திருப்பூர், ஜன.15- சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதனன்று மாணவ, மாணவிகள் வீடுகளின் முன்பு ரங்கோலியில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதியுள்ளனர். சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதனன்று சிக் கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவி கள் தங்களது வீட்டின் முன்பு வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். இதில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூ டாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். சாலைகளில் சாக சத்தில் ஈடுபடக்கூடாது. வேகமாக செல்லக்கூடாது. போக்குவ ரத்து குறியீடுகளை மதிக்க வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற கருத்துக்களை வலியு றுத்தி கண்கவரும் வண்ணங்களில் ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.