடப்பட்டதையும் உடைத்துள் ளார். கேள்வி எழுப்பிய பெண் களை ஆத்திரத்துடன் தள்ளி  விட்டார். அவர்கள் மருத்துவமனை  சென்று சிகிச்சை பெற்றனர். இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டு, வன்கொடுமை தடுப் புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய  வலியுறுத்தப்பட்டது. ஆனால், முன் னாள் காவல்துறை அதிகாரியான  அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   இதேபோன்று, மைக்கேல் பாளையம் ஊராட்சியில் பொய் யேரிக்கரை, வையங்குட்டை, க. மேட்டூர், இந்திராநகர் ஆகிய  குடியிருப்புகளும் உள்ளன. இங்கு பெரியார் நினைவு சமத்துவபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. பலதரப் பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதி யில், அவரவர் பயன்பாட்டிற்கென குறிப்பிட்ட இடங்களை மயானமா கப் பயன்படுத்தி வந்தனர். பட்டியலி னத்தவர் பயன்படுத்தும் மயானத் திற்கு செல்ல, தடவழி போக்கு வரத்தில் முரண்பட்ட ஆதிக்க சக்தி கள் சிலர், அந்த இடங்கள் நீர்நிலை  என நீதிமன்றம் சென்று தீர்ப்பு  பெற்றனர். ஆதிக்க சக்திகளுக்கு துணை போன வருவாய்த்துறையி னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் காட்டவில்லை. இத னால் அப்பகுதியில் ஒவ்வொரு மர ணம் நிகழும்போதும், அடக்கம்  செய்யக்கூடாது என தடுக்கின்ற னர். அதையும் மீறி அடக்கம் செய் கின்றனர். அப்போது காவல்துறை யினர் வழக்குகள் பதிவு செய்கின்ற னர். இவ்வாறு போடப்பட்ட வழக்கு களால் க.மேட்டூர், இந்திரா நகர்,  வையங்குட்டையைச் சேர்ந்தவர் கள் பவானி, ஈரோடு தாலுகா காவல்  நிலையங்களுக்குச் சென்று கையெழுத்திட்டு வருகின்றனர். பொய்யேரிக்கரையினரும் இது போன்ற வழக்குகளை எதிர் கொண்டு வருகின்றனர்.  இவ்வாறு சமூகத்தில் அமைதி யின்மையையும், அரசாங்கத்திற்கு கெட்ட பெயரையும் அரசு நிர்வா கம் ஏற்படுத்தி வருகிறது. ஆதிக்க  சக்திகளுக்கு ஆதரவான வரு வாய்த்துறை, காவல் துறை  உள்ளிட்ட அரசு நிர்வாகத்தினைக் கடந்து மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அர சியல் அதிகாரத்தால் பயனில்லை என்று குறை கூறும் நிலை திட்ட மிட்டு உருவாக்கப்படுகிறது.  இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் பி.பி. பழனிசாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, சிபிஎம் அந்தி யூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முரு கேசன், தாலுகா கமிட்டி உறுப்பினர் கள் ஏ.கே.பழனிசாமி. கண்ணன்  ஆகியோர் பாதிக்கப்பட்டவர் களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித் தனர். அடிப்படை பிரச்சனைகள் மற்றும் வழக்குகள் உள்ளிட்ட வற்றிற்கு தீர்வு காண்போம், உங்க ளுடன் உறுதியாக நிற்போம் என்கிற  வாக்கை தலைவர்கள் கொடுத்த னர்.