districts

நவீன மீன் அங்கடி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

நவீன மீன் அங்கடி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை, ஜன. 15- கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில், கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.  8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “நவீன மீன் அங் காடி” மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.  உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நவீன மீன் அங்காடி அமைக்க வேண்டும் என்கிற மீன் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, அதன் கட்டுமானப் பணிகள் துவங்கி,  முடிவுற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கட்டடம் கட்டி முடிக்கப் பட்டும் திறப்புவிழா காணப்படாமல் இருந்து. இதனை யடுத்து மீன் வியாபாரிகள், நவீன மீன் அங்காடியை மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையேற்று திங்களன்று அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.  இதுகுறித்து மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறு கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்சியர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி உறுதியளித்தை போல இடத்தை ஒப்படைத்துள்ளனர். நாங்கள் இரண்டு கோரிக்கை கள் வைத்தோம். அதனையும் செய்து கொடுப்பதாக உத்தி ரவாதம் கொடுத்துள்ளார். இந்த மீன் அங்காடியை நம்பி  1,500 குடும்பங்கள் உள்ளது. இந்தியாவிலேயே சில்லறை  மீன் வியாபார சந்தையை பிரம்மாண்டமாக அமைந்துள் ளோம். அதனை முறையாக பராமரிக்க உள்ளோம் என்ற னர். இந்நிகழ்வில் பங்கேற்ற, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,  தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் நவீன மீன் அங்காடி  திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பார்கிங் வசதிக்கு இடம் ஒதுக்கப்பட்டு, தெருவிளக்கு மற்றும் பல்வேறு பணிகள்  செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் உள்ள மீன் வியாபாரிகள் மட்டுமல்ல நகை வியாபாரிகள் என  அனைத்து தரப்பு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல கோவையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி  மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் இது  வரை கோவையில் மட்டும் ரூ.415 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.  தமிழகத்திலேயே சாலை அமைப்பதற்காக மட்டும் ரூ.615  கோடி நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் முதல் மாநகராட்சி யாக கோவை உள்ளது. உங்களுக்கு என்ன தேவை உள்ளதோ, அத்தனையும் உங்களோடு இருந்து நிறை வேற்றி தருவோம் என்ற உறுதியை கொடுக்கிறோம் என் றார். முன்னதாக இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.