வெனிசுலாவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனே கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விமானம் விபத்து 2 பேர் உயிரிழப்பு.
வெனிசுலாவின், மிராண்டா மாநிலத்தின் கராகஸ் அருகே உள்ள ஓஸ்வால்டோ குவாயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் சிறிய விமானம் சில நிமிடங்களுக்குள் திடீரென, அருகிலுள்ள புல்வெளி பகுதியில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து உடல்களை மீட்டனர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட தகவல்படி, இயந்திர கோளாறு அல்லது தொழில்நுட்பத் தடை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
