world

img

‘விக்கிலீக்ஸ்’ மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்திய போராளி ஜூலியன் அசாஞ்சே விடுதலை

லண்டன்,ஜூன் 25- அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் நடத்திய போர்க்குற்றங்களை  ‘விக்கிலீக்ஸ்’  ஆவணங்கள் மூலமாக உலகிற்கு அம்பலப்படுத்திய ஜூலியன் அசாஞ்சே, 1,901 நாட்கள் கொடிய  சிறை வாசத்துக்குப் பிறகு  ஜூன்  24 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஏகாதி பத்தியம் மேற்கொண்ட போர்க்குற்றங் களையும், மனித விரோத நடவடிக்கைகளை யும் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ வின் ஆவணங்கள் மற்றும் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஹிலாரி கிளிண்டனின் ரகசிய மின்னஞ்சல்கள் ஆகி யவற்றைக் கையகப்படுத்தி, வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இது உலகம் முழு வதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தங்களது ரகசியத்தை வெளிப்படுத்திய அசாஞ்சேவை பழி வாங்கும் நோக்கில் அமெரிக்கா அவரை கைது செய்ய முயன்று வருகிறது. மேலும்  அவர் மீது பொய்யான பாலியல் குற்றவழக்கு களை பதிவு செய்தது உட்பட பல சூழ்ச்சி களையும்  கையாண்டது. எனினும் அவரை  கைது செய்ய முடியவில்லை. நிகரகுவா உள்ளிட்ட நாடுகள் அவருக்கு தஞ்சம்  அளித்தன. பின்னர் இங்கிலாந்து மூலமாக  சர்வதேச குற்றம்சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தற்போது  ஜாமீன் பெற்ற அசாஞ்சே, பெல்மார்ஷ்  சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

மனிதகுலத்திற்கு எதிரான கொடூரமான போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி யதற்காக நியாயத்திற்கு புறம்பாக  துன்புறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறை யில் வைக்கப்பட்ட அசாஞ்சேவின் நியாய மான சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என இந்த விடுதலையை சர்வதேச அளவில் இடதுசாரிகளும் முற்போக்கா ளர்களும் வரவேற்றுள்ளனர்.