world

img

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு : ஆளும் கட்சி பின்னடைவு?

லண்டன், ஜூலை 4- இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 4 அன்று காலை  7 மணிக்கு துவங்கி உள்நாட்டு நேரப்படி இரவு 10 மணிக்கு வரை நடைபெற்றது

தேர்தலுக்கு முன்பு வெளிவந்த அனைத்து முக்கிய கருத்துக்கணிப்பு களும் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் (பழமைவாதக்கட்சி) கட்சி  பெரும் பின்னடைவை சந்திக்கும் என தெரி வித்துள்ளன. மேலும் கெய்ர் ஸ்டார்ம ரின் தொழிலாளர் கட்சி கடந்த தேர்த லுடன் ஒப்பிடுகையில் 200 இடங்க ளுக்கு மேல் வெல்லும் என கணிக்கப் பட்டது. இது தொழிலாளர் கட்சிக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய பெரும்பான்மையைத் தரும்.

ரிஷி சுனக்கின் ஆட்சியில் சிக்க னம் என்ற பெயரில் பொது திட்டங்க ளுக்கான நிதிகள்  வெட்டப்பட்டன, குறிப்பாக அந்நாட்டு பொது  சுகாதார சேவை (NHS) மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்டது. தொழி லாளர்களின் வேலை நிறுத்த உரிமை, சமூகப் பாதுகாப்பு என அனைத்தும் பறிக்கப்பட்டன. இவற்றுடன் புலம் பெயர்ந்து வரும் மக்களை நாடு கடத்தும் முடிவு உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கைகள், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, அத னால் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடியை சரி  செய்யாமல் விட்டது ஆகிய கார ணங்களால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலை யில்  கன்சர்வேட்டிவ் கட்சி (பழமைவா தக்கட்சி) இந்த தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு மிக குறைவு.

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விலை உயர்வால் மக்களின்  ஊட்டச்சத்து அளவுகள் கவலையளிக்கும் அள விற்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள், குழந்தை கள், பெண்கள் இதனால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சில ஆய்வறிக்கைகள்  வெளியாகியுள் ளன. இந்த மோசமான சமூக சூழலை பயன்படுத்தி  லேபர் பார்ட்டி (தொழிலா ளர் கட்சி) தற்போது முன்னணியில் உள்ளது.

இங்கிலாந்தின் லேபர் பார்ட்டி முழுமையான தொழிலாளர் ஆதரவு கட்சி அல்ல. அக்கட்சி தற்போது தீவிர  முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட கட்சியாகவே மாறிவிட்டது. தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்பியும்  இங்கிலாந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவ ராகவும் இருந்த ஜெர்மி கோர்பின் சிறிதளவு முற்போக்கு மற்றும் பாலஸ்தீன ஆதரவு நபராக இருந்த துடன், அதே வழியில் அக்கட்சியை யும் நடத்தி வந்தார். இந்நிலையில் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சியை அப்பாதையில் இருந்து விலக்கி தீவிர வலதுசாரி ஏகாதி பத்திய ஆதரவு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார். அது மட்டுமின்றி கோர்பின் உட்பட  அக்கட்சியில் இருக்கும் ஓரளவு முற்போக்கு கொள் கையுடைய எம்.பி,க்கள் அனை வரையும் தேர்தலில் போட்டியிட விடாமல் நீக்கியதுடன் செயல்பட முடியாத வகையில் வைக்கப் பட்டுள்ளனர்.

;