கிணறு தூர் வாரிய தொழிலாளி விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வடிவேல்(28). ஓங்குப்பம் சாலை அம்பேத் கர் நகரை சேர்ந்தவர் பாரத்(25), பாகர் உசேன் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(27). நண் பர்களான 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.