districts

img

யுஜிசி நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்

கோவை, ஜன.15- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் கோவை மாவட்டம் முழுவதும் யுஜிசி நகல்களை எரித்து போகி கொண்டாடினர். பல்கலைக்கழக துணைவேந்தர் நியம னத்தில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற, ஆர்.எஸ்.எஸ். நபர்களை திணிக்கின்ற முயற்சியை கைவிட வேண்டும். மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கின்ற, அர சியலமைப்பு வழங்கியுள்ள கூட்டாட்சி அமைப்புக்கே எதிரான யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். துணைவேந்தர் தேடு தல் குழுவை ஆளுநர் தேர்வு செய்யும்  யுஜிசி யின் அறிவிப்பை திரும்ப பெறு என்ற முழக் கத்தை முன்வைத்து கோவை மாவட்டம் முழு வதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைகளில் செவ்வாயன்று யுஜிசி நகல் எரித்து போகி கொண்டாடினர். எஸ்.எஸ்.குளம் பண்ணாரி அம்மன் நகர்,  பீளமேடு தண்ணீர் பந்தல், சிவானந்தபுரம், சர வணம்பட்டி, இடிகரை, டவுன்ஹால் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யுஜிசி நகல் எரிப்பு போராட்டத்தில் வாலி பர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.தினேஷ்ராஜா, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் முத்து முருகன், பொருளாளர் சுரேஷ், பீளமேடு நகரக் குழு செயலாளர் ஆர்.சக்திவேல், பொருளாளர் எம்.ஸ்ரீதர் உள்ளிட்ட திரளான வாலிபர் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.