நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கிட வலியுறு த்தியும், அடிப்படை வசதி செய்து தரக்கே ட்டும், நன்கொடை என்ற பெயரில் கட்டாய மாக வசூலித்துள்ள ரூ.1000 முதல் 3000 வரையிலான கட்டணத்தை திருப்பி வழங்கிட வலியுறுத்தியும் பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.