- ரஷ்யா விடுவித்த உக்ரைன் பகுதியான டோனெட்ஸ்க் மாநிலத்தில் உக்ரைன் போர்க் கைதிகள் இருந்த சிறையை உக்ரைன் ராணுவம் அமெரிக்கா தந்த சிறு ஏவுகணைகள் மூலம் தாக்கியதில் 40 பேர் மரணம். தன் சொந்த நாட்டை சேர்ந்த போர்க்கைதிகளை உக்ரைன் தாக்குவது ஏன் எனும் கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
- ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை ஐரோப்பா தடை செய்வது சாத்தியம் அல்ல என ஆஸ்திரியா நாட்டின் ஜனாதிபதி காரல் நெஹமர் கூறியுள்ளார். ரஷ்ய நிதி பிரச்சனையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க வங்கிகள் சரியாக செயல்படவில்லை என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
- தங்களுக்கு தரும் உதவிகள் போதாது என்றனர்; ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் இன்னும் தேவை என்றனர்; இப்பொழுது வங்கிகளை குற்றம் சாட்டுகின்றனர்.
- உக்ரைன் மேற்கத்திய நாடுகளுக்கு கட்டளையிட முயல்கிறதா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். உக்ரைனுக்கு நாம் 65 பில்லியன் டாலர்கள் போருக்கு நாம் தந்து கொண்டிருக்க ஜெலன்ஸ்கி ஆடம்பர புகைப்படங்கள் எடுப்பதில் பொழுதை கழிக்கிறார் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பி னர் லாரன் போபெர்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
- விலைவாசி உயர்வையோ அல்லது கோவிட் பரவுவதை பற்றியோ கவலைப்படாமல் அமெரிக்க மக்கள் உக்ரைனுக்காக தியாகம் செய்ய வேண்டும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். போரில் வெல்லும்வரை இந்த தியாகம் தொடரவேண்டும் எனவும் கூறியுள்ளார். இத்தகைய தியாகங்களுக்கு ஒரு எல்லை உண்டு என்பதை ஜெலன்ஸ்கி உணர வில்லை போலும்!
- அமெரிக்க மக்கள் தமது வாழ்க்கை பற்றி அதிகமாக கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர்களில் பெரும்பாலோர் உக்ரைன் போர் குறித்து கவலைப்படவில்லை எனவும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
- தான் இழந்த பகுதியான செப்பரோசியே எனுமிடத்தில் உள்ள அணு மின்நிலையத்தை தாக்க உக்ரைன் முயல்கிறது என ரஷ்யா குற்றம்சாட்டி யுள்ளது.
- இந்த போரில் உள்ள ஆபத்தே இதுதான்! ஒரு சிறு தவறு அல்லது ஆத்திரம் கூட அணு ஆயுத போருக்கு இட்டுச் சென்றுவிடும்.