tamilnadu

img

மடிக்கணினி கேட்டு போராடிய மாணவர்களை மிரட்டிய ஆளுங்கட்சியினர்

தரங்கம்பாடி ஆக29- நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கிட வலியுறு த்தியும், அடிப்படை வசதி செய்து தரக்கே ட்டும், நன்கொடை என்ற பெயரில் கட்டாய மாக வசூலித்துள்ள ரூ.1000 முதல் 3000 வரையிலான கட்டணத்தை திருப்பி வழங்கிட வலியுறுத்தியும் பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போராட்டத்தின் போது அதிமுகவை சார்ந்த நபர்கள் போராட்டம் செய்த மாண வர்களை டிசி கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும், மாணவர் தலைவர்களை தகாத வார்த்தையில் பேசியும் தாக்க முயன்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் செ.கபிலன், மாவட்டக்குழு உறுப்பினர் தில்லைராஜன், ராகேஷ் சர்மா, அபி, ஆனந்த், மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ மற்றும் சங்க, பள்ளி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.